Saturday 14 June 2014

மரம் நடுங்கள்

சமீபத்தில் நண்பர் ஒருவர் இணையத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
 உலக சுற்றுசுழல் தினத்தன்று, நாம் இன்று சுவாசிக்கின்றோம் என்றால்
அதற்கு மரங்கள் தான் காரணம்.  ஆகவே நாம் அனைவரும் ஆளுக்கு இரு மரங்கள் நடுவோம்
என்று கூறி இருந்தார்.

என்னால் அவர் கருத்தை முழுமையாய் ஏற்று கொள்ள முடியவில்லை. மரம் நடுங்கள் என்பது மேம்போக்கான சொல். எங்கு போய் மரத்தை நட?
கழிவறைக்கு கூட இடம் இல்லாமல் தண்டவாளத்தில் மக்கள் ஒதுங்கும் சென்னை போன்ற நகரங்களில் எங்கு மரம் நட?

போத்திஸ் ஜவுளி கடையில் இலவச மரக்கன்று வாங்கி சைதாபேட்டை மேன்சன் மொட்டை மாடியில் நானும் செடி வைக்க ஆசை பட்டேன். மண்ணுக்கு இரண்டு நாள் அலைந்தேன். கடைசியில் மண் கிடைத்தது ஆனால் செடிக்கு உகந்த மண் அல்ல. செடி கருகிய போது  என் மனம் வலித்தது.

மரம் நடுங்கள் என்று பத்தோடு பதினொன்றாக கூச்சல் போடுவதில் எந்த பலனும் இல்லை.

save பேப்பர் என்று சொல்கிற பலரும் காலை எழுந்து செய்தி தாள் படிக்கிறார்கள்.பெரும்பாலானோர் இணையம் உபயோகிக்க தெரிந்தவர்கள் என்பது மிக கொடுமை.

சாப்பிடும் முன் தட்டை துடைக்க பேப்பர், சாப்பிட பின் கை துடைக்க பேப்பர்....என பல இடங்களிலும் பேப்பர் இல்லாமல் இவர்களால் முடியவில்லை. இந்த ஆக்கத்தில் save பேப்பர் என்று புரட்சி போராட்டம் நடத்துகிறார்கள்

விவசாயத்தை தொழிலாய் கொண்டுள்ளவனின் வாழ்க்கை வளம் பெற யாரும் வழி சொல்வதில்லை. அவர்களுக்கு  உதவ யாரும் முன் வர வில்லை.விவசாயிக்கு அவன் நிலம் மட்டுமே என்றும் கைகொடுக்கிறது.
அன்று அந்த நிலத்தில் தொழில் செய்தான். இன்று அந்த நிலத்தை விற்று வேறு தொழில் செய்கிறான்.
விவசாயிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கி அல்லது அவனுக்கு கொடுத்த கடனுக்கு நிலத்தை விழுங்கி கொண்டு அதில் பிளாட் போட்டு சம்பாதிக்கும் பண முதலைகளை யாரும் கேள்வி கேட்க முன்வருவதில்லை.

ஆனால் மரம் நடுங்கள் என்று கூச்சல் போடுவது எந்த வகையில் நியாயம்.