Friday 17 May 2019

கடைசி பஸ்

கடைசி பஸ்
காலத்தால் வழக்கொழிந்து
வருகிறது!

இரு சக்கர வாகன
இனப்பெருக்கத்தில்
கடைசி பஸ்
காணாமல் போய்விட்டது!

எங்கிருந்து பார்த்தாலும்
இருட்டில் கடைசி பஸ்
நகர்வது தனி அழகு!

கடைசி பஸ்க்கு
காத்திருக்கையில் நிலையத்தில்
நுழையும் ஒவ்வொரு பஸ்ஸூம்
கடைசி பஸ்ஸே!

இனிய இரவு கேட்டு
கொண்டே கடைசி பஸ்ஸில்
கடைசியாய் பயணித்தது
எப்போது என்று
நினைவில் இல்லை!!!

Friday 3 May 2019

மகளதிகாரம் 2

தூக்கத்தில் உதடு சுழிக்கிறாள்
உதடு குவிக்கிறாள்.
அலுப்பு முறிக்கிறாள்.
கண்ணை இறுக்குகிறாள்.
ஆயிரம் ஜாலங்கள்
அத்தனையும் அழகு!

விழித்திருக்கையில்
ஏதேதோ பேசுகிறாள்
அவளுக்கு மட்டும்
தெரிந்த மொழியில்!

தூக்கம் என் கண்ணை
சொருகும் நேரத்திலும்
ஏதாவது பேசி புன்னகைத்து
தூக்கம் கலைக்கிறார்கள்!

அவளை தூக்கிக் கொண்டு
நடக்க சொல்கிறாள்.
நடந்தால் தூங்கி போகிறாள்!!!