Tuesday 7 August 2018

நட்பு

பால்யத்தின் வாசலை திறந்தது
நட்பு!
பாளையங்கோட்டை பள்ளியில்
தனியாய் உட்கார்ந்து சாப்பிட்ட போது
சேர்த்து கொண்டது நட்பு!
பள்ளி விடுதியில்
பல விசயங்கள்
கற்றுத் தந்தது நட்பு!
கல்லூரி காலத்தை
மகிழ்வுடன் கழிக்க வைத்தது
நட்பு!

கணத்த மனதுடன் கல்லூரி
பருவத்தை முடிக்க வைத்ததும்
நட்பு!

கல்லூரி விடுதியில் வாழ்க்கையின் பக்குவத்தை பயிற்றுவித்தது நட்பு!

சென்னை நகரத்திலும் சிறப்பான நண்பர்கள் அமைந்தது எனக்கு கிடைத்த வரம்!

மச்சி மாப்ள மச்சான் ஏல பாஸ் ஜி ப்ரென்டு நண்பா தோழா இத்தனை பேர்களில் என்னை அழைத்தாலும் அத்தனைக்கும் பேர் நட்பு!

வாட்சப் வந்தபின் நட்பெனும் ஆலமரத்தின் விழுதுகள் குறைந்தாலும் ஆணிவேர்  அழுகாது!