Saturday 27 March 2021

தல 50 ஸ்பெஷல்

தல நடிச்ச படங்களின் பாடல்களில் எனக்கு பிடித்த 50 பாடல்கள். ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடல் மட்டுமே தேர்வு செய்துள்ளேன்.

50. அனுகுன்னதி... பிரேம புஸ்தகம்

தல நடித்த ஒரே தெலுங்கு படமான பிரேம புஸ்தகத்தில் தேவேந்திரன் இசையில். இந்த சின்ன வயசு தல நன்றாக டான்ஸ் ஆடியிருப்பார்.

https://youtu.be/dAO_zLNkslI 

49. ஒரு கிளி ஆசையில்... பரமசிவன்

மது பாலகிருஷ்ணன் மதுரமான குரலில் பாடிய பாடல்.

https://youtu.be/0Sa4k3YvTjE

48. ஷாக் அடிக்கும் பூவே... தொடரும்

இளையராஜா இசையில் தல நடித்த ஒரே படம். ஹரிஹரன் குரலில் ஒரு குறும்பான பாடல்.

https://youtu.be/KsmdcqzwTck

47. ராஜனே யுவராஜனே... பகைவன்

அருண் மொழி, அனுராதா ஸ்ரீராம் குரலில் உருவான அழகான மெலடி.

https://youtu.be/xTZ4LWEp_-A

46. திருப்பதி வந்தா திருப்பம்... திருப்பதி

தல அறிமுக பாடல். பரத்வாஜ் இசையில சங்கர் மகாதேவன் குரலில் கம்பீரமான பாடல்.

https://youtu.be/6gWS-lDMYoQ

45. ஓ ரங்கநாதா ஸ்ரீ ரங்கநாதா... நேசம்

எஸ்பிபி சித்ரா குரலில் மெலடி. கேட்க தூண்டும் பாடல்‌.

https://youtu.be/pr85ZZAR_k0

44. மேலால வெடிக்குது வாடா... ஆரம்பம்

நண்பனோடு நட்பை கொண்டாடும் பாடல். வரிகளும் இசையும் தரம்.

https://youtu.be/B4ycOPaM-yk

43. வைகறையில் வந்தென்ன... வான்மதி

எஸ்பிபி சித்ரா குரலில் ரம்மியமான காதல் பாடல்.

(இதுபோல் தொடரும் இந்த காதல் கதை

காலம் உள்ள காலம் வரை...)

https://youtu.be/fsiqmcKkP0c

42. பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்... ஆழ்வார்

ஸ்ரீகாந்த் தேவா இசையில் மனதை மயிலிறகால் வருடும் மெலடி.

(ரொம்ப பிடிக்கும்...)

https://youtu.be/597WBB_2HM4

41. அகப்பொருளா நீ... ஆஞ்சநேயா

மெலடியில் மணிஷர்மா தனி இடம் பிடித்தவர். இந்த பாடலும் அதில் ஒன்று.

https://youtu.be/QDW-4IKRgY8

40. உன்னை கொடு என்னை தருவேன்...உகொஎத

அருமையான வரிகளை கொண்ட பாடல்.

(தாலட்டை கேட்காத சிறு பிள்ளை நானம்மா...)

https://youtu.be/hQAJFK-S7iM

39. மல்லிகை பூவே... உஎகொ

குடும்ப பாடல். ராஜ்குமாருக்கு உரித்தான இசை பாணியில் அமைந்தது.

(இந்த ஆனந்தம் ஒன்றே போதும்...)

https://youtu.be/VSZ8kHmB0w8

37.ஓ சோனா ... வாலி

தேவா தலக்கு  ஸ்பெஷலாக இசையமைப்பார். எப்போது கேட்டாலும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் பாடல்.

https://youtu.be/bmnQo4-iRKg

36. காதலாட காதலாட... விவேகம்

கணவன் மனைவி அன்னியோன்யத்தை விளக்கும் பாடல்.

(உன்னோடு வாழ்வது ஆனந்தமே...)

https://youtu.be/Cge0i-BeqKQ

35.அதிகாலையில் சேவலை... நீ வருவாய் என

திருமணத்துக்கு எதிர் நோக்கி இருக்கும் காதலன் காதலி பாடும் பாடல்.

https://youtu.be/uFw6v3q2CgQ

34. ஒரே மனம் ஒரே குணம்... வில்லன்

வித்யாசாகரின் போதை தரும் மெலடி. கொஞ்சம் மலரே மவுனமா சாயல் இருந்தாலும் தரமான பாடல்.

https://youtu.be/bEAe9jWYEG0

33. இது அம்பானி... மங்காத்தா

தலயின் ஐம்பதாவது படத்தில் தல செமயாக ஆடிய பாடல். பார்ட்டி சாங்.

(ஓடாம ரன் எடுத்தோம்...)

https://youtu.be/68ixlbMQaY0

32. ஆலுமா டோலுமா... வேதாளம்

இன்று தல படத்தில் ஆகச் சிறந்த குத்து பாடல். பல மேடைகளில் பலர் ஆட தேர்ந்தெடுக்கும் பாடல். அனிருத்தின் குரல் வலிமை.

https://youtu.be/2ogKpj5QuSY

31. ஹே பேபி பேபி... ஏகன்

காதலி பின்னால் அலைந்து காதலை சொல்லும் குறும்பான பாடல்.

தலயின் முக பாவனைகள் அட்டகாசம்.

https://youtu.be/3L-k54cughA

30. நீ பார்க்கின்றாய்... ராஜா

தல மேடையில் பாடுவது போல் அமைந்த பாடல். SA ராஜ்குமார் வித்தியாசமான இசையில்.

(ஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் நான் தாயின் மடி...)

https://youtu.be/rf9xZVY7Fb8

29. முத்தே முத்தம்மா... உல்லாசம்

கமல் பாடிய பாடல், கார்த்திக் ராஜா இசை, உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்.

https://youtu.be/nFcRCYddxkI

28.புத்தம் புது மலரே... அமராவதி

தலயின் முதல் படத்தின் மெலடி.

(இதயம் திறந்து கேட்கிறேன்...)

https://youtu.be/7ZakWJx0dlU

27. காதல் என்ன கண்ணாமூச்சி... அவள் வருவாளா

காதலி நிராகரித்து விட்டதால் சோகத்தோடு பாடும் பாடல்.

(உயிரை உரசும் காதல் அது ஓர்நாள் உனையும் பருகாதா...)

https://youtu.be/aAv-E-HZuuk

26. உனக்கென்ன வேணும் சொல்லு... என்னை அறிந்தால்

அப்பா மகள் பாடல். தாமரை வரிகள்.

பாடலை பார்க்கும் போது நாமும் மகளோடு ஊரெல்லாம் சுற்ற வேண்டும் எ ஆசை வரும்.

https://youtu.be/SdcAN3dobz4

25. இதயம் இந்த இதயம்... பில்லா II

இந்த பாடல் படத்தில் இருக்கும் ஒரே மெலடி. அந்த குரல் மனதை வருடும்.

https://youtu.be/n9D5lCUDcAc

24. செவ்வானம் சின்னப்பெண்... பவித்ரா

ஏஆர். ரஹ்மான் இசையில் அழகான மெலடி. தல பைக் ஓட்ற அழகு.

https://youtu.be/KPrRdmmuKc8

23. காதல் வந்ததும்... பூவெல்லாம் உன் வாசம்

சாதனா சர்கம் குரலில் ஆரம்பித்து நடுவில் யேசுதாஸ் சேர்ந்து கொள்ளும் ரம்மியமான காதல் பாடல்.

https://youtu.be/CzaZcqrMxQY

22. உன்னை பார்த்த பின்பு... காதல் மன்னன்

ஒலியும் ஒளியும் இருந்த காலத்தில் என்ன பாட்டுடா இது என்று வியக்க வைத்த பாடல்.

(நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னை தொட துணிந்தேன்...)

https://youtu.be/2y8zE4L3p60

21. நாளை காலை நேரில்... உன்னை தேடி

காதலை சொல்ல காத்திருக்கும் முந்தைய நாளின் வலி.

(வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா..)

https://youtu.be/zthKDAQggZw

20. செம்மீனா விண்மீனா... ஆனந்த பூங்காற்றே

காதலியை வர்ணிக்கும் பாடல் வரிகள்.

(வெண்சங்கில் ஊறிய கழுத்தோ அதில் ஒற்றை வேர்வை துளியாய் நான் உருண்டிட மாட்டேனோ...)

https://youtu.be/KScBbaACQKw

19. டிங் டாங் கோவில் மணி... ஜி

தல பாடல்களை வேண்டுமென்றே மீடியாக்கள் ஒதுக்கிய காலத்தில் முதல் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்ட பாடல்.

ஆரம்ப ஹம்மிங்லே மனம் பறிபோகும்.

https://youtu.be/plDHZTLCs4U

18. சந்தன தென்றலை... கண்டுகொண்டேன்

என் காதலை ஏற்று கொள் என காதலன் கெஞ்சும் பாடல்.

(இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி...)

https://youtu.be/DA14OC11Fcc

17. மேகங்கள் என்னை... அமர்க்களம்

பல்லவி அனுபல்லவி சரணம் என்று அமைந்த பாடல். சரணம் இரண்டு சரணம் இல்லாமல் நான்கு சரணமாய் அமைந்த பாடல்.எஸ்பிபி குரலை ஏற்றி இறக்கும் லாவகம். 

(உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்...)

https://youtu.be/5TsKH4Rqv84

16. மேற்கே விதைத்த... சிட்டிசன்

புரட்சி பாடல். தன்னம்பிக்கை தரும் பாடல். 

(குத்துப்பட்ட குத்துப்பட்ட கூட்டம் குனிந்த கதை போதும்...)

https://youtu.be/d885NlaYjY0

15. பூவுகெல்லாம் சிறகு... உயிரோடு உயிராக

காதலை சொல்ல முடியாமல் காத்திருப்பவனின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கவித்துவமான பாடல் வரிகள்.

https://youtu.be/OEtLA6McyUQ

14. மீனம்மா... ஆசை

பிண்ணனி இசை, உன்னி கிருஷ்ணன் அனுராதா குரலில் கிறங்கடிக்கும் காதல் பாடல்.

https://youtu.be/ddtN5bteeeE

13. ஹே ஹே கீச்சுகிளியே... முகவரி

இசை மீது பேரார்வம் கொண்டவனின் மூச்சு காற்றிலும் இசையே கலந்திருக்கும் என சொல்லும் பாடல்.

https://youtu.be/Qt_FaKUcucY

12. கண்ணை கசக்கும் சூரியனோ... ரெட்

ஐந்து நிமிட பாடலில் எத்தனை விசயங்களை சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லி இருப்பார் வைரமுத்து. எஸ்பிபியின் கர்ஜனை.

https://youtu.be/e1SykQawtw8

11. தீயில் விழுந்த.... வரலாறு

ஏஆர் ரஹ்மான் தேர்ந்தெடுத்து பாடுபவர் அவர் குரலில் உள்ள ஒரே தல பாடல். அம்மாவின் மீதான அன்பை வெளிகாட்டும் பாடல். மூர்க்க குணம் கொண்டவன் என்பதற்கு ரஹ்மான் ஓஹோஹோ என கணைப்பது சிறப்பு.

https://youtu.be/zFtKXaPpL_c

10. சொல்லாமல் தொட்டு... தீனா

காதலின் அருமையை, அவஸ்தையை சொல்லும் அழகான பாடல். ஹரிஹரன் குரல் கூடுதல் பலம்.

https://youtu.be/gMnjgktC-Yw

9. சிவப்பு லோலாக்கு.... காதல் கோட்டை

எஸ்பிபி குரல், தேவாவின் இசை & தங்கரின் ஒளிப்பதிவு என கிறங்கடிக்கும் பாடல். தன்னை சைட் அடிக்கும் பெண்ணை பார்த்து கதாநாயகன் பாடும் பாடல்.

https://youtu.be/bACkavgOxkg

8. காஞ்சிபட்டு சேலைகட்டி... ரெட்டை ஜடை வயசு

வருங்கால மனைவிக்கு என்னவெல்லாம் செய்வேன் என்ற வரிகள்

https://youtu.be/UsElvcrz9p8

7. நடை பாதை பூவனங்கள்... நேர்கொண்ட பார்வை

கணவன் மனைவி அழகியலை காட்சி படுத்தியிருக்கும் பாடல்.

https://youtu.be/gcvOanDvc5U

6. சேவல் கொடி பறக்குதடா... பில்லா

தமிழ் கடவுள் முருகனையும் தமிழ் மொழியையும் போற்றி பாடும் பாடல்.

https://youtu.be/U9H2qidebVw

5. தல போல வருமா... அட்டகாசம்

தல போல வருமா என்ற வரியே பாடலின் வெற்றி. பாடல் முழுக்க தல புகழ்.

https://youtu.be/uTXB1X6B3Gs

4. கனவெல்லாம் பலிக்குதே... கிரீடம்

தன் மகனின் வெற்றிகளை பார்த்து தந்தை பாடும் தரமான பாடல்

https://youtu.be/scz7PNyJttU

3. கொஞ்சம் உறவினையும்... ஜனா

அதிகம் வெளியே தெரியாத அருமையான வரிகளை கொண்ட அம்மா பாடல்.

https://youtu.be/xKjCp1OLXc0

2. கண்ணான கண்ணே... விஸ்வாசம்

மகளுக்காக அப்பா பாடும் அருமையான பாட்டு. இமானின் மெல்லிசை, சித் ஸ்ரீ ராம் குரல். "நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்" வெளிநாட்டில் வசிக்கும் தகப்பன்களுக்கு கண்ணீர வரவைக்கும் வரிகள்.

https://youtu.be/FysV6XnDlQk

1. சிங்கம் என்றால்... அசல்

தமிழ் சினிமாவில் அப்பா பற்றிய பாடல்கள் மிகக்குறைவு. தலக்காக வைரமுத்து எழுதிய பாடல். அழகான வரிகள் கொண்ட அப்பா பாடல்.

("சிங்கம் என்றால் என் தந்தைதான்

செல்லம் என்றால் என் தந்தை தான்

கண் தூங்கினால் துயில் நீங்கினால்

என் தந்தை தான் என் தந்தை தான்

எல்லோருக்கும் அவர் விந்தை தான்")

https://youtu.be/MBTxi4QdXsM



Tuesday 2 March 2021

வண்ணம் தீட்டப்படாத ஓவியம்

 மனைவியும் மகளும்

இல்லாத வீடு

வண்ணம் தீட்டப்படாத

ஓவியம் போலுள்ளது!

வலித்தாலும் வயிற்றில்

ஏறி குதிக்கும மகளின்

விளையாட்டுக்கு

மனம் ஏங்கி கிடக்கிறது!

அலுவலகம் செல்லும்

போது கையசைக்கும்

மனைவி இல்லாமல்

நானே கதவடைப்பது

முகத்தில் அறைகிறது!

அலுவலகம் முடிந்து

குதுகாலமாக வீடு

திரும்பும் வாகனம்

இப்போது மெல்லவே

நகர்கிறது!

அடுத்த வாரம் மீண்டும்

வண்ணம் தீட்டும் வாரம்!!!