Tuesday 22 May 2012

விமல் நற்பனி மன்றம்

எங்க ரூம் பக்கத்து தியேட்டர்ல(சைதை ராஜ் ) கலகலப்பு படம் ஓடுகிறது

அங்க  நடிகர் விமலுக்கு ஒரு பேனர் வச்சிருந்தாங்க. விமல் நற்பனி மன்றம்  என்று
இவங்க விமலுக்கு  நற்பணி ஆற்றுவது  இருக்கட்டும்
தமிழுக்கு எப்போ நற்பணி ஆற்ற  போறாங்களோ?

Friday 18 May 2012

நேத்து

நேத்து  ட்ரைன்ல(Train)  நடந்த  சம்பவத்தை  ஷேர்  பண்ண  போறேன்

ட்ரைன்ல  வாசலுக்கு அருகில்  இருக்கும்  கேப்  நடுவுல  வந்து  ஒரு  மூத்த  நபர்  
கமெண்ட்  அடித்தார்.
அங்க பாருங்க யாரும் உள்ள போக  மாட்டாங்க உள்ள எவ்வோளோ இடம் 
இருக்கு  என்றார் அவர்  மட்டும்  என்னமோ  சீட்களுக்கு  நடுவில்  போய்  நிற்பது  போல். ட்ரைன்ல்  அவரை  போல்  நிறைய  பேர்  வசதியான   இடத்தில  நின்று  கமெண்ட்அடிக்கிறார்கள்.
அவர்  கூட  புட்போர்டில்  நிற்கிறவர்களை  பார்த்து  அப்படியே  தொங்கிகினே  
வருவான். காதுல  headset போட்டுக்குவான் என்றார் .
பூட்போர்டில்  நிக்கிறவன்  எல்லாரும்  இஷ்டப்பட்டு நிற்கவில்லை. உள்ள வசதியா  ஒரு  சிலர்  நின்று  கொள்வதால்  பலர்  நெரிசலில்  சிக்க  வேண்டிஉள்ளது. அது  மட்டும்இல்லாமல்headsetபோடுவது ட்ரெயினில் மொபைல்லை பறிகொடுக்காமல் இருப்பதற்காக  மட்டுமே .
Headsetமாட்டும் எல்லா இளைஞர்களும் ஸ்டேஷன்ல்
ட்ரைன்  நின்ற உடன்  இறங்கி வழி விடுகிறார்கள். ட்ரைன்  கிளம்புவதாய் ஹார்ன்  அடித்ததும்  திரும்ப  தொற்றி கொள்கிறார்கள். 
பிறகு  எப்படி  அவர்  headset ஐ குறை  சொல்ல  முடியும் .

ட்ரைன்  உள்ளே  சென்று  நின்றால்  ஏற்படும்  இன்னல்கள்

1. ஜெனரல்  கம்பார்ட் மென்டில் ஏறும்  தாய்குலங்களை (ஒவ்வொரு ட்ரைன் னிலும் நாலு முதல் ஐந்து பேட்டிகள் பெண்களுக்கு மட்டுமே)  உரசாமல் இருக்க  தொந்தியை  எக்க வேண்டி  உள்ளது (இரண்டு நிமிடம் தொந்தியை எக்கலாம் ஆனால் இருபது நிமிடம் மிக கடினம் ),  கையை  தூக்க  வேண்டி  உள்ளது , காலை  மடக்க  வேண்டி  உள்ளது

2.உயரம்  குறைவானவர்கள்  தலையில்   நன்றாக  என்னை(oil)  வைத்து  வந்து  
முகத்திலேயே  முட்டுவார்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும் .

3.வேர்வை வழிய ஏறி உரசிகொள்வார்கள் அதையும் பொறுத்து 
கொள்ளவேண்டும் .

இதனால்தான்  நெறைய  பேர்  வாசலிலே  தொங்குகிறார்கள் .

Thursday 17 May 2012

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

சென்னை  அணி  நேற்று தோல்வி அடைந்ததால் வருத்தத்தில் இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும்  என்  ஆழ்ந்த  அனுதாபங்கள் .

உங்களிடம்  நான்  சில  கேள்விகள்  கேட்க  விரும்புகிறேன்

சென்னை  அணி  ஆடுவதால்  உங்களுக்கு  என்ன  நன்மை ?
கிரிக்கெட்  என்பது  ஒரு  பொழுதுபோக்கு  அதனால்  கிரிக்கெட்  பார்க்கிறோம்   இது  உங்கள்  பதில்ன
120 பந்துகளில்  60 (சரி  பாதி) பந்துகளில்  ரன்  எடுக்கவே  இல்லை. இது  தான் சிறந்த  பொழுபோக்கா?

சென்னை  என்ற  பெயரில்  எவனோ  விளையாடினாலும் ரசிக்கிறிர்கள். உங்களில் எத்தனை பேருக்கு  ICL சென்னை  அணியின்  பெயர்  தெரியும்? அதுவும்  கிரிக்கெட்  போட்டி  தானே ?
உங்களில்  எத்தனை  பேர்  ICL போட்டி  பார்த்தீர்கள் ?

சூப்பர்  கிங்க்ஸ்  நிர்வாகத்திடம்  ஒரு  கேள்வி ?
சென்னைஅணியில் விளையாடும் வீரர்க்கு(?)10 கோடி  கொடுக்க  முடிந்த  
உங்களால்  இந்திய  இளைஞர்களுக்கு  எத்தனை  பேருக்கு உங்கள்  இந்தியா சிமெண்ட்ஸ்  மூலம்  வேலை  வாய்ப்பு தரமுடிந்தது ?
இந்த  10கோடி  பணத்தில்  பாதியை இளைஞர்களுக்கு  கொடுத்தால் எத்தனை  
குடும்பங்கள்  பசியாறும்

ஆடுகளத்தில்  போய் விளையாட்டை  பார்க்க  சென்னையில்  மட்டும்  என்  
இவ்வளவு  உயர்ந்த  தொகை ?
700 ருபாய்  மற்ற  மாநிலங்களில்  300 ருபாய்  டிக்கெட் உள்ளது 

Wednesday 16 May 2012

ஏ காயே கருப்பங்கா


டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போதுஇந்த பாடல் 
ஒலிபரப்பானது,

“ ஏ காயே கருப்பங்கா 
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா 
ஊயn புளியங்கா உப்புக்கச்சேன் நெல்லிக்கா
ஏ தாவணி தாரிக்கா 
 கண்ணந்தான் பேரிக்கா 
வாயோறம் கோவக்கா 
வார்த்தாதான் பாவக்கா 
சூடு வர கத்தரிக்கா 
மூடு வர முருங்கக்கா 
சங்கிலி முங்கிலி கதவத்தொர 
நாம்மாட்டேன் வெங்கலப்புலி “

நானும் யோசித்தேன் இந்த பாடல் எந்த பா(வெண்பா, ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா) வகையை சார்ந்தது என்று  


பக்கத்தில் இருந்த பெரிசு பாடலை கேட்ட  உடன் கலிகாலம்பா என்றார் 

Thursday 10 May 2012

அவளின் பாசம்


அ னாவிலும் “A” யிலும்  என்  கையை
பிடித்து  இயக்கியவள் .
இப்போது  நான் எழுதும்  “A” வில்  
எத்தனையோ  மாற்றங்கள்
அவள்  அன்பு  அப்படியே  உள்ளது !

எத்தனை முறை  அடித்தாலும்
மீண்டும்  அவளுடன்
ஒட்டவைக்கும்  காந்த சக்தி
அவளின்  பாசம் !

நாகர்கோயில்  கல்லூரியில்  சீட்
எனக்கு  கிடைத்தது
பாளையம்கோட்டை  காலேஜ்  நல்ல
காலேஜ்  இல்லையா  என்று  கேட்டபோது
அவளின்  தவிப்பு  தெரிந்தது !


வேலை  கிடைத்து  சென்னை
கிளம்பும்  முன்  காலில் 
விழுந்து  ஆசி  பெரும்  போதே
அழுதுவிட்டாள்!

இன்றும்  என்  பயணங்களில்
நினைவுகளாய் உடன்  வருகிறது
அவளின்  அரவணைப்பு !

அவளின்  பாசத்தை  பெற  கடவுள்  (கம்பெனி )
எனக்கு  தந்த  கால அட்டவணை
மூன்று  மாதங்களுக்கு ஒருமுறை
மூன்று  நாட்கள் !

அவளே  தேய்த்துவிடும்  எண்ணெய்
குளியலுக்காக  ஒரு  தீபாவளி,
சீயக்காய்  வாசத்தில் அவளின்  பாசம்
இருக்கும் !

வீடு  முழுக்க  நிறைத்திருக்கும்
சுண்ணாம்பு  கோலங்களை
ரசிப்பதற்காக  ஒரு  பொங்கல் !

லேசா  பறக்குது  மனசு  என்று  
திரிந்தாலும்  கொடை முடிந்து
அவள்  அருகில்  தூங்கும்  மதியம் !

சென்னை  வெயிலை  விரட்டி  விட்டு
நெல்லை  வெயிலை  ரசிக்கும்
மே  மாத நாட்கள் !

என்னவளை  தேடும்  பணியை
அவளிடம்  விட்டு  விட்டேன்
அதிலும்  அவள்  அன்பு
நிறைந்திருக்கும் !



Wednesday 9 May 2012

அம்மாவின் அன்பு

பத்து வருடங்களுக்கு பின் 
பார்க்கும் பள்ளி நட்பு 
பேச  வார்த்தை  இல்லாமல் 
புன்னகையோடு முடிந்து 
விடுகிறது!

வதன புத்தகத்தில் (Face Book)
மகனோடு சிரிக்கிறது 
கல்லூரி காதல்!
 மிஸ்டு கால்  கொடுத்து 
இரண்டாயிரம் ரூபாய் கடன் 
கேட்கிறது கல்லூரி 
சிநேகம்!

‘ப்ரீ ‘யா இருந்தா வீட்டுக்கு 
வாடா சண்டே “ப்ரீ”யா தான் 
இருப்பேன் என்று சுருங்கி 
விட்டது  அண்ணனின்  பாசம்!

மூத்தவ  தூங்குற 
சின்னவன்   கிட்ட பேசுறையா
என்று செல் போனில் 
கரைகிறது அக்காவின் 
அன்பு!

நீண்ட நாட்களுக்கு பின் 
வீட்டுக்கு செல்லும் போது

போன  தடவைக்கு 
இந்த  தடவ  எளசுட்ட

தலைக்கு என்ன 
தேய்கவே மாட்டியா

 பத்து தோசைகளுக்கு பின்னும் 
சூடா இன்னும் ஒன்னு 
சாப்பிடுடா

முடிய வெட்டலாம் இல்ல 

மொகத்துக்கு பவுடர் 
போட்டுக்கோ   என்று 
அப்படியே உள்ளது 
அம்மாவின் அன்பு