Saturday 18 September 2021

இந்திய ஒரு ரூபாய் நோட்டு

100 ஆண்டுகளுக்கு மேலாக அதே மதிப்பில் வெளியிடப்படும் ஒரு நோட்டு என்பது இந்திய ஒரு ரூபாய் நோட்டின் தனிச்சிறப்பு.

ஒரு ரூபாய் நோட்டின் மற்றொரு சிறப்பு, மற்ற நோட்டுகளை போல் இந்த நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடாது. ரூபாய் நோட்டு இந்திய அரசு வெளியிடும் நோட்டு. அதில் கையெழுத்திடுபவர் இந்திய நிதித்துறை செயலாளர். விநியோகம் ரிசர்வ் வங்கி மூலமாகவே நடைபெறும்.

முதன் முறையாக பிரிட்டிஷ் காலத்தில் 1917 ஒரு ரூபாய் நோட்டு வெளியிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, உருது, தேவநகரி, ஒடியா, பெங்காலி ஆகிய எட்டு மொழிகளில் ஒரு ரூபாய் என்று எழுதியிருந்தது அந்த ஒரு ரூபாய் நோட்டில்.

அதில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் படம் இடம் பெற்றிருந்தது.

1917 நோட்டில் கையெழுத்திட்டவர்கள், எஸ். துப்பே, ஏ.சி. மெக்வாட்டர்ஸ் மற்றும் எச். டென்னிங்.

1935 நோட்டில் கையெழுத்திட்டவர் ஜே. டபிள்யு. கெல்லி.

1940 நோட்டில் கையெழுத்திட்டவர் சி.பி. ஜோன்ஸ். இது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் படம் இடம் பெற்றிருந்தது.

சுதந்திரத்துக்கு பின் 1949-1950ல் வெளியிடப்பட்ட நோட்டில் கேஆர்கே மேனன் கையெழுத்திட்டு இருந்தார்.

1951 நோட்டில் கையெழுத்திட்டவர் கேஜி. அம்பேகானோன்கர் மற்றும் எச்எம். பட்டேல்.

1957 நோட்டில் கையெழுத்திட்டவர் ஏகே.ராய் மற்றும் எல்கே.ஜா.

1963 நோட்டில் கையெழுத்திட்டவர் எல்.கே.ஜா

எஸ்.பூதலிங்கம் 1963, 1964,1965, 1966 &1967 நோட்டுகளில் கையெழுத்திட்டார்.

எஸ்.ஜெகன்னாதன் 1967, 1968 நோட்டுகளில் கையெழுத்திட்டார்.



1969ல் காந்தி நூற்றாண்டை முன்னிட்டு காந்தி படத்துடன் வந்த நோட்டில் ஐ.ஜி பட்டேல் கையெழுத்திட்டார்.

அதற்கு பிறகு கையெழுத்திட்ட நிதித்துறை செயலாளர்கள் பட்டியல்

1968, 1969, 1970, 1971, 1972 - ஐ.ஜி. பட்டேல் 

1973, 1974, 1975, 1976 - கே.ஜி. கவுல் 

1976, 1977, 1978, 1979, 1980 - மன்மோகன்சிங் (முன்னாள் பிரதமர்)

1980 , 1981 - மல்கோத்ரா 

1983, 1984, 1985 - பிரதாப் கிஷன் கவுல் 

1985, 1986, 1987, 1988, 1989 - வெங்கிடரமணன் 

1989 - கோபி கே ஆரோரா 

1990 - பிமல் ஜலான் 

1991 - புஹ்லா 

1991, 1992, 1993, 1994 - மோண்டக் சிங் அலுவாலியா. 

1994க்கு பின் நிறுத்தப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு மீண்டும் 2015 ல் தொடங்கப்பட்டது.


 தற்போதைய நோட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கனி, நேபாளி, ஒடியா, குஜராத்தி, சமஸ்கிருதம், காஷ்மீரி, மராத்தி, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, உருது ஆகிய பதினைந்து மொழிகளில் ஒரு ரூபாய் என்று எழுதப்பட்டுள்ளது.

2015 - ராஜீவ் மெகஸ்ரிஷி

2016 - ரத்தன் பட்டேல் 

2017 - சக்தி கந்ததாஸ் 

2018 & 2019 - சுபாஷ் ஹார் 

2020 - ஆலம் சக்ரபோர்தி.

 1981ல் வடிவமைப்பில் பெரிய மாற்றமும், 1983ல் சிறிய மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் புதிய ஒரு ரூபாய் 2020ல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

படங்கள் : எனது சேகரிப்பு








Sunday 5 September 2021

வாடிவாசல்

50களில் எழுதப்பட்ட குறுநாவல். சி.சு. செல்லப்பா மாட்டுக்கும் மனிதனுக்குமான வீர விளையாட்டை பற்றி எழுதியுள்ளார். 

ஒரு ஐயர் வீட்டில் பிறந்து அவர் ஜல்லிக்கட்டின் நுட்பங்களை எப்படி தெரிந்து கொண்டார் என்பதே வியக்க வைக்கிறது.

திமிறி ஓடும் மாடு, அதன் மேல் பாயும் மனிதர்கள் என டிவியில் பார்க்கும் ஜல்லிக்கட்டில் எவ்வளவு நுட்பம் உள்ளது என்பதை சொல்கிறது வாடிவாசல்.


மாட்டுக்கும் மனிதனுக்குமான வெற்றி, சுதாரித்து கொள்ளும் சில விநாடிகளில் தான் உள்ளது என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறார்.

இந்த கால எழுத்தாளர்களுக்கு இவ்வளவு நுட்பம் தெரிந்திருந்தால் இரண்டாயிரம் பக்க நாவலை எழுதி இருப்பார்கள். 

சி.சு. செல்லப்பா, தேவையற்ற வர்ணனைகள் எதுவும் எழுதவில்லை, கிளைக் கதைகளையும் எழுதவில்லை. ஜல்லிக்கட்டு களத்தில் நடப்பவை பற்றி மட்டுமே சொல்லியுள்ளார்.

ஒரு பரபரப்பான கிரிக்கெட் பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகிறது வாடிவாசல். 

பிச்சி, மருதன், கிழவன், காரி, ஜமீன்தார் இவர்களை வைத்து வாடிவாசலிலே முழுக்கதையும் நடப்பது போல் எழுதியுள்ளது சிறப்பு. 

காரியின் மூச்சு காற்று எப்படி உள்ளத்தென்றும், பிச்சி அதன் கொம்பில் ரத்தத்தின் வாசத்தை உணர்கிறான் என்றும் மண்வாசனை நிரப்புகிறார் சி.சு.செல்லப்பா


மதிப்பிற்குரிய ஆசிரியர்கள்

பள்ளி முதல் கல்லூரி வரை எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் பட்டியல். 

ஒன்றாம் வகுப்பு - மூன்றாம் வகுப்பு 

திரு. மா. சுப்பையா - [எனது தந்தை] 


நான்காம் வகுப்பு

திருமதி. ஜெயலட்சுமி


ஐந்தாம் வகுப்பு

திரு. முத்துசாமி 


ஆறாம் வகுப்பு

வகுப்பாசிரியர் - திரு. ஞானராஜ் சாமுவேல் (ஆங்கிலம் & கணக்கு) 

தமிழ் - திரு. செல்வின் 

அறிவியல் - திரு. மலையப்பன் 

சமூக அறிவியல் - திரு. பாலசிங் 


ஏழாம் வகுப்பு

வகுப்பாசிரியர் - திரு. ஞானராஜ் சாமுவேல்

தமிழ் - திரு. சுந்தரம் 

அறிவியல் - திரு. பிச்சை ஜெபராஜ் 

சமூக அறிவியல் - திரு. சுந்தர்ராஜ் 


எட்டாம் வகுப்பு 

வகுப்பாசிரியர் - திரு. மலையப்பன் 

தமிழ் - திரு. செல்லமணி 

அறிவியல் - திரு. ஆல்பர்ட் தேவசகாயம் 

சமூக அறிவியல் - திரு. நிம்ரோத் 


ஒன்பதாம் வகுப்பு

வகுப்பாசிரியர் - திரு. கால்டுவெல் 

தமிழ் - திரு. உடையார்

அறவியல் - திரு. குணசிங் 

சமூக அறிவியல் - திரு. கிருஷ்ணதாஸ் 


பத்தாம் வகுப்பு 

வகுப்பாசிரியர் - திரு. கிறிஸ்டோபர் ஜார்ஜ் 

தமிழ் - திரு. துரைராஜ் 

அறிவியல் - திரு. பர்ணபாஸ் 

சமூக அறிவியல் - திரு. ஜான் பொன்னைய்யா 


பதினொன்றாம் வகுப்பு

தமிழ் - திரு. ஞானராஜ் 

ஆங்கிலம் - திரு. ராஜேந்திரன் 

கணக்கு - திரு. பண்டாரம் 

இயற்பியல் - திரு. சாத்ராக் ஞானதாசன் 

வேதியியல் - திரு. ரவிக்குமார் ஜான்சன் 

கம்பியூட்டர் சயின்ஸ் - திரு. செல்வின் 


பனிரெண்டாம் வகுப்பு

தமிழ் - திரு. மெல்கி சதேக் செல்வம்

ஆங்கிலம் - திரு. ராஜேந்திரன்

கணக்கு - திரு. டேனியல்

இயற்பியல் - திரு. சாத்ராக் ஞானதாசன் 

வேதியியல் - திரு. ரவிக்குமார் ஜான்சன் 

கம்பியூட்டர் சயின்ஸ் - திரு. செல்வின் 


கல்லூரி - முதல் செமஸ்டர் 

ஆங்கிலம் - திரு. சுப்பிரமணிய பிள்ளை

கணக்கு 1 - திரு. குமரேசன்

இயற்பியல் - திருமதி. சீதா லக்ஷ்மி

வேதியியல் - திரு. கொம்பராஜன் 

இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் - திரு. ஜேசு தனம் 

கம்பியூட்டர் - திருமதி. ஷீலா.


இரண்டாவது செமஸ்டர்

ஆங்கிலம் - திருமதி. அம்பிகா 

கணக்கு 2 - திரு. தனபாலன்

இயற்பியல் - திரு. டிவிஎஸ் பிள்ளை

வேதியியல் - திரு. கொம்பராஜன் 

எலக்ட்ரிக்கல் - திரு. பெல்வின் எட்வர்டு

எலக்ட்ரானிக்ஸ் - திரு. கிளன் தேவதாஸ் 

தெர்மோடைனமிக்ஸ் - திரு. ரெபி ராய் 


மூன்றாவது செமஸ்டர் 

கணக்கு 3 - திருமதி. ராஜேஸ்வரி

அப்ளைடு தெர்மோ டைனமிக்ஸ் - திரு. சி. சுதாகர் / திரு. ஜோசப் சேகர் 

கைனடிக்ஸ் ஆப் மிசின்ஸ் - திரு. கே. சுதாகர் 

புளுயிட் மெக்கானிக்ஸ் - திரு. சரவணன் 

எலக்ட்ரிக்கல் மெசின்ஸ் & டிரைவ்ஸ் - திரு. பெல்வின் எட்வர்டு 


நான்காம் செமஸ்டர் 

புரடக்ஷன் இஞ்சினியரிங் - திரு. எஸ்பி. ராஜேஷ் 

அப்ளைடு மெட்டிரியல் சயின்ஸ் - திரு. ராமு 

டைனமிக்ஸ் ஆப் மெசின்ஸ் - திரு. ஜான் லியோன் 

ஸ்ட்ரென்த் ஆப் மெட்டிரியல்ஸ் - திரு. தணிகை அரசு 

நியுமரிக்கல் மெத்தட்ஸ் - திருமதி. ஏஞ்சல் பென்ஸீரா 

தெர்மல் இஞ்சினியரிங் - திரு. அழகேசன் 


ஐந்தாம் செமஸ்டர் 

இஞ்சினியரிங் மெட்ராலஜி - திரு. வினோத் பாபு 

கம்யூட்டர் எய்டட் டிசைன் - திரு. எட்வின் சகாயராஜ் 

டிசைன் ஆப் மெசின் எலமண்ட்ஸ் - திரு. ஜேம்ஸ் தினகர் வில்லியம்ஸ்

மெசின் டூல்ஸ் - திரு. ஜேசு தனம் 

கேஸ் டைனமிக்ஸ் & ஸ்பேஸ் புரப்பல்சன் - திரு. ஜோசப் சேகர். 

மெசர்மெண்ட் & கண்ட்ரோல்ஸ் - திரு. எஸ்பி. ராஜேஷ் / திரு. எட்வின் ராஜதாஸ் 


ஆறாம் செமஸ்டர் 

கம்யூட்டர் எய்டட் மேனுபேக்சரிங் - திரு. நாகராஜன் 

ஹைட்ராலிக் & நியுமேடிக் கண்ட்ரோல்ஸ் - திரு. வினோத் பாபு 

ஹீட் அண்டு மாஸ் டிரான்ஸ்பர் - திரு. ஆர். ராஜேஷ் 

டிசைன் ஆப் ஜிக்ஸ் & பிக்சர்ஸ் - திரு. ஜேசு தனம் 

டிசைன் ஆப் டிரான்ஸ்மிசன் சிஸ்டம்ஸ் - திரு. சுஜார் 

இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - திரு. எட்வின் ராஜதாஸ் 


ஏழாம் செமஸ்டர் 

பவர் பிளாண்ட் இஞ்சினியரிங் - திரு. கே. சுதாகர்

ப்ரப்சனஸ் எதிக்ஸ் - திரு. சுரேஷ் பெர்மில் குமார்

என்விரான்மெண்டல் - திரு. நாகராஜன்

ப்ராசஸ் கண்ட்ரோல் அண்டு காஸ்ட் எஸ்டிமேசன்  - திரு. சரவணன் 

மெக்கட்ராணிக்ஸ் - திரு. வினோத் பாபு 


எட்டாம் செமஸ்டர்

ஆட்டோ மொபைல் இஞ்சினியரிங் - திரு. ராமசாமி 

டோட்டல் குவாலிட்டி மேனேஜ்மென்ட் - திரு. சுரேஷ் பெர்மில் குமார்

இஞ்சினியரிங் மேனேஜ்மென்ட் - திரு. நாகராஜன்

ஆப்ரேஷன்ஸ் ரிசர்ஜ் - திரு. ராபின் குமார் சிங்

எங்கள் துறைத்தலைவர் - திரு. கிங் செல்வன்

எனக்கு வகுப்பெடுத்ததில்லை என்றாலும் என் மதிப்பிற்குரிய ஆசிரியை 

திருமதி. பாப்பாத்தி நடராஜன்.