Sunday 19 October 2014

சாதியை எப்படி ஒழிக்கமுடியும் ?

சமிபத்தில்  ஊருக்கு சென்ற போது பொழுது போகவில்லை
என்ன செய்யலாம் என்று யோசித்தேன்
எனது அக்கா மகளின் துணை பாட நூலை (+2) வாங்கி சிறுகதை படிக்கலாம் என்று
அதை வாசித்த போது எனக்கு ஒரு விசயம் தூக்கி வாரி போட்டது.

முதல் கதையின் தலைப்பு பால் வண்ணம் பிள்ளை, இரண்டாவது கதை
தலைப்பு மூக்க பிள்ளை. அடுத்த கதையில் செட்டியார்,  ஐயர் என சாதி பெயர்கள் பாட நூலில்.

நான் உடனே புத்தகத்தின் முன் பக்கத்துக்கு போய் இதை படித்தவர்கள் தான் தயாரித்தார்களா ?
என்று பார்த்தேன் எல்லாருமே தலைமை ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள்.

பள்ளி புத்தகத்தில் சாதி பெயரை குறிப்பிட்டால் அது சமத்துவத்தை நிலைநிறுத்துமா?

கதைகளுக்குபின்னால் பயிற்சி என்ற பெயரில் இக்கதையை கருபொருளும் சுவையும் குன்றாமல் எழுதுக.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கதையை தேர்வு செய்தவர்களுக்கு  கருபொருளை மட்டும் எடுத்து பாடநூலில் கொடுக்க தெரியாதா ?

சில ஆண்டுகளுக்கு முன் சட்ட கல்லூரியில் நடந்த சம்பவம் சட்ட கல்லூரியில் சாதிகளை
ஒழிக்கமுடியாது என்று விளக்கியது

சாதி இரண்டொழிய வேறில்லை என்ற பாரதியின் கூற்றை கூட மாற்றி ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டிய இந்த காலத்தில் பாடநூலே சாதியை சுமந்தால் எப்படி சாதியை ஒழிக்கமுடியும்.