Friday 31 August 2012

பசி


ரயிலில் அம்மா அப்பா
பசிக்குதுபார்த்த பசி
தீராது எதாவது
காசு போடுங்க என்று
பிச்சை கேட்கும் 
பிச்சைகாரனுக்கு உண்மையில் 
பசிக்கிறதா என்பதை
உணரமுடியவில்லை.

அவன் கையை பற்றி
இழுத்து போய் கடையில்
உணவு வாங்கி தர
நேரமும் இல்லை!

அவசர அலுவலில்
இருந்தாலும் 10௦ மணிக்கு
அடிவயிறு காலை
உணவு உண்ணாததை
நினைவு கூறுகிறது!

ருசி இல்லா உணவை 
தின்று பழகிய நாக்கு
அம்மாவின் கை மணத்திற்காக
பசித்து கிடக்கிறது ! 

மனசு  த்து போகும் போது
வயிறும் பசிக்க 
மறந்து விடுகிறது!  

மாத கடைசியில்  அறைக்கு   
வரும் நண்பன் நன்றாக 
சாப்பிட வேண்டும் 
என்பதற்காக, எனக்கு
பசிக்கல ரெண்டு  புரோட்டா
போதும் நீ சாப்பிடு  
என்று சொல்லும் போது,
என்னனு தெரியல   மாப்ள 
எனக்கும்  இன்னைக்கு வயறு
கம்முனு இருக்கு என
அவன் பதில் கூறும் போது
பசி கூட நட்பை பறைசாற்றுகிறது !

Monday 27 August 2012

கீழ பிள்ளையார் குளம் பகுதி 2


எங்கள்  ஊரின்  சின்ன  சின்ன  (பெரிய்ய்ய்ய ) சந்தோசங்கள்

(1)தெருவில்  (திரை ) படம்
கல்யாணம்  மற்றும்  விசேச  தினங்களுக்கு  நண்பர்கள்  உறவினர்களை  
சந்தோஷ படுத்த  தெருவில்  டிவி  வாடகைக்கு  எடுத்து  படம்  போடுவது  வழக்கம். டிவி  என்பது  அரிதான  காலத்தில் படம்  பார்க்க  ஊரே திரண்டிருக்கும். பொதுவாக  முதல்  படம்  பக்தி  படம், அடுத்தது  குடும்ப  படம், 3 வது  படம்  ரசிகர்களின்  வேண்டுகோளுக்கிணங்க.

சரஸ்வதி  சபதம்,திருவிளையாடல், கந்தன்  கருணை  தவிர வேறு படங்கள் கிடையாதுமுதல்  படத்திற்கு. “அம்மன்”  படம்  வந்த  பின் வேறு நல்ல பக்தி  படங்கள்  வர  தொடங்கியது. டிவியும்  எல்லா  வீட்டிலும்  வந்து  விட்டது.

கரகாட்டகாரன், சின்ன  தம்பி, பொன்னுமணி, கும்பக்கரை  தங்கையா 2 வது  படம்.
3  & 4  வது  படம்  பெரும்பாலும்  கார்த்திக்  படம்.

4 படம்  தொடர்ந்து  பார்ப்பது  சாதனை  தான்.
நான்  இரு  முறை  முயன்று  தோல்வியை  தழுவி  இருக்கிறேன்.பீடி  
சுற்றும்  தாய் குலங்களால்  தொடர்ந்து  4 வது  படமும்  பார்க்க  முடியும் .

(2)காணும்  பொங்கல்  / மாட்டு பொங்கல்

காணும்பொங்கல்  அல்லது  மாட்டு பொங்கல்  தினத்தில்  தோட்டத்தில்  / 
வயலில்  முன்னோர்களை  நினைத்து  பொங்கல்  விடுவது  வழக்கம்.

(3)பொங்கல்  விளையாட்டு  போட்டிகள்

பொங்கலுக்கு  மறுநாள்  விளையாட்டு  போட்டிகள்  நடப்பது  தமிழ்  
நாட்டின்  வழக்கம். இந்த  போட்டிகளில்  பெண்களுக்கும்  குடும்ப  
தலைவிகளுக்கும்  போட்டி
வைத்து  பரிசளிப்பது  பாராட்ட  தகுந்த  விஷயம்.

  (4) கோவில்  கோடை  கலை  இரவு

கோவில்  கொடைகளில் முதல்  நாள்  இரவு  கலை  இரவாகும் . கரகாட்டம், பாட்டு கச்சேரி  அதிகாலை  4 மணி  வரை  களை கட்டும். 
கரகாட்டத்தில்  அதிக  விரசம்  இருப்பதால்  விழ  குழுவினரும்  இன்றைய  இளைஞர்களும்  கரகாட்டத்தை தடை  செய்து  விட்டனர்.

(5)கார்த்திகை  தீப  திருநாள்
கார்த்திகை தீப திருநாள்  அன்று  எல்லாரும்  சூந்து கொளுத்துவது  
வழக்கம். பருத்தி மாரை சேர்த்து  கட்டும்
 சூந்தில்  இருந்து  டயரை   கொளுத்தும்  சூந்துக்கு மாறினால் பெரிய பையனாக  அங்கீகாரம் 
கிடைக்கும் டயரை  கொளுத்தி கையில் பிடித்து  கொண்டே  கணியான் பாறை வரை  செல்வது  
சிறுவர்களின் தைரியம்.

(6) வடக்கத்தி   அம்மன்  
வடக்கத்தி அம்மன்  திருவிழா, அம்மன்  கோவிலுக்கு  வடக்கே  வயலுக்குள்  இருந்து  பூஜை  செய்து  
மஞ்சள்  நீராடத்துடன்  நடைபெறும். இந்த  விழாவில்  மைத்துனர்  மைத்துனிகள்  மீது  மஞ்ச  தண்ணி  
ஊத்துவது  வாடிக்கை.இந்து  மழை வேண்டி  ஆண்டு  தோறும்  நடக்கும்  
திருவிழா .

Tuesday 14 August 2012

சுதந்திர தினம்


அல்லல் பட்டுஜிக்கள்
சுதந்திரம் வாங்கி
தந்து 65 ஆண்டுகள்
ஆகிவிட்டது!

சுதந்திரத்தை போற்ற
நாளைய சிறப்பு
திரைப்படங்கள் "வேங்கை"
"உருமிகோ" !

 அஸ்ஸாம் கலவரம்,
மதுரை கிரனைட்,
கூடங்குளம் அணுஉலை,
எல்லாமே நம்மை
கடந்து செல்லும் செய்திகள்!

நூறுகோடி முகங்கள்   இருந்தும்
ஒலிம்பிக்ல் ஒரு தங்கம்
வாங்க வக்கில்லை!

இது விளையாட்டு துறையின்  
அவலமா? அரசியலா?  தெரியவில்லை

அட்சய திருதியை அன்று
மட்டும் நகை கடை முன்பு
குவிகிறோம் தங்கம் வாங்க!

மனதில் பட்டதை பேச
சமுக வலைதளம் உள்ளது!

அதிலும் மதத்தை பரப்ப
ஒரு கூட்டம் அலைகிறது !

மற்றொரு கூட்டம்
சினிமா நடிகருக்காக
சண்டை போட்டுகொள்கிறது!

இதை எல்லாம் பார்க்க
“ஜிக்கள் இல்லை
அவர்கள் பார்த்தால்
இதற்காகவா ?!..

 [பின் குறிப்பு : ”ஜிஅஜித் குமார் நடித்த படம் அல்ல, இது காந்திஜி நேதாஜி வகையறா ]

நேற்று


மழை பெய்து முடிந்த 

மாலை நேரம் சென்னை 

அழகாய் இருக்கிறது!
 
தண்ணீர் கழுவிய சாலைகள்

சின்ன சின்ன தூறல்கள் 

வானின் கொடையை ரசிக்கும் வாண்டுகள்

மழையை வெறுக்கும் மனிதர்கள்!

சென்னை மழையும்

அழகாகதான் இருக்கிறது!

மின்கம்பங்களும் மழைக்கு

நனைந்து விட்டால்

இம்மாநகரத்து காகங்கள்

எங்குபோய் ஒதுங்கும்?

Friday 3 August 2012

Tamil Cinema

அண்மையில்  ஆனந்த விகடனில்  ஒரு  மாணவ  பத்திரிக்கையாளர்  நடிகர்  
கார்த்தியிடம்  ஒரு  கேள்வி  கேட்டு  இருந்தார்  
பிற  மொழி  படத்தை  தழுவி  படம்  எடுக்கும்  தமிழ்  திரை
உலகம்  திருட்டு  VCD யில்  படம்  பார்ப்பதை  மட்டும்  கண்டிக்கிறதே? இது  தான் கேள்வி.

Copy rights வாங்காமல்   காபி அடிப்பது  தவறு. திருட்டு  VCD யும்  தவறு. பணம்  போட்டு  படம்  எடுக்கிற  தயாரிப்பாளர்  தெருவிலா  போக  முடியும்  என்று  
பதில்  சொல்லி  இருந்தார்.

தயாரிப்பாளர்  தெருவுல  போறதுக்கு  காரணம் ரசிகர்கள்  திருட்டு  VCDல  படம்  பார்கிறது தான் என்பது  எந்த  வகையில்  நியாயம் .
தயாரிப்பாளர்  எவ்வளவு  கஷ்டபட்டாலும்  தனது  சம்பளத்தை  குறைக்காத  
நடிகர்  நடிகைகள்  காரணம்  இல்லையா .?

ஒரு  நடிகரின்  படம்  தோல்வி  அடைந்தால்  அவரின்  சம்பளம்  பாதியாய்  
குறைக்கபடும்  என்று  தயாரிப்பாளர்கள்  முடிவெடுத்தால் எத்தனை பேர் 
 தமிழ்  சினிமாவில்  நீடிப்பார்கள்.

அப்புறம்  இயக்குனர்  ஷங்கர்  இடம்  நீங்க  என்  Xeroxகாபி  மாதிரி  நண்பன்  
படத்த  எடுதீங்கனு  கேட்டதற்கு   அவரின்  பதில்

3 idiots  படத்த  தமிழ்  மக்களுக்கு  காட்ட தான்  Xerox எடுத்தேன். அதாவது  சேவை  மனப்பான்மையில். 

ராஜா,  சேவை  செய்யணும்னு  நீ  நினைச்சா அந்த  படத்த நீயே  தயாரிச்சு  
இருக்கணும். இல்லேன்னா  சம்பளம்  வாங்காமல்   இயக்கி  இருக்கணும். 
ரெண்டுமே  இல்லேன்னா  இது  எப்படி  சேவை  ஆகும்.

இன்னொன்னு, ஒரு  கோடி  நிகழ்ச்சியில்  சினிமா  பிரபலங்கள்  கலந்து  கொண்டு  அந்த  பணத்த trustகு  நன்கொடை  வழங்குவதாய்  நிறைய  பேர்  வந்தார்கள் .
அவர்களிடம்  ஒரு கேள்வி  அதே  trustukku உங்க  சொந்த  சம்பாத்தியதுல  
எவ்வளவு  ரூபா  கொடுத்திருகீங்க?. 
வருமான வரிக்காக எவ்வளவு நன்கொடை  கொடுத்து  எவ்வளவுக்கு  பில்  
வாங்கினீங்க ?