Monday 27 April 2020

ஆவுடையப்பன்

      ஆவுடையப்பன் ஒருநாள் கருக்கலில் தான் அந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தான். ஆள் பரதேசி போல் காட்சி அளிக்கவே திருடன் என நினைத்து மரத்தில் கட்டி வைத்து அடிக்க முடிவு செய்தனர்.
       அவன் திரும்ப திரும்ப கேட்டது சாப்பாடும் தண்ணியுந்தான். சற்று நேரத்தில் அவன் மன வளர்ச்சி குன்றியவன் என்றறிந்து சாப்பாடு கொடுத்தனர்.
     சாப்பிட்டு கிளம்ப தயாரானான், தாயம்மா பாட்டி வழி மறித்தாள். இப்போ போகாத, பக்கத்தூர்ல கட்டி வச்சு அடிக்க போறாங்க. அந்த கோவில் கொட்டகைல படுத்து காலைல போ என்றாள்.

சரி என்று தலையை ஆட்டினான்.

உன் பேர் என்ன? என்றாள்.
ஆவுடையப்பன் என்றான்.

அதற்கு பின் அந்த கிராமத்திலே ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான். சாப்பாடு மட்டும் தான் சம்பளம் கிடையாது. கோவில் கொட்டகையில் தூங்கி கொள்வான்.

காலையில் 5 மணிக்கு எழுந்து ஐந்து மாட்டு சாணியை அள்ளி தொழுவத்தை சுத்தம் செய்வான். 7 மணிக்கு கிடைக்கும் பழைய சோத்தையும் ஊறுகாயையும் சாப்பிட்டுவிட்டு மாடு மேய்க்க போய் விடுவான்.

முதலில் மாடு மேய்ப்பவர்கள் அவனை கண்டு பயந்தனர். பின்னர் பழகிவிட்டனர். மாடுகளும் பழகிவிட்டன.

பம்ப் செட்டில் குளித்துவிட்டு மாட்டை மதியம் வீட்டிற்கு ஓட்டி வருவான்.
தோட்டத்திலிருந்து நிச்சயம் ஏதாவது சுமை கொடுத்து அனுப்புவாள் முதலாளியம்மா.

ஒரு மழை நாள் முதலாளிக்கு சொந்தகாரர் இறந்துவிட சுடுகாட்டுக்கு வண்டி செல்ல முடியவில்லை. ஆவுடையப்பன் விறகு  மொத்தத்தையும் தலை சுமையாய் கொண்டு சென்றான்.

யார் செத்தாலும் இங்கு தான் எரிப்பார்களா? என்றான்.

ஆமா என்றார்கள் சுடுகாட்டுக்கு வந்த சிலர்.

மொதலாளி நான் வேனா இன்னும் கொஞ்சம் வெறகு கொண்டு வந்து போடட்டுமா என்றான்.

எதுக்கு என்றார் முதலாளி.

நீங்க செத்து போன தேவைப்படுமில்லா என்றான். சுடுகாடு என்பதை மறந்து அனைவரும் சிரித்து விட்டனர்.

வீட்டுக்கு போன பின் முதலாளியம்மா கேள்விப்பட்டு "ஏ மூதேவி இங்கயே திண்ணுகிட்டு இப்பிடி பேசுவயான்னு " சொல்லி விளக்குமாரால் விளாசி தள்ளினாள்.

      ஊரில் யார் எந்த வேலை சொன்னாலும் தயங்காமல் செய்வான். சொன்னதை மட்டும் செய்வான்.
 
     மாடு மேய்க்கும் சிறுவர்கள் அவனைத்தான் வேர்கடலை, தட்டாங்காய், வெள்ளரிகாய் பறித்து வர சொல்வார்கள், திருட்டு என்று தெரியாமலே பறித்து வருவான்.

    முதலாளியம்மா ஒருநாள் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க சொன்னாள். ஆவுடையப்பன் ரெண்டு பெரிய தொட்டி நிறைய நிரப்பிவிட்டு மாட்டுக்கான கல்தொட்டியிலும் நிரப்பி விட்டான்.

     முதலாளியம்மா ஏ மூதேவி கழனி தண்ணிய உன் வாயிலயா ஊத்த முடியும், இதுல கொஞ்சம் தண்ணிய எடுத்து தூர ஊத்து என்றாள்.
அவன் தண்ணீரை எடுத்து பக்கத்தில் இருந்த மாங்கன்றுக்கு ஊற்றினான்.


     அந்த கிராமத்திலே அவனை மதிப்பது இருவர் தான். தாயம்மா பாட்டியும். சண்முகைய்யா தாத்தாவும்.

     முதலாளி செலவுக்கு பணம் கொடுத்தால் அதை தாயம்மா பாட்டியிடம் கொடுப்பான். ஏன்டா என்பாள்.

     புன்னகைப்பான். நான் இந்த ஊர்ல வாழ்வதற்கு நீ தான் காரணம் என்பது அந்த புன்னகைக்கான விளக்கம்.

    அவள் மட்டும் தான் அவனை ஆவுடையப்பன் என்பாள்.
மற்ற எல்லாருக்கும் ஆவுடை தான்.

   தீபாவளிக்கு முக சவரம் செய்து புது சட்டை புது வேட்டி கட்டியிருந்தான்.
தாயம்மா பாட்டி தான் அழகா இருக்கடா ஆவுடையப்பா என்றாள். மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள்.

சண்முகைய்யா தாத்தா நாட்டு மருந்து செய்ய இவன் தான் பச்சிலை பறித்துக் கொடுப்பான்.

ஒருநாள் மாடுகள் முட்டி விளையாடி ஒரு மாட்டின் கொம்பு உடைந்து விட்டது.
அந்த கொம்பை சேர்த்து ஒட்ட வைக்க ஒரு பச்சிலை செடி தேவைப்பட்டது.

ஆனால் செந்தட்டி செடிகளை தாண்டி போக வேண்டி இருந்தது.எல்லாரும் சேர்ந்து ஆவுடையப்பனை அனுப்பிவிட்டனர். அவனும் பறித்து வந்துவிட்டு சொரிந்து கொண்டு இருந்தான்.
 
    சண்முகைய்யா தாத்தா தான் பச்சிலை மருந்து கொடுத்து தடவச் சொன்னார்.

    தோட்டத்து கிணற்றில் தண்ணீர் ஆழத்துக்கு சென்று விட பம்ப் செட்டை கிணற்றுக்குள் இருக்கும்
மேடைக்கு இறக்கி வைத்திருந்தனர்.
சாணி கரைத்து ஊற்றினால் மட்டுமே மோட்டார் வேலை செய்யும்.

அந்த சமயத்தில் வேறோரு வேலைகாரன் ஆவுடையப்பனை சாணி கரைத்து ஊற்ற சொன்னான்.

ஆவுடையப்பனும் அரை குறையாய் கரைத்து குழாய் முழுக்க நிரப்பி விட்டான். சாணி குழாயினுள் நன்றாக இறுகிவிட்டது. அதை சரி செய்ய முதலாளிக்கு ஆயிரம் ரூபாய் செலவாகி விட்டது.

ஆவுடையப்பனை அடிக்க கை ஓங்கிவிட்டு யார் சொல்லி செஞ்ச என்றார். செய்ய சொன்னவனை திட்டிவிட்டி நகர்ந்தார்.

மருந்தடிக்க மணி காலையிலே தோட்டத்துக்கு வந்தான்.
ஆவுடையப்பன் அவனிடம் நான் மருந்தடிக்கட்டுமா என்று கேட்டான்.

எய்யா ராசா, இது விசம், தண்ணீ சரியா விட்டு கலக்கலைனா செடி கருகி போகும். எக்குதப்பா ஏதாச்சும் பண்ணுணன்னா கிணத்து தண்ணீ பூரா விசமாயிரும் என்றான் மணி.

அந்த கிராமத்தி, ஆற்றில் தண்ணீர் வரும் போது கால்வாய் வழியாக தண்ணீர் குளத்துக்கு வரும்.

பக்கத்துக்கு ஊர் குளத்துக்கு 70 சதவீதமும் இவர்கள் ஊருக்கு 30 சதவீதமும் தண்ணீர் வரும்.

இந்த ஆண்டு குளத்துக்கு தண்ணீர் வரவில்லை ஆனால் பக்கத்து ஊருக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

என்ன என்று போய் பார்த்தால் 30% தண்ணீரும் பக்கத்து ஊருக்கு போகுமாறு தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்ததது.

ஊர்க்காரர்கள் சிலர் போய் அந்த சுவரை உடைந்து விட்டனர்.
பக்கத்து ஊர்காரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவலர்கள் வந்து விசாரித்தனர். ஊர்க்காரர்கள் தங்கள் உரிமையை எடுத்து கூறினர்.
உங்களுக்கு உரிமை இருப்பதால் அரசு சுவரை உடைக்கக்கூடாது. ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து உரிமையை பெற வேண்டும் என்றார் காவலர்.

கடைசியாக ஆவுடையப்பன் தான் விவரமில்லாமல் சுவரை உடைத்ததாய் ஆவுடையப்பனை கை காட்டினர்.

ஆவுடையப்பனை காவல் நிலையம் கூட்டி போய் நைய புடைத்தனர். யாரெல்லாம் செஞ்சீங்க என்றனர்.

நான் மட்டும் தான் என்றான்.

எதுக்கு உடைச்ச என்றனர்

மாடு குளுப்பாட்ட கொளத்துல தண்ணீ இல்ல அதான் என்றான்.

சாயங்காலமாய் இப்ப நீ போ நாளைக்கு திரும்ப விசாரிப்போம் என்று அனுப்பி வைத்தனர்.

உடலெங்கும் வலியோடு திரும்பினான்.
அவனுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. முதலாளியம்மா அதுக்கும் திட்டிவிட்டு போனாள்.

தாயம்மா பாட்டி தான் சுக்கு தண்ணீ கொண்டு வந்து கொடுத்தாள்.

கொஞ்ச நேரம் வானத்தை பார்த்து கொண்டிருந்தான். அழவில்லை ஆனால் கண்ணீர் வடிந்தது.
வலியோடு தூங்கி போனான்.

மறுநாள் ஊரில் அனைவரும் ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.
சாயங்காலம் ஒரு மாடு மேய்க்கும் அலறி கொண்டு ஓடி வந்து சொன்னான்.

"ஆவுட மருந்த குடிச்சிட்டான்".

ஆவுடையப்பனை ஊருக்கு தூக்கி வந்தனர். வாயில் நுரை தள்ளியிருந்தது.
சண்முகைய்யா தாத்தா நாடி பார்த்து உடைந்து போய் சொன்னார்.

"சீவன் போயிருச்சு".

ஒரு பைத்திகார பயல கொண்ணுடீங்கள பாவிகளா என்று சொல்லிவிட்டு அழுதார்.

கருக்கலில் வந்தவன் கருக்கலில் போய்டானே என்று ஒப்பாரி வைத்தாள் தாயம்மா பாட்டி.

Sunday 26 April 2020

தல 49

1.தல + கார்த்திக்
தலயும் கார்த்திக்கும் சேர்ந்து நடித்த படங்கள் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் ஆனந்த பூங்காற்றே. பரஸ்பர உடன்படிக்கையால் இருவரும் ஒரு படத்தில் கௌரவ தோற்றம். உ.எ.கொ வில் தலக்கு ஒரு பாட்டு மட்டுமே. ஆனந்த பூங்காற்றேவில் கார்த்திக்குக்கு மூன்று பாட்டு உண்டு.

2. தல + பார்த்திபன்
தலயும் பார்த்திபனும் இரண்டு படங்கள் சேர்ந்து நடித்துள்ளனர். தலா ஒன்று கௌரவ தோற்றம். இரண்டுமே சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு. புதுமுக இயக்குநர்கள். இரண்டிலும் தல மிலிட்டரி ஆபிஸர்.

3. தல 25 தல 50
தல 25 வது படம் அமர்க்களம். 50வது படம் மங்காத்தா. அமர்க்களத்தில் கதாநாயகியை காதலிப்பதாய் நடித்து அவர் அப்பாவை பழி வாங்குவது. மங்காத்தாவில் கதாநாயகியை காதலிப்பதாய் நடித்து அவர் அப்பாவிடம் கொள்ளை அடிப்பது. இரண்டு படத்திலுமே தியேட்டர் முக்கிய பாத்திரம். அமர்க்களம் A யில் ஆரம்பித்து Mல் முடியும் (Amarlalam).மங்காத்தா Mல் ஆரம்பித்து Aல்முடியும்(Mankantha).

4. தல+ தேவா
தல அஜித்க்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்த படங்கள். வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, பகைவன், ரெட்டை ஜடை வயசு, நேசம், உன்னைத்தேடி, வாலி, முகவரி, சிட்டிசன் மற்றும் ரெட். கிட்டதட்ட எல்லா படங்களிலும் பாட்டு ஹிட்.

5.அல்டிமேட் ஸ்டார்
தல பெயர் டைட்டிலில் அல்டிமேட் ஸ்டார் என இடம்பெற்ற படங்கள்
உன்னைகொடு என்னை தருவேன், சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜனா, ஜி, பரமசிவன், திருப்பதி, வரலாறு, ஆழ்வார், கிரீடம், பில்லா,  ஏகன் மற்றும் அசல்.

6. பெண் இயக்குநர்
தல பெண் இயக்குநர் சுஷ்மா இயக்கத்தில் நடித்த படம் உயிரோடு உயிராக. வெளியான ஆண்டு 1998.

7. ப்ரேம புஸ்தகம்
தல நடிச்ச ஒரே தெலுங்கு படம் ப்ரேம புஸ்தகம். படப்பிடிப்பில் இயக்குநர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் இறந்து விட அவரின் அப்பா கொல்லபுடி மாருதி ராவ் மீதி படத்தை இயக்கி முடித்தார். காதல் புத்தகம் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது.

8. ஆசை நாயகன்
டைட்டிலில் ஆசை நாயகன் என்று இடம் பெற்ற படங்கள். வான்மதி, பகைவன், ஆனந்த பூங்காற்றே, நீ வருவாய் என.

9. தயாரிப்பாளர்கள்
பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தல படம் நடித்து கொடுத்துள்ளார்.
(1) ஏவிஎம்
(2) விஜயா புரோடக்ஷன்ஸ்
(3) சுஜாதா சினி ஆர்ட்ஸ்
(4) சிவாஜி புரோடக்ஷன்ஸ்

10. மகா திரைப்படம்
மகா படம் தல நடிப்பில் முதல் போலிஸ் கதையாய் வந்திருக்க வேண்டிய படம். பாதியில் நின்று விட்டது. நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் AP ரவி ராதா இயக்கிய படம். தல ரேஸில் கலந்து கொண்ட போது காரில் "மகா தீ மூவி" என்று எழுதி இருந்தது.

11. அமராவதி, பவித்ரா, வான்மதி
தலயின் முதல் ஆறு படங்களில் மூன்று படங்கள் கதாநாயகியின் பெயரை தலைப்பாக கொண்டவை. கடின உழைப்பால் தல இப்போது மாஸ் ஹீரோ.
என்னை தாலாட்ட வருவாளா படமும் வெண்ணிலா என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

12. அறிமுகம்
என் வீடு என் கணவர் படத்தில் தல வருவது ஒரு சில நிமிடங்களே. டைட்டிலில் தல பெயர் இடம் பெற்றதா என்பது தெரியவில்லை. அமராவதியில் அறிமுகம் அஜித் குமார் என்று இடம் பெற்றது. ப்ரேம புஸ்தகத்தில் தல பேர் ஸ்ரீகர் என்றே இடம் பெற்றது.

13. ஓ சோனா
தல சொந்த குரலில் பாடியது இல்லை என்றாலும் ஓ சோனா பாட்டில் நடுவில் வசனம் வருவதால் அந்த பாட்டு பாடியவர் பெயரில் அஜித் உண்டு.

14. இசையமைப்பாளர்
தலக்காக பாட்டு பாடிய இசையமைப்பாளர்கள்.
தேவா- பிள்ளையார்பட்டி ஹீரோ
இளையராஜா- சேர்ந்து வாழும்
யுவன்- அகலாதே
தேவிஸ்ரீ- நல்லவன்னு
இமான்- அடிச்சு தூக்கு
ஸ்ரீகாந்த் தேவா- மயிலே மயிலே
அனிருத்- ஆலுமா டோலுமா

15. காதல் மன்னன்
காதல் மன்னன் தலக்கு திருப்புமுனை கொடுத்த படம். வான்மதி பிள்ளையார்பட்டி ஹீரோ பாட்டில் கருணை வச்சா நானும் ஹீரோப்பா என வரும். கன்னி பெண்கள் நெஞ்சுக்குள் பாட்டு இரண்டு ஆண்டில் தலயின் வளர்ச்சியை காட்டும்.

16. கலைஞர் விழா
கலைருக்கு நடந்த பாராட்டு விழா மேடையில்,  விழாவுக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று தல பேசினார். மற்ற நடிகர்கள் நமக்கு ஏன் வம்பு என்று அமைதியாய் இருந்த போது தைரியமாய் உண்மையை சொன்ன ஒரே நடிகர் தல.

17. பாலா
இயக்குநர் பாலாவின் நந்தா படத்தில் தல நடிப்பதாய் இருந்தது. பின்னர் படத்திலிருந்து விலகினார். பல வருடங்களுக்கு பிறகு பாலாவுடன் இணைந்து நான் கடவுள் படத்தில் ஒப்பந்தமானார். முடி வளர்த்தார். பாலா தயாரிப்பு நிறுவனம் மூலம் படம் தயாரிக்க முடியவில்லை. பாலா வேறு தயாரிப்பாளரை தேடினார். படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆனதால் தல படத்தில் இருந்து விலகினார்.பாலா சண்டை போட்டு அட்வான்ஸை வட்டியுடன் வாங்கி விட்டார். (ஆழ்வாரில் கடவுள் நான் கடவுள் என்று வசனம் வைக்கப்பட்டது).

18. பூரணசந்திர ராவ்
பூர்ண சந்திர ராவ் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் ஏறுமுகம் படம் தொடங்கபட்டது. சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின் தல படத்திலிருந்து விலகினார். ஊடகங்களின் அஜித்க்கும் பூர்ண சந்திர ராவ்க்கும் சண்டை, அஜித்க்கும் சரணுக்கும் பனிப்போர் என்று செய்திகள் வந்தன. தல அதற்கு பின் பூர்ண சந்திர ராவ் தயாரிப்பில் நடிக்கவில்லை. சரண் இயக்கத்தில் அட்டகாசம் மற்றும் அசல் படத்தில் நடித்தார்.

19. காஜா மைதீன்
காஜா மைதீன் ரோஜா கம்பைன்ஸ் நிறுவனர். தல இவரது தயாரிப்பில் நடித்த படங்கள் ஆனந்த பூங்காற்றே மற்றும் ஜனா. இவர் 2005ல் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு காரணம் அஜித் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியது. உண்மை காரணம் காஜா தயாரித்த வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் தோல்வியே. ஜனா படம் சரியாக போகாவிட்டாலும் டிவி உரிமை நல்ல விலைக்கு போனது.

20. குறுகிய இடைவெளியில் வெளியான தல படங்கள் அமர்க்களம் மற்றும் நீ வருவாய் என.
அமர்க்களம் - 13-08-1999
நீ வருவாய் என- 15-08-1999

21. அதிக இடைவெளியில் வெளியான தல படங்கள். வேதாளத்துக்கு பின் கிட்டதட்ட இரண்டு ஆண்டுக்கு பின் விவேகம்.
வேதாளம் - 10-11-2015
விவேகம் - 28-08-2017

22. தல குடும்பம்
தலயின் அப்பா - சுப்பிரமணியன்
அம்மா - மோகினி
அண்ணன் - அனுப் குமார்
தம்பி - அணில் குமார்
மனைவி- ஷாலினி
மைத்துனர்- ரிஷி ரிச்சர்டு
மைத்துனி - ஷாம்லி
மகள்- அனோஸ்கா
மகள்-ஆத்விக்

23. தல ரேஸ்களம்
தல கார் ரேஸ்ஸில் பெரிய ஆர்வம் கொண்டவர். தல கலந்து கொண்ட பெரிய கார் பந்தயங்கள்.
1) BMW Asia championship - 2003
2) Formula 2 -2010

24. தல பொங்கல்
பொங்கலுக்கு வெளியான தல படங்கள்
விஸ்வாசம், வீரம், ரெட், தீனா, தொடரும், நேசம் மற்றும்  வான்மதி

25. தல தீபாவளி
தீபாவளிக்கு வெளியான தல படங்கள்
வேதாளம், வரலாறு, வில்லன், அட்டகாசம், ஆஞ்சநேயா மற்றும் பவித்ரா

26. தல விளம்பரங்கள்
தல சினிமாவுக்கு வருவதற்கு முன் நடித்த விளம்பரங்கள் "மியாமி குசன்" செருப்பு மற்றும் ஜென்சன் வேட்டிகள்*.
சினிமாவுக்கு வந்த பின் நடித்த விளம்பரம் "நேஸ் கபே சன்ரைஸ்".
தல குளிர்பான விளம்பரங்களில் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

27. தல கிசுகிசு
தல பற்றி கிசுகிசு என்றால் நடிகை சுவாதியுடன் காதல் மற்றும் நடிகை ஹீராவுடன் காதல். திருமணத்துக்கு பின் எந்த கிசுகிசுவும் கிடையாது.

28. தல சமூக அக்கறை
அட்டகாசம் டைட்டிலிலல் முதன்முறையாக புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என போட சொன்னார்.
மங்காத்தாவுக்கு பின் தல குடிப்பது போன்ற காட்சிகள் எந்த படத்திலும் இல்லை.
தல அன்பான அண்ணன், கணவன், அப்பா போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறார்.

29. தல+ சிவா
தல சிவா கூட்டணி வெற்றி கூட்டணி.  ஒரே இயக்குனருடன் தொடர்ச்சியாக மூன்றாவது படம் யாரும் செய்யாத துணிவு. அது தல சிவாவின் மீது கொண்ட நம்பிக்கை.

30. தல+ புகழ்பெற்ற பிரபலங்கள்
தலயுடன் ஜெமினி தொடரும் படத்தில் நடித்துள்ளார்.
ஆச்சி மனோரமா- உன்னைத் தேடி & ஆழ்வார்
தல MS விஸ்நாதனுடன் காதல் மன்னன் படத்தில் நடித்துள்ளார்.
ரகுவரன்- பாசமலர்கள், உல்லாசம், அமர்க்களம், ரெட், ஆஞ்சநேயா & ஜனா.
S.P.பாலசுப்பிரமணியம்- உல்லாசம் படத்தில் அப்பாவாக நடித்துள்ளார்.

31. தல + பிரசாந்த்
கல்லூரி வாசல் படத்தில் தலயும் பிரசாந்தும் சேர்ந்து நடிந்தனர். அந்த பட விழாவின் போது பிரசாந்துக்கு கொடுத்த மரியாதையை அஜித்துக்கு தரவில்லை. தல அதற்குபின் விழாக்களில் பங்கேற்பதில்லை. சமகால நடிகரான பிரசாந்த் இப்போது காணாமல் போய்விட்டார்.

32. தல விஜய் சண்டை
விஜய் தான் சண்டையை துவக்கியது யூத் படம் மூலம். அதற்கு பின் திருமலை, கில்லி, வசிகரா, சுக்ரன்,சச்சின் என ஆதி வரை தொடர்ந்தது. தல பதிலடி கொடுத்த ஒரே படம் அட்டகாசம்.

33. Prequel (முன்கதை) படம்
பார்ட்2 படங்களில் எல்லா நடிகர்களும் நடித்து விட்டனர். தல நடித்த பில்லா II வின் சிறப்பு பில்லா ஆவதற்குமுன்னால் நடக்கும் கதை. எப்போதும் ஒருபடம் வந்து குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தான் பார்ட் 2 எடுப்பார்கள். ஆனால் முன்கதையை கதாநாயகனின் முகத்தோற்றத்தை இளமையுடன் காட்ட வேண்டும். தமிழில் ஒரே ஒரு prequel தலயின் பில்லா II.

34. Hobbies
தல ஹெல்மெட், மினியேச்சர், நாணயம் மற்றும் தபால் தலை சேகரிப்பில் ஆர்முள்ளவர். பெரிய சேகரிப்பு அவர் வீட்டில் வைத்துள்ளார்.

35. புத்தக வாசிப்பு
தல புத்தக வாசிப்பிலும் ஆர்வம் உள்ளவர். அவருக்கு பிடித்த புத்தகங்கள்
The Teaching of Buddha
Living with the Himalayan Masters- இந்த புத்தகம் ரஜினி தலக்கு பரிசளித்தது.

36. சினிமாவுக்கு முன்
ஆசான் மேமோரியல் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு ஒரு ஆட்டோமோபைல் கம்பெனியில் அப்ரண்டிஸ் ஆக பணியாற்றினார். பிறகு கார்மெண்ட் கம்பெனியில் வேலை. அதற்கு பிறகு விளம்பர படம்.

37. திரைக்கதை ஆசிரியர்
தல அசல் படத்தில் திரைக்கதை ஆசிரியராக (Screen writer) பணியாற்றினார்.

38. புகைப்படகலை
தல அஜித்க்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் அதிகம். வீரம் படப்பிடிப்பில் அப்புக்குட்டியை அழகாய் படம் எடுத்தார். வேதாளம் படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனை படம் பிடித்தார். அத்தனையும் தரம்.

39. தல ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தல Reference வைத்து வருவது நிறைய படங்கள் உண்டு. கதாநாயகன் தல ரசிகராய் நடித்த படங்கள்.
மன்மதன்
மாயாவி
மாப்பிள்ளை
பில்லா பாண்டி

40. சாருமதி
தல நடிப்பில் பாடல் மட்டும் வெளியான படம் சாருமதி. தேவா இசையமைத்த பாடல்கள் இணையத்தில் உள்ளது. படம் வெளியாகவில்லை.

41. Dropped Movies 2
தல நடிப்பில் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து தல விலகிய / கைவிடப்பட்ட படங்கள்.
மகா
ஏறுமுகம்
நான் கடவுள் ( முடி மட்டும் வளர்த்தார் தல)
திருடா
நேருக்கு நேர்

42. Dropped Movies 2
தல அஜித்தின் பர்ஸ்ட் லுக்கோடு முடிந்த படங்கள்.
நந்தா
மிரட்டல்
இதிகாசம்
காங்கேயன்
நியூ

43. உல்லாசம்
உல்லாசம் தல விக்ரம் சேர்ந்து நடிச்ச படம்.
விக்ரம் தான் அமராவதி படத்தில் அஜித்க்கு பின்னணி பேசியவர்.
அமிதாப் பச்சன் தயாரித்த தமிழ் படம்.
கார்த்திக் ராஜா இசையில் முத்தே முத்தம்மா பாடலை கமல் பாடினார்.
ஜேடி- ஜெர்டி இரட்டை இயக்குநர்கள் இயக்கிய படம்.

44. SJ சூர்யா
SJ சூர்யா ஆசை படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். பிறகு உல்லாசம் படப்பிடிப்பின் போது வாலி கதையை தலயிடம் கூறினார். வாலி தல இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம். தல வில்லனாக நடித்த படமும் கூட. வாலி படம் வெளியான பின் தல SJ சூர்யாவுக்கு அளித்த பரிசு கார்.

45. வேறு தலைப்புகள்
அஜித்க்கு அல்டிமேட் ஸ்டார் & ஆசை நாயகன் என்பதை பிற பட்டங்கள் கொடுத்த படங்கள்.
லக்கி ஸ்டார் - அமர்க்களம்

ஆணழகன் - மைனர் மாப்பிள்ளை
ஆக்சன் ஹீரோ - என்னை தாலாட்ட வருவாளா

46. படம் வெளியாகாத ஆண்டுகள்
தல படம் வெளிவராத ஆண்டுகள் 2009, 2016 & 2018

47. ரசிகர் மன்றம்
தல தனது 40வது பிறந்த நாளின் போது ரசிகர் மன்றங்களை கலைத்தார். எந்த நடிகரும் செய்யாத செயல்.


48. விழாக்கள்
சினிமாவில் ஆரம்பகட்டத்தில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக தல பட விழாக்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அதே சமயம் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொண்டார்.

49. தொழில் நுட்ப கலைஞர் நலன்.
தல எப்போதும் தொழில் நுட்ப கலைஞர்கள் நலனில் அக்கறை உள்ளவர். பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது அவர்களுக்கு ஆதரவாய் இருந்தார்.தொழில் நுட்ப கலைஞர்கள் கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்.


Reference: Internet
Photo courtesy : Internet

Sunday 19 April 2020

மனசுக்கு பிடிச்ச பாட்டு 3

சில பாடல்கள் கேட்கும் போது ஏதோ ஒரு இடமோ இல்லை முகமோ நினைவில் வரும்.

அந்த வகையில் நண்பன் ரிஸ்வானை நினைவு படுத்தும் பாட்டு.

"மழை நின்ற பின்பும் தூறல் போல" - ராமன் தேடிய சீதை.

பெண்குரல் தனித்து பாடும் பாடல்கள் என் மனதுக்கு எப்போதும் ஆறுதல் தர கூடியவை. அது ரிஸ்வானுக்கு நன்றாய் தெரியும். அதனால் மழை நின்ற... பாடலை எனக்கு அறிமுக படுத்தினான்.
எனக்கும் கேட்டவுடன் பிடித்து விட்டது.

இதில் இன்னொரு விசயம் இந்த பாடலில் சில காட்சிகள் எங்கள் கல்லூரியினுள் படமாக்கப்பட்டவை.

ரிஸ்வான் அறைத்தோழன், அலுவலக தோழன், கிரிக்கெட் தோழன் ...
மழை நின்ற பிறகு தூறல் போல நினைவில் நிற்பவன்.

Friday 17 April 2020

ரயில் பயண கவிதை


நான் மேலிருக்கையில்
போய் அமர்ந்த போது
கீழிருக்கையில் எதிரே
வந்தமர்ந்தாள்
அந்த அழகு தேவதை.

நெற்றியில் தவழும் முடியை ஒதுக்கி கொண்டே
அலைபேசியில் ஏதோ
பார்த்து கொண்டிருந்தாள்.
எனது அலைபேசியிலும்
புதுப்படம் இருந்தது.
புதுக்கவிதையை தான்
பார்த்து கொண்டிருந்தேன்

அவளுக்கான நடு இருக்கையை
மாட்டிய பின்பு
தலைமுடியை நன்றாய்
கட்டிவிட்டு இருக்கையில்
ஏறினாள்.
வலைதளத்தை பார்க்க
துவக்கையில்
மேல்தளத்தில் இரு கண்கள் பார்ப்பதை
கவனித்தவளின்
கண்களில் வெட்கம்
தெரிந்தது.
இரவு விளக்கொளியில்
பார்த்தேன்
ஒரு குழந்தை போல்
தூங்கி கொண்டிருந்தாள்.

காலையில் நான் கண்
விழித்த போது
கவிதையை காணவில்லை.
அதிகாலையில் அவள் இறங்கி சென்றிருப்பாள்.
அவள் எனக்கு முகவரியோ
அலைபேசி எண்ணோ
தரவில்லை.
அழகான கவிதையை
தந்து சென்றாள்!!!

Sunday 12 April 2020

சாய் சுவாசிகா- அகவை 1

பெண்குழந்தை பிறந்துள்ளது
என்று மருத்துவர் வந்து
சொன்னது நேற்று
நடந்தது போல் உள்ளது
ஓராண்டை தொட்டுவிட்டது!

இந்த ஓராண்டில்
மழலையர் பாடல்கள்
மனப்பாடம் ஆகிவிட்டது!

பொம்மைகளுடன் விளையாடும்
வித்தை கற்றுகொண்டோம்!

அலுவலக அலுப்பு
எங்கள் மகளின்
புன்சிரிப்பில் மறைந்துவிடுகிறது!

செல்லமகளுக்கு பிடித்த
பாடல்கள் விளம்பரங்கள்
எங்கள் செல்போனை நிறைத்துள்ளன!

சிறுநீரால் எங்கள் ஆடைகளில்
சித்திரம் வரைந்தவள்
நடக்கும் போது ஒலிக்கும்
கொலுசின் ஓசை கேட்க
எங்கள் வீட்டு அறைகள்
காத்திருக்கின்றன!

அவளின் கிறுக்கல்களுக்காக
வண்ணம் பூசிய சுவர்கள்
தயாராய் இருக்கின்றன!

பிறந்தநாள் வாழ்த்துகள்
ப்ரியமான மகளே!!!

அவளதிகாரம்

மாலை அலுவலகம்
முடிந்து வீடு திரும்பியதும்
புன்னகைத்து சிரித்து
குதித்து வரவேற்கிறாள்!

நேரம் ஆக ஆக
அடி, உதை, கடி என
தொடர்கிறாள்!

களைப்பாகி தூங்கியும்
போகிறாள்!

காலையில் எழுந்து
பார்க்கும் போது நான்
வீட்டில் இல்லாததை
கண்டு " நேத்து கொஞ்சம்
ஓவரா போயிட்டோமோ"
என நினைத்து
மீண்டும் சாயங்காலம்
புன்னகைத்து
வரவேற்கிறாள் என் செல்லம்!!!

மகளதிகாரம் 3

அவளதிகாரம்
மகளதிகாரம்
சின்னவளின் புன்முறுவல்
பிஞ்சு பாதம்
செல்லத்தின் சின்ன கோபம்
தங்கத்தின் சேட்டை
மழலை பேச்சு

தலைப்புகளை தந்துவிட்டாள்
தங்கமகள்
என்று எழுத போகிறேனோ
கவிதையை பற்றிய
கவிதைகளை!

Friday 10 April 2020

மனசுக்கு பிடிச்ச பாட்டு 2

சில பாடல்கள் கேட்கும் போது ஏதோ ஒரு இடமோ இல்லை முகமோ நினைவில் வரும்.

அந்த வகையில் தற்போது ராணுவத்தில் பணியாற்றும் பள்ளித்தோழன் SS முருகனை நினைவு படுத்தும் பாட்டு.

"கிடைக்கல கிடைக்க பொண்ணு ஒண்ணும்"...

12ம் வகுப்பில் ஒருநாள் இயற்பியல் ஆசிரியர் யாரையாவது முன்னே வந்து பாட சொன்னார். முருகன் 110 பேர் கொண்ட வகுப்பில் முன்னே நின்று பாடினான். விடுதியிலும் அடிக்கடி இந்த பாட்டை பாடுவான் முருகன்.

எனது பள்ளி பருவம்

ஆறாம் வகுப்பில் முதன் முதலாய்
தூய யோவான் மேனிலை பள்ளியில்
பயத்துடனே நுழைந்தேன்.
நட்பு வட்டாரம்
என்னை அரவணைத்து கொண்டது.

ஏழாம் வகுப்பில் மதிய உணவை
எஸ்பி ஆபிஸ் வளாகத்தில்
போய் சாப்பிடும் தைரியம்
வந்தது.

எட்டாம் வகுப்பில்
சைக்கிளில் பாளை நகர
வலம் வர துவங்கினேன்.

ஒன்பதாம் வகுப்பில்
கிரிக்கெட் என்னை
ஆட்கொண்டது.
விளையாட தெரியாவிட்டாலும்
கலந்துகொண்டேன்.

பத்தாம் வகுப்பில்
முதன்முறையாய்
விடுதி வாழ்க்கை.
ஒரு வாரத்திற்கு பின்
விடுதியிலும் நட்பு
மலர்ந்தது.

பதினோறாம் வகுப்பில்
முதல் சினிமா
வீட்டுக்கும் விடுதிக்கும்
தெரியாமல்.
ஒரு வாரம் NSS கேம்ப்
மல்லகுளத்தில்
ஆனந்த கொண்டாட்டம்.

பனிரெண்டாம் வகுப்பில்
விடுதியில் இருந்து
வெளியில் சென்று
டியுசன்.
கிரிக்கெட் உலகக் கோப்பை
கடைசியாய்
கம்பியூட்டர் சயின்ஸ் தேர்வு.

சதக்கத்துல்லா கல்லூரியில்
நுழைவு தேர்வு எழுதிய
நாளில் பள்ளி பருவம்
முடிந்து விட்டது.





SBC 46ல் ஒரு இனிய பயணம்



ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் ஏறினால் “டவுன் டவுன்” என கத்தி கொண்டே நடுத்துனர்கள் பேருந்தை பஸ் ஸ்டாண்டின் கடைசி விளிம்பு வரை அழைத்து செல்வார்கள்.

அங்கிருந்து கிளம்பி தேவர் சிலை அருகே "u " டர்ன் எடுத்து ஸ்வாமி நெல்லையப்பர் சாலையில் பயணிக்கும். திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தை கடந்த பின் சென்ட்ரல் ரத்னா தியேட்டர்களில் என்ன படம் என்று தெரிந்து கொள்ளலாம்.

கோவில் வாசல் பேருந்து நிறுத்தத்தில் மொத்த டவுன் கூட்டமும் இறங்கி விடும். கோவில் வாசலில் நுழையும் போது நெல்லையப்பரை தரிசிக்கலாம்.கீழ ரத வீதி, தெற்கு ரத வீதியில் பயணித்து மேல ரத வீதியில் சந்தி பிள்ளையார் கோவில் அருகே பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் டீ குடிக்க செல்வார்கள். மேல ரத வீதியில் பயணித்து தொண்டர் சன்னதியை அடையும் போது தொண்டர் நயினாரை தரிசிக்கலாம்.

மணிகண்ட விலாஸ் பாறையடியை கடந்து குருநாதன் கோவிலில் பேருந்து வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கும்.
இலந்தை குளம், சர்ச் கடந்தால் ராமையன்பட்டியில் சங்கரன்கோவில் நெடுஞசாலையில் இணைத்து கொள்ளும்.

வேகமெடுத்து  செல்வதால் சிவாஜி நகர், பங்களா , கால்நடை மருத்துவ கல்லூரி , போலீஸ் காலனி , சேதுராயன் புதூர் (சேரா ஊத்து ) விலக்கு வேகமாக கடக்கலாம். கற்குவியல்களையும் தோண்டப்பட்டு கொண்டிருக்கும் கிருஷ்ணா மைன்ஸ் (கிருஷ்ணா சூப்பர் - தமிழ் நாடு பிரீமியர் லீக் முக்கிய விளம்பரதாரர்) கல் குவாரியையும் காணலாம் .

நரியூத்து விலக்கை கடந்து சென்றால் மதவக்குறிச்சி வெங்கலப்பொட்டல் விலக்கும் ரஸ்தா (ரஸ்தா என்றால் ஹிந்தியில் பாதை என்று பொருள்) ஊரும் ஒருசேர வந்து விடும். கரம்பை விலக்கு மாவடி விலக்கு குத்தாலப்பேரி விலக்குகளை கடந்தால் ஒரு அபாயகரமான வளைவுடன் மானூர் வரவேற்கும்.

சுற்று வட்டாரத்தில் எல்லா (ஓரளவுக்கு) வசதிகளும் அமைய பெற்ற ஊர் மானூர் . மானூரை தாண்டி தண்ணீர் இருந்தால் மோர்குளத்தை ரசிக்கலாம். பார்வதியாபுரம் விலக்கை கடந்ததும் பிள்ளையார் குளம் ஊராட்சி வரவேற்கும்.

நெடுஞசாலையில் இருந்து விலகி கிராம சாலையில் நுழைந்து விடும். காற்றாலை மிக அருகில் வந்து விடும். மேலபிள்ளையார் குளத்தில் நுழைந்து சில பல திருப்பங்களை கடக்கும் பேருந்து. வயல்வெளியில் பேருந்து செல்வது போல் தோன்றினால் நடுப்பிள்ளையார் குளம் வந்து விடும்.
நடுப்பிள்ளையார் குளத்தை கடந்ததும் கீழ பிள்ளையார்குளத்தின் குறிச்சி நகர் வந்து விடும்.

முக்கு ரோட்டில் வடக்கு நோக்கி திரும்பிய பின்
கீழ பிள்ளையார்குளத்தின் கரையில் பேருந்து பயணிக்கும். வட்ட வடிவிலான பேருந்து நிலையம் வரவேற்கும். அவசரப்பட்டு இறங்க வேண்டாம் இன்னும் பயணிப்போம். பேருந்து செல்ல முடியுமா என்று நினைக்க வைக்கும் குறுகிய சாலையில் கிழக்கு நோக்கி பயணிப்போம். நாய் குட்டி குளம் கீழ குளக்கரையில் 1 கிமீ பயணம் சென்றதும் தனுஷ் கோடி நகர் கற்பக விநாயகர் கோவில் முன்பு பேருந்து திரும்பும்.

அவசர பட்டு இறங்க வேண்டாம் ஓட்டுநர் ரிவர்ஸ் எடுத்து தான் நிறுத்துவார்.


Monday 6 April 2020

கொடிய வைரஸ்

கொடிய வைரஸ்
கோரோனாவே

பணமிருப்பவர்கள் நிச்சயம்
பிழைத்து கொள்வார்கள்
ஏழைகளை வஞ்சிக்காதே!

விமானமேறி வந்த உனக்கு
விமானத்தை ஏறேடுத்து பார்த்து
மகிழும் ஏழைகளா எதிரி?

உன்னால் தான்
உலகப்போர் என்கிறார்கள்.
உன்னால் தான்
மத கலவரம் என்கிறார்கள்.
அவப்பெயர் உனக்கெதுக்கு?

உன் வரவால் மனிதகுலம்
நிறைய கற்றுக்கொண்டோம்.

உலகெல்லாம் சுற்றி
மகிழ்ந்த நீ
ஊரடங்கு முடிவதற்குள்
ஓடிவிடு!!!


Friday 3 April 2020

தல பட பாடல்கள்

காதலியை தேடுபவர்களுக்கு
கொஞ்சநாள் பொறு தலைவா
- ஆசை

கனவு காதலிக்காக
காஞ்சிப்பட்டு சேலை கட்டி...
- ரெட்டை ஜடை வயசு.

காதலை சொல்ல
ஹே பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி...
- ஏகன்.

காதலை சொல்லி முடிவுக்கு காத்திருக்கையில்
நாளை காலை நேரில் வருவாளா...
- உன்னைத்தேடி

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்...
- கண்டுகொண்டேன்.

உனை பார்த்த பின்பு
-காதல் மன்னன்

புத்தம்புது மலரே
-அமராவதி

காதலில் இருக்கும் போது
நலம் நலமறிய
-காதல் கோட்டை

ஒரு பௌர்ணமி நிலவு
- ராஜா

அக்கம் பக்கம்
-ஜி

காதலை ஏற்காமல் போனால்
காதல் என்ன கண்ணாம்பூச்சி
-அவள் வருவாளா

ஏ நிலவே
- முகவரி

அம்மாவின் அன்புக்கு
தாய்மடியே ...
- ரெட்
கொஞ்சம் கனவையும் கொஞ்சம்...
- ஜனா.

அப்பாவின் பாசத்துக்கு
சிங்கம் என்றால் என் தந்தை...
- அசல்.

அப்பா- மகன் நட்புக்கு
கனவெல்லாம் பலிக்குதே...
- கிரீடம்.

மகளின் செல்லத்துக்கு
உனக்கென்ன வேண்டும் சொல்லு...
- என்னை அறிந்தால்.
கண்ணான கண்ணே...
- விஸ்வாசம்

மனைவியின் காதலுக்கு
காதலாட காதலாட...
- விவேகம்
வானே வானே...
- விஸ்வாசம்
நடைபாதை பூவனங்கள்...
- நேர் கொண்ட பார்வை

இசையை கொண்டாட
ஹே ஹேஹே கீச்சு கிளியே
- முகவரி

நண்பர்களுடன் கொண்டாட
இது அம்பானி
- மங்காத்தா

தலயை கொண்டாட
சொல்லு தலைவா
-உன்னை கொடு என்னை தருவேன்

தகதிமி தகதிமி ஆட்டம்
- ஜனா

தல போல வருமா
-அட்டகாசம்