Friday 5 October 2012

நான்காம் கண்


மறுபடியும்  உன்னை  என்று
சந்திப்பேன்  என்று  எனக்கு
தெரியவில்லை
  
நீ  பிரசவத்திற்கு  
தாய் வீடு  செல்லும்
மனைவியா ? இல்லை
 
நீ  கல்லூரியின்  கடைசி  நாளில்
கை  குலுக்கி  பிரியும்
தோழியா ? இல்லை
 
விடுமுறை  முடிந்து
விடுதிக்கு  செல்லும்
தங்கையாஇல்லை
 
மணமுடித்து  கணவன்
வீடு  செல்லும்
அக்காவா ? இல்லை
 
இந்த  24 மணி  நேர  ரயில்
பயணத்தில்  நம்  நான்கு
கண்கள்  எத்தனை  முறை
சந்தித்திருக்கும் ?
 
ஒரே  ஒரு  முறை  ஓர
விழியால்  நீ  பார்த்த அந்த
நான்காம்  கண்  பார்வைக்காக
 
மறுபடியும்  உன்னை  என்று
சந்திப்பேன்  என்று  எனக்கு
தெரியவில்லை