Wednesday 20 November 2019

வலிமை

காதல் கோட்டை கட்டி
காதல் மன்னனாய்
ப்ரேம புஸ்தகம் படித்து
மங்காத்தா விளையாடும்
ராஜாவின் பார்வையில்
நேர் கொண்ட பார்வை!

அமராவதி, பவித்ரா,
வான்மதி என
ரெட்டை ஜடை வயசு பெண்கள்
உன்னைத்தேடி
கல்லூரி வாசலில் காத்திருக்க
நீ அவள் வருவாளா என
ஷாலினிக்கு காத்திருந்தாய்!

உன்னை கொடு என்னை தருவேன்
என்ற ஷாலினியிடம்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
என்றாய்!

என்னை தாலாட்ட வருவாளா என
நீ கேட்க உன் உயிரோடு உயிராக
உல்லாசமாய் கலந்தவள் ஷாலினி.
உன் நேசத்தில் உருகி
ஷாலினி என் வீடு என் கணவர்
என பாசம் காட்டுகிறாள்!

ஆனந்த பூங்காற்று வீசும்
தமிழ் சினிமாவில் பலருக்கு
முகவரி தந்தவன் நீ!

எதிரிகளுக்கு முன்னால்
நீ வாலி.

பாச மலர்களான ரசிகர்கள்
எனும் தோட்டத்தில்
பூவெல்லாம் உன்வாசம்!

விவேகம் உன் பலம்,
மன்றங்களை கலைத்தாலும்
ரசிகர்கள் வேதாளமாய்
உன்னை தொடர்வது
அவர்களின் விஸ்வாசம்!

தல என்பது ரசிகர்கள்
அசல் ராஜா உன்
தலையில் வைத்த கிரீடம்!

ரசிகர்களின் ஆசையெல்லாம்
உன்னுடன் ஒரு புகைப்படம்
எடுத்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் எங்கள் அஜித் ஜியை
என்று கத்தவே!

உன் படம் அறிவிப்பு வந்தால்
அமர்க்கள படுத்துவோம்.
திரையரங்கில் அட்டகாசம்
செய்வோம்!

பகைவனை அழிக்கும் ஆரம்பம்
பில்லா.
வில்லன்களை வீழ்த்தும் வீரம்
பில்லா II !

தீ பறக்கும் நடிப்பில் நீ தீனா,
ஜனரஞ்சக நடிப்பில் நீ ஜனா!

வாக்களிக்க வரிசையில்
நின்ற நீ ஒரு சராசரி சிட்டிசன்.
ஆள நினைத்து ஆயிரம் பேர்
சினிமாவுக்கு வரலாம்
ஆனால் நீ தான் என்றும் ஆழ்வார்!

உன் ராசி ரிஷப ராசி
தமிழ் சினிமாவில்
சாம்ராட் அசோகாவாய்
வரலாறு படைத்தவன் நீ!

மைனர் மாப்பிள்ளையாய்
சுற்றி திரிந்தவன்
இங்கிலீஷ் விங்கிலீஷ்ல்
கலக்குவதால் பாலிவுட்
ரெட் கார்பெட் வீசி அழைக்கிறது.
இயக்குநர் என்னை அறிந்தால்
மட்டுமே நடிப்பேன் என்று
அடம் பிடிக்கிறாய்!

பரமசிவனும் ஆஞ்சநேயாவும்
ஏகனும் திருப்பதி மலையானும்
ஆசிர்வதிக்க உன் வெற்றி
என்றும் தொடரும்!!!