Wednesday 14 February 2018

காதலர் தினம்

உன் முகத்தை புகைப்படத்தில்
பார்த்து நீ என்னவள் தான்
என்று நினைத்து கொண்ட
நாள் எனக்கு முதல் காதல் தினம்!

உன் பிறந்தநாளில்
உனக்கே தெரியாமல்
உன் முன்னால் வந்து
உன்னை ஆச்சர்யப்படுத்திய
அந்த நாளும் காதல் தினமே!

என்னை செல்லமாய்
கிச்சு கிச்சு மூட்டி
விளையாடும் ஒவ்வொரு
நாளும் காதலர் தினம்!

என் பயணங்களில் நீ
பரபரப்பாய் பின்னிருக்கையில்
அமர்ந்து வரும் நாட்கள்
காதலர் தினமே!

உன் வயிரை தொட்டு
பார்த்து நம் குழந்தையின்
வளர்ச்சியை நான் ரசித்து
பார்த்த நாட்கள்
காதலர் தினமே!

என் முகச்சாயலில்
நம் மகளை பெற்றபின்
தினம் தினம்
காதலர் தினம் தான்
என் காதலே !!!