Sunday 26 May 2013

ஆசையில் ஓர் கடிதம்



இனியவளே,
ஏப்ரல் மாதத்தில் தான் 
நான் கண்டேன் காதலை!
மே மாதம் மறுபடியும் உன்னை 
சந்தித்த வேளையில் நான் 
மகிழ்ச்சியில் திளைத்தேன் !

பிரியமானவளே ,
கண்ட நாள் முதல் உன் மீது 
காதல் கொண்டேன்!
தினந்தோறும் உன் 
வண்ண கனவுகள் !

என்னவளே,
உன்னை கொடு என்னை தருவேன் 
என்று சொல்லவில்லை 
தந்து விட்டேன் என்னை!

தேவதையே,
உயிரோடு உயிராக 
என் நெஞ்சினிலே 
கலந்தவள் நீ !
முப்பொழுதும் உன் கற்பனைகள் !

செல்லமே,
உன்னருகே நானிருந்தால் 
என் மனதோடு மழைக்காலம்!

என் சுவாச காற்றே,
என் வீட்டு தோட்டத்தில் 
பூவெல்லாம் உன் வாசம்!

என் அன்பே ஆருயிரே,
உன் காதுக்குள் ரகசியமாய் 
சொல்ல ஆசை!
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்று!

சிநேகிதியே,
ஆசை ஆசையாய் இருக்கிறது 
உன்னிடம் பேச 

என்றும் அன்புடன் 
ப்ரியமுடன் 
காதலுடன் 
பழனி செல்வகுமார்  

Friday 24 May 2013

விடை தெரியாத கேள்வி 2



Unreservedல் பயணம் செய்யும் போது பக்கத்தில் உள்ளவர்களிடம் பல் இளித்து சிரிக்கும் நம் முகங்கள், reservationல் எரும சாணியை அப்பியது போல் இருப்பது ஏன் ?

விடை தெரியாத கேள்வி 

விடை தெரியாத கேள்வி 1



ஒரு நெடுஞ்சாலை பயணத்தின் போது சிறுநீர் கழிப்பதற்காக இரு சக்கர வாகனத்தை நிறுத்தினோம். நண்பன் சாலை ஓர ஜல்லி கல்லை எடுத்து ஒரு கருவேல மரத்தை நோக்கி சரமாரியாய் எறிந்தான்.

ஏன் மாப்ள என்னாச்சு? என்றேன் 

ஒந்தான் (ஓணான் என்பதன் வட்டார சொல்) மாப்ள அதான் என்றான்.

ஒந்தான பார்த்ததும் ஏன் கல்ல கொண்டி எறியுற என்றேன்.

தெரியலையே மாப்ள என்றான் நண்பன்.

விடை தெரியாத கேள்வி ?