Friday 27 December 2013

என்ன பண்ண நண்பர்களே?

என்ன பண்ண ?
பூந்தமல்லியில் இருக்கும் போது ஒரு நாள்  ரிலையன்ஸ் ப்ரெஷ்ல் ஆப்பிள் வாங்க போனேன் ரெண்டு ஆப்பிள் வாங்கிட்டு பில் போட போனேன்.
ரெண்டு ஆப்பிள் 476 கிராம் வந்துச்சு அதுக்கு மட்டும் தான் பில்
போட்டாங்க.சார் கவர் வேணுமான்னு கேட்டாங்க, நானும் என்ன கேள்வி இது கவர் இல்லாம வாய்யிலைய கொண்டு போவாங்க என்று மனதுக்குள் நினைத்து கொண்டு கவர் வேணும்னு சொன்னேன்

ரெண்டு நாள் அப்புறம் ரோடு கிராஸ் பண்ண சோம்பேறிதன பட்டு
ரிலையன்ஸ் எதிர்ல தள்ளு வண்டி கடையிலே ஆப்பிள் வாங்கிட்டேன்
3 ஆப்பிள் அரை கிலோவவிட கூடுதலா வந்துச்சு.அரை கிலோ ரேட் வாங்கி கவர் வேணுமானு கேக்காம கவர்ல போட்டு கொடுத்தாங்க.

அப்புறம் ரூமுக்கு வந்து ரிலையன்ஸ் ஆப்பிள் பில்ல எதேச்சையா பார்த்தேன்.கவருக்கு காசு என்கிட்டே வாங்கிட்டாங்கனு தெரிஞ்சிது.

அண்மையில் megamart போயிருந்தேன் டிரஸ் எடுத்து பில்   போட்டா பில்லையும் டிரஸ்சையும் கைல குடுத்துட்டாங்க. நான் திரு திரு னு  முழிச்ச உடனே கேரி பேக் வேணுமா சார் 7 ரூபா கொடுங்கன்னு சொன்னான்.

எனக்கு கவருக்கு காசு குடுத்தது கூட கடுப்பு இல்ல. நான் காசு குடுத்து வாங்குற கவர்ல megamart நு அவன் விளம்பரம் வர்றது தான் கடுப்பு.

என்ன பண்ண நண்பர்களே?

அண்ணாச்சி கடைய பத்தி அங்காடி தெரு படம் எடுத்த வசந்த பாலனோ, ஐங்கரன் னோ  இவர்களை
பத்தி படம் எடுக்க முன் வருவார்களா !!!!!!!!!!!!