Wednesday 18 December 2019

சாய் சுவாசிகா - அகவை 2

எங்கள் இல்லத்தில்
இன்பத்தை விதைத்தவள்.

அவள் தூங்கும் நேரத்தில்
பொம்மைகளோடு
இல்லமும் இளைப்பாறிக் கொள்கிறது.

எங்கள் எல்லா திட்டமிடல்களுக்கு
மையப்புள்ளி அவள்.

எத்தனை  சேட்டை
செய்தாலும் அவளை திட்ட
மனம் ஒப்புவதில்லை.

மாநகரில் மாட்டிக்கொண்டு
அதிகம் வெளியுலகை
பாத்திராதவள் அவள்.

அவள் மட்டுமே
எங்கள் உலகம்!!!

Monday 16 December 2019

வாசிப்பின் உலகம்

சிறு வயதிலே வாசிக்க
பழகிவிட்டேன்.
கல்லூரி காலத்தில் நண்பன்
ஒருவன் பொன்னியின் செல்வனை
அறிமுகப்படுத்தினான்
ஆறு மாதங்கள் பொன்னியை
வாசித்தேன்.

ஆனந்த விகடன்
கருவாச்சியை அறிமுகம்
செய்தது.

சென்னைக்கு வந்ததும்
வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம் புத்தக
கண்காட்சி சென்றேன்.

ஆசான், ஆலோசகர்
சுஜாதாவை வாசிக்க
சொன்னார்.
சுஜாதாவின் அறிவியல்
ஈர்த்தலும் எழுத்து
என்னை ஈர்க்க வில்லை.

எஸ் ரா என்னை அதிகம்
ஈர்த்தார்.

இணையம் எளிதாக்க
பட்டபின் எல்லா
எழுத்தாளர்களையும்
வாசிக்கலாம்.

புத்தக வடிவில் புரட்டி
படிப்பதே எனக்கு
போதை.

அலைபேசியில் தூங்கி
கொண்டிருக்கும் எதையும்
வாசிக்க மனம் வரவில்லை.


Wednesday 4 December 2019

புகைப்படம் 1

சென்னை நகரில்
அலைந்து திரிந்து
அழகிய புகைப்படம்
எடுக்க ஆசை!
ஆனால் நான் புகைப்பட
கலைஞனும் கிடையாது
தொழில்நுட்பமும் தெரியாது!
அதிகாலை வேளையில்
அரை தூக்கத்தில் எடுத்தது!!!

Monday 2 December 2019

தல அஜித் குமார் படங்களின் பட்டியல்

1. என் வீடு என் கணவர் -  செண்பகராமன் - B.சுரேந்தர்
2. அமராவதி - செல்வா - பாலபாரதி
3. ப்ரேம புஸ்தகம் (தெலுங்கு)- கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ்/      கொல்லப்புடி மாருதி ராவ் - தேவேந்திரன்
4. பாசமலர்கள் - சுரேஷ்மேனன் - இளையராஜா
5. பவித்ரா- K. சுபாஷ் - AR.ரஹ்மான்
6. ராஜாவின் பார்வையிலே - ஜானகி சௌந்தர் - இளையராஜா
7. ஆசை - வசந்த் - தேவா
8. வான்மதி - அகத்தியன் - தேவா
9. கல்லூரி வாசல் - பவித்ரன் - தேவா
10. மைனர் மாப்பிள்ளை - VC குகநாதன் - சாய்வண்ணன்
11. காதல் கோட்டை - அகத்தியன் - தேவா
12. நேசம் - தேவா - சுபாஷ்
13. ராசி - முரளி அப்பாஸ் - சிற்பி
14. உல்லாசம் - ஜேடி - ஜெர்டி - கார்த்திக் ராஜா
15. பகைவன் - ரமேஷ் கிருஷ்ணன் -தேவா
16. ரெட்டை ஜடை வயசு - C.சிவக்குமார் -தேவா
17. காதல் மன்னன் - சரண் - பரத்வாஜ்
18. அவள் வருவாளா  - ராஜ்கபூர் - SA.ராஜ்குமார்
19. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - விக்ரமன் - SA.ராஜ்குமார்
20. உயிரோடு உயிராக - சுஷ்மா -வித்யாசாகர்
21. தொடரும் - ரமேஷ் கண்ணா- இளையராஜா
22. உன்னைத்தேடி - சுந்தர் சி - தேவா
23. வாலி - சூர்யா - தேவா
24. ஆனந்த பூங்காற்றே - தேவா
25. அமர்க்களம் - சரண் - பரத்வாஜ்
26. நீ வருவாய் என - ராஜகுமாரன் - SA.ராஜ்குமார்
27. முகவரி - VZ துரை - தேவா
28. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்- ராஜீவ் மேனன் -AR.ரஹ்மான்
29. உன்னைக் கொடு என்னை தருவேன் - கவி காளிதாஸ் -SA.ராஜ்குமார்
30. தீனா -  AR  முருகதாஸ் - யுவன்
31. சிட்டிசன் - சரவண சுப்பையா - தேவா
32. பூவெல்லாம் உன் வாசம் - S.எழில் - வித்யாசாகர்
33. அசோகா(ஹிந்தி) - சந்தோஷ் சிவன் - அனு மாலிக்
34. ரெட் - ராம்சத்யா - தேவா
35. ராஜா - S.எழில் - SA.ராஜ்குமார்
36. வில்லன் - K.S.ரவிக்குமார் - வித்யாசாகர்
37. என்னை தாலாட்ட வருவாளா - ரவீந்திரன் - அபிராம்
38. ஆஞ்சநேயா - N.மகாராஜன் - மணிஷர்மா
39. ஜனா - ஷாஜி கைலாஷ் - தினா
40. அட்டகாசம் - சரண் - பரத்வாஜ்
41. ஜி - N.லிங்குசாமி - வித்யாசாகர்
42. பரமசிவன் - P.வாசு - வித்யாசாகர்
43. திருப்பதி - பேரரசு - பரத்வாஜ்
44. வரலாறு - K.S.ரவிக்குமார் - AR.ரஹ்மான்
45. ஆழ்வார் - செல்லா - ஸ்ரீகாந்த் தேவா
46. கிரீடம் - AL.விஜய் - பிரகாஷ்
47. பில்லா - விஷ்ணுவர்தன் - யுவன்
48. ஏகன் - ராஜூ சுந்தரம் - யுவன்
49. அசல் - சரண் - பரத்வாஜ்
50. மங்காத்தா - வெங்கட்பிரபு - யுவன்
51. பில்லா II - சக்ரி டோலட்டி - யுவன்
52. இங்கிலீஷ் விங்கிலீஷ் - கௌரி ஷின்டே - அமித் திரிவேதி
53. ஆரம்பம் - விஷ்ணுவர்தன் - யுவன்
54. வீரம் - சிவா - அனிருத்
55. என்னை அறிந்தால் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ்
56. வேதாளம் - சிவா - அனிருத்
57. விவேகம் - சிவா - அனிருத்
58. விஸ்வாசம் - சிவா - இமான்
59. நேர் கொண்ட பார்வை - H. வினோத் - யுவன்
60. வலிமை - H. வினோத் - யுவன்