Thursday 28 May 2020

தூசான் ரோஜாக்கள்

அஜித்

அஜித்க்கும் எனக்கும் என்ன சம்மந்தம். எண்ணெய் தான் சம்மந்தம். நான் திருமண விடுப்பில் போது விட்டு சென்ற ஆயில் பைபபிங் அவரை பற்றிக்கொண்டது. ஓரே அணியாய் பல காலம் வேலை செய்து விட்டோம்.


அசோக் குமார்

அசோக்கிடம் பேசும் போது தம்பியிடம் பேசுவது போல் தோன்றும். கொஞ்ச நாள் இருந்தாலும் ஆல்ரவுண்டர்.


பாலசுப்பிரமணியன்

எவ்வளவு டென்சன் இருந்தாலும் பாலா சார்கிட்ட பத்து நிமிசம் பேசினா டென்சன் போய்டும். கலகலப்பா பேசுவார். அதிரடி அவரது பாணி.

பாலாஜி

இந்த கூட்டத்துல பேசலாமா வேனாமானு தயங்கி தயங்கி இருக்கும் பாலாஜி ஸ்பெஷல் அவர் புன்னகை தான். நிறைய கத்துக்கிறார். அவர் கேரியர் நல்லா இருக்கும்.

பாலு

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்திய ரயில்வே துறை இவர் கட்டுபாட்டில். வேலை முடிச்சு அமைதியாய் இருப்பதில் கில்லி. அவர் வொர்கிங் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பாஸ்கரன்

பாஸ்கரோடு லாரா முதல் ஜாவா வரைக்கும் வேலை பார்த்திருக்கேன். கடைசியா என்னோட டீம் பாகேபா தான்.
பாஸ்கர், கேசவன் & பாலு. பாஸ்கர் வேலைல எப்பவும் ஒரு நீட்னெஸ் (Neatness) இருக்கும்.

சந்திரன்

சந்திரன் சார் எனது கேரியரில் முக்கிய நபர். நான் தூசானில் அதிகம் கோபப்பட்டது சந்திரன் சார்கிட்டயாதான் இருக்கும். நான் தைரியமா சப்ளையர் கிட்ட பேச அவர் தான் காரணம். ஆபிஸ்ல ஒரு பிரச்சனைனா உடன் நிற்பவர். இவரை பத்தி நிறைய சொல்லலாம்.

தீபக் ஜோசப் 

நாங்க சேத்துப்பட்டுல தனித்திருந்த போது அவரே நேரில் வந்து கை கொடுத்து சாக்லெட் குடுத்து அறிமுகமானவர். யாரிடமும் எளிதில் மிங்கிள் ஆகிவிடும் சுபாவம். எனக்கு நிறைய விஷயங்களை எப்படி அணுகுவது என்று சொல்லி தந்தவர்.
வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன்.

கங்கா

இவர்கிட்ட நம்ம ஆங்கிலத்தில் உரையாடினால் நமக்கு நல்ல உரையாடல் அனுபவம் கிடைக்கும். இவர் பண்ற வேலைல பர்பக்சன் இருக்கும். நிறைய பர்சனல் அட்வைஸ் கொடுப்பார்.

கோபிநாத்

ஒரே நேரத்தில் தூசானில் சேர்ந்தோம். நிறைய பேர் என்னை கோபி என்று கூப்பிட்டு இருக்கிறார்கள். இவரிடம் எதைப் பற்றியும் கேட்கலாம். தெரியாததை கூட இணைய உதவியுடன் சொல்வார். அவர் கூடவே சுத்தினாலும் அவரை போல இன்வால்வ்மண்டோடு நான் வேலை பார்த்தது கிடையாது.

ஜெப்ரி

சிரிச்ச முகம் தான் இவரோட ப்ளஸ். கொஞ்ச நாள்ல கிளம்பிட்டார்.

கார்த்திக்

சேத்துபட்டு தீவுல கடைசியா சேர்ந்தவர். நக்கல் நையாண்டி பிறவி சொத்து. வித விதமா ஸ்நாக்ஸ் கொண்டு வருவார்.MBO பில் பண்ண தெரிஞ்ச ஓரே ஆள். பல மொழி வேந்தன்.

கேசவன்

கடைசியா என் டீம்ல வேலை பார்த்தார். என்னை போல கரன்சி கலெக்டர். இவர் இருக்கிற இடத்துல காமெடி இருக்கும். அவரே பாயிண்ட் எடுத்து தருவார்.

முத்து குமார்

லாரா 1000 சப்போர்ட் 10 நாள்ல இவரோட சாதனை. இவர் சீக்கிரமா கிளம்பிட்டது தான் வேதனை.

ராஜா சேவகபெருமாள்

பார்ட்னர், நான் தூசானுக்கு வருவதற்கு முன்பே பார்ட்னரே பார்த்திருக்கிறேன் பைபிங் சென்டரில். பார்ட்னர் கல்யாணத்துக்கு போகல. பார்ட்னரா நான் தவறிய விசயம். பார்ட்னரோட ப்ளஸ் மைனஸ் போணஸ் எல்லாமே வாய் (கொழுப்பு) தான். வைல்ட் கார்டு சாதனையாளர்.

ராஜா வரதராஜ்

ப்ரஸ்சர் பார்ட்ல் இருக்கும் போது அதிகம் பேசியதில்லை. ஷாப்பில் இருக்கும் போது கொஞ்சம் பேசினேன். பைபிங்கில் நல்ல நட்பு. வாட்சப் க்ருப்ல் என்ன போட்டாலும் ரிப்ளை செய்யும் முதல் ஆள்.

சதிஸ் குமார்

சதிஸ் சார், எதையுமே எக்ஸ்ட்ரீமாய் வெளிபடுத்துபவர் (கோபம், சந்தோசம், வேலை, விளையாட்டு). அவர் பார்த்து பார்த்து எல்லாம் செய்ததால் தான் என் லாரா பயணம் சிறப்பாய் அமைந்தது.

ஸ்ரீனிவாசன்

எனக்கு முதன் முதலாய் நல்ல பேரை வாங்கி தந்தவர். அவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தை "யுவர் குட்நேம் சார்?".
வயசுல பெரியவர் குறும்புல சிறியவர். இவர் லீலைகள் எப்போதும் சிரிப்பை வரவைப்பவை. பேருந்து தோழர் கூட.

வினோத்

பயணங்களை ரசிக்கும் வினோத். இவர் ஏற்பாடு செய்த ஏலகிரி சுற்றுலா மறக்க முடியாத ஒன்று.



Monday 11 May 2020

நினைவில் நீங்கா பாளையங்கோட்டை

பால்யத்தில் பாளையங்கோட்டையின்
வாசலை திறந்தது மாமாதான்!

மிதிவண்டியில் மூவராய்
செல்ல ஆசைப்படும்
சுரேஷ் அண்ணனால்
சிவன் கோயிலும்
கொத்து கொத்தாய்
தொங்கும் வௌவால்களை
காண ஆசைப்படும்
கணேஷால்
கோபாலசாமி கோயிலும்
மனைவி மனோவால்
மேல வாசல் முருகன்
கோயிலும் அறிமுகம்
ஆகியது!

ஆறாம் வகுப்பில்
தெற்கு பஜார் வழியே 
பள்ளி செல்லும் போது
காலையில் கணத்த
இதயமாய் இருக்கும்
மாலையில் மகிழ்ச்சியாய்
இருக்கும்!

முருகன் குறிச்சியில்
வாய்கால் குளியல்,
தூண்டில் மீன்பிடிப்பு,
நவ்வாபழப் பறிப்பு
எல்லாவற்றிலும்
நான் கூட இருந்த குமார்!

விடுதிக்கு சென்றபின்
வாரவாரம் கிடைக்கும்
மூணு மணி நேரமும்
பாளையங்கோட்டையை
சுற்றுவதே பொழுதுபோக்கு!

வேல் முருகனுடன் 
ரோகினி டீ ஸ்டால்
சிங், பிரசாத்துடன்
ரோட்டோர போளிக்கடை
கண்ணாவுடன் செந்தில்வேல்
தியேட்டர்
வேதியியல் ட்யூசன்
சமாதானபுரம்
கணிப்பொறியியல்
ட்யூசன் தெற்குபஜார்
என அழகான நாட்களை
தந்தது பாளையங்கோட்டை

கடைசியாக என்
செல்லமகள் பிறந்ததும்
பாளையங்கோட்டை
ஆஸ்பத்திரியில் தான்!!!