Tuesday 22 October 2019

மழை

பால்யத்ததில் மழை
பட்டுப் பூச்சிகளை
ரசிக்க வைத்தது!

பள்ளி பருவ மழை
கூடுதல் விடுமுறை/
விளையாட்டு தந்தது!

கல்லூரி கால மழை
நனைந்து கலந்து
கரைந்து ரசிக்க
வைத்தது!

வேலை தேடும் கால மழை
ஆடை அழுக்கு, ஈரம் உலர்த்த
பயம் தந்தது!

கல்யாணத்துக்கு பின் மழை
மனைவி, தேநீர், பால்கனி
அது ஒரு அழகியல்!

சென்னை பெருமழை
அக்கறை கொண்டோரின்
அகங்களை படம் பிடித்தது!!!

Tuesday 15 October 2019

பிகில்

பிகில் சமூக அக்கறை கொண்ட திரைப்படம்.

ராயப்பன் கிறிஸ்தவரா மதம் மாறியவர். இட ஒதுக்கீடுக்காக இந்துவா வாழ்றார்.
துரதிஷ்டவசமாக அவர் மகன்கள் மைக்கேலும் பிகிலும் தத்தியா இருக்கிறாங்க.
மைக்கேல் ரவுடியா ஆயிருறார். பிகில் தத்தி தத்தி கால்பந்தாட்ட வீரர் ஆகிறார்.
பிகிலின் காதலி நயன்தாராவும் கால்பந்தாட்ட வீராங்கனை. பிகிலை தேசிய அணியில் இடம் பெறாமல் செய்ய ஆரிய பார்பனிய கும்பல் சதி செய்கிறது. பிகில் தன் திறமையால் தேசிய அணியில் இடம் பிடிக்கிறார். போட்டிக்கு முன்பாகவே பிகிலை விபத்தில் கொலை செய்கிறது பார்ப்பன கும்பல்.

இடைவேளை

 பிகிலை கொன்றவர்களை பழி வாங்க செல்கிறார்கள் ராயப்பனும் மைக்கேலும். குடும்ப வக்கீல் விவேக் தடுக்கிறார். ஒரு பிகில் செத்திருக்கலாம். நீங்க ஓராயிரம் பிகிலை உருவாக்கங்க என்று அட்வைஸ் செய்கிறார் விவேக்.
மைக்கேல் வெறித்தனமாக புட் பால் கற்று ஆண்கள் அணி கோச் பதவிக்கு விண்ணப்பிக்கிறார்.
ஒரு போட்டி கூட விளையாடத மைக்கேல் விண்ணப்பத்தை நிராகரிக்கிறது கால்பந்து சம்மேளனம்.
இந்நிலையில் சட்டப்பிரிவு 420 பி பற்றி விளக்குகிறார் விவேக். கால்பந்தே விளையாட தெரியாவிட்டாலும் தம்பி தேசிய அணிக்கு தேர்வாகி இருந்தால் அண்ணன் தேசிய பெண்கள் அணிக்கு கோச் ஆகலாம் என்கிறது அந்த சட்டப்பிரிவு. அதன்படி பெண்கள் அணிக்கு கோச் ஆகிறார் மைக்கேல்.
பிகில் இறந்தபின் கால்பந்தை வெறுத்து விட்ட நயன்தாராவும் அணியில் இடம் பெறுகிறார். ஆனாலும் பெண்கள் அணியில் ஆதிக்க சாதி வெறி தலைவிரித்தாடுகிறது.
ஆதிக்க சாதி வெறி பிடித்த இந்துஜா கோச்சுக்கு வணக்கம் வைக்க மறுக்கிறார். ரோபோ சங்கரின் மகளை மாட்டுக்கறி தின்பதால் மாடு மாதிரி இருக்கிறாய் என்று கிண்டல் செய்கிறார் இந்து.
மறுநாள் பெண்கள் அணியுடன் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருக்கிறார் மைக்கேல். இந்த பொண்ணுங்க கிட்ட ஒற்றுமையே இவர்களை எப்படி சமாளிக்க போற மைக்கேல் என்கிறார் விவேக்.
அந்த சமயத்தில் யோகி பாபு கோஸ்டியினர் வந்து இந்துஜா கையை பிடித்து இழுத்து வம்பு செய்கிறார்கள். ஏதாவது பண்ணுப்பா மைக்கேல் என்கிறார் விவேக்.
ரோபோ மகள் யோகியை தாக்க மற்ற பெண்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.
ஆண்கள் அணியில் இருக்கும் இந்துவின் காதலர் கதிர், பிகிலின் தியாகத்தையும் மைக்கேலின் வெறித்தனத்தையும் விளக்குகிறார் இந்துவுக்கு.
இந்திய அணி உலகக்கோப்பைக்கு போய் தொடக்க போட்டிகளை வெல்கிறது.
முக்கிய போட்டியின் முந்தைய நாள் மைக்கேல் நயன்தாராவை கூப்பிட்டு ஏதோ சொல்கிறார்.
நயன்தாரா தன் திறமையால் அந்தப் போட்டியை வென்று கொடுக்கிறார்.
இதற்கிடையில் பிகிலை கொன்றவர்களை கொன்று விட்டு சிறைக்கு செல்கிறார் ராயப்பன்.
இறுதி போட்டியிக்கு முந்தைய நாள் மைக்கேல், இந்து மற்றும் ரோபோ மகளை கூப்பிட்டு
நாளைக்கு போட்டியில் இந்தியா தோற்றால் அதுக்கு காரணம் உங்களோட சாதி வெறி தான் என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
இறுதி போட்டியில் அவர்கள் இருவரும் விட்டு கொடுத்து விளையாடுகிறார்கள். போட்டி டிரா.
டை ப்ரேக்கரில் நயன்தாரா கோல் அடிக்க போட்டியை வெல்கிறது.
நயன்தாரா மைக்கேலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.
மெல்ல ப்ளாஸ்பேக் விரிகிறது. பிகில் சாகவில்லை. செத்தவர் மைக்கேல்.

A film by Atlee

AR Rahman musical