Saturday 6 October 2018

பலூன் விற்பவன்


மூச்சு காற்றை பலூனில்
ஏற்றி விற்பவன் அவன்.

6 ரூபாய் பலூனை 10 ரூபாய்க்கு
10 விற்றால் அவன் குழந்தைக்கு
வடை வாங்கி செல்வான்.

அவன் குழந்தைக்கு வடை
பிடித்த அளவுக்கு பலூன்
பிடிப்பதில்லை.

வங்கிக்கடன் வாங்கி வெளிநாடு
செல்லும் சூட்சமம்
அவனுக்கு தெரியாது.
(கடவுச்சீட்டு வாங்க வக்கில்லாதவனுக்கு
எந்த வங்கியும் கடன் தராது
இத்திருநாட்டில்)

தள்ளுபடி என சொல்லி
இணையத்தில் விற்கும்
வியாபார தந்திரமும்
அவனுக்கு தெரியாது.

குளிர்சாதன கடையில்
பலூனை விற்கவும் தெரியாது.
ஏன் என்றால் அவனும்
ஏழைத் தாயின் மகன் !!!