Friday 30 April 2021

பொன்விழா நாயகன் தல

 1

தல முதல் முறையாக சினிமாவில் தலைகாட்டிய படம் என் வீடு என் கணவர்.

2

தல முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகம் ஆன படம் அமராவதி.

3

தல முதல் முறையாக நடித்த நேரடி தெலுங்கு படம் ப்ரேம புஸ்தகம்.

4

தலயின் சொந்த பெயரான (அஜித்) குமார் என்ற பெயரில் முதல் முறையாக நடித்த படம் பாசமலர்கள்.

5

தல நடிப்பில் தீபாவளிக்கு முதல் முறையாக வெளியான படம் பவித்ரா.

6

தல முதல் முறையாக நடித்த காதல் தோல்வி படம் ராஜாவின் பார்வையிலே

7

முதல் முறையாக மாபெரும் வெற்றி பெற்ற தல படம் ஆசை.

8.

தல படத்தில் பிள்ளையார் சென்டிமெண்ட் இடம் பெற்ற படம் வான்மதி

9

இரட்டை நாயகர்கள் கதையில் தல முதல் முறையாக நடித்த படம் கல்லூரி வாசல்.

10

தல முதல் முறையாக நடித்த ரீமேக் படம் மைனர் மாப்பிள்ளை

11

முதல் முறையாக தேசிய விருது பெற்ற தல படம் காதல் கோட்டை

12

தல நடிப்பில் முதல் முறையாக பொங்கலுக்கு வெளியான படம் நேசம்.

13

தல முதல் முறையாக அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்த தமிழ் படம் ராசி

14

தல முதல் முறையாக இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த படம் உல்லாசம்.

15

தல முதல் முறையாக கே.எஸ். ரவிக்குமார் (வில்லன்) உடன் பணியாற்றிய படம் பகைவன்.

16

முதல் முறையாக படம் வருவதற்கு முன்பாகவே பாடல் ஹிட்டான படம் ரெட்டை ஜடை வயசு. (காஞ்சிபட்டு சேலைகட்டி...)

17

தல முதல் முறையாக அறிமுக இசையமைப்பாளர் இசையில் நடித்த படம் காதல் மன்னன்.

18

தல முதல் முறையாக மறுமணம் செய்வது போல் நடித்த படம் அவள் வருவாளா.

19

தல முதல் முறையாக ரமேஷ் கண்ணாவுடன் பணியாற்றிய படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். (தொடரும், அமர்க்களம், வில்லன், ஆஞ்சநேயா, அட்டகாசம், வீரம்)

20

தல முதல் முறையாக பெண் இயக்குனர் இயக்கத்தில் நடித்த படம் உயிரோடு உயிராக

21

தல ஒரு குழந்தைக்கு அப்பாவாக முதல் முறையாக நடித்த படம் தொடரும்.

22

தல படத்தில் ஐந்து பாடல்களை ஒரே பாடகர் பாடியது இதுவே முதல் முறை. பாடகர் ஹரிஹரன் படம் உன்னை தேடி

23

தல முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் வாலி

24

தல மீனாவுடன் நடித்த முதல் படம் ஆனந்த பூங்காற்றே.

25

தல ஷாலினியுடன் முதல் முறையாக இணைந்த படம்.

26

தல முதல் முறையாக ராணுவ வீரராக நடித்த படம் நீ வருவாய் என

27

இந்த நூற்றாண்டில் வெளிவந்த முதல் தல படம் முகவரி

28

தல முதல் முறையாக பல நட்சத்திரங்களுடன்(சம வாய்ப்புள்ள) நடித்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

29

முதல் முறையாக டைட்டிலில் அல்டிமேட் ஸ்டார் என்று இடம்பெற்ற படம் உன்னை கொடு என்னைத் தருவேன்.

30

தல முதல் முறையாக தலயான படம் தீனா.

31

தல முதல் முறையாக பல கெட்டப்களில் நடித்த படம் சிட்டிசன்.

32

தல முதல் முறையாக தமிழக அரசின் விருதை பெற்ற படம் பூவெல்லாம் உன் வாசம்.

33

தல முதல் முறையாக நடித்த இந்தி படம் அசோகா

34

தல முதல் முறையாக மொட்டை தலை தோற்றத்துடன் நடித்த படம் ரெட்.

35

மூன்று பாடல்களில் மூன்று வேறு வேறு நாயகிகளுடன் முதல் முறையாக படமாக்கப்பட்ட படம் ராஜா (மந்த்ரா, ஜோதிகா, பிரியங்கா திரிவேதி)

36

தல மாஸ் ஹீரோ ஆனவுடன் தீபாவளிக்கு போட்டி போட்டு (வெற்றியும் பெற்ற) முதல் தல படம் வில்லன். தல தலயான பின் முதல் தல தீபாவளி படம்.

37 

தல நடிப்பில் முதல் முறையாக வெளியான கிடப்பில் போடப்பட்ட படம்

38

தல முதல் முறையாக போலிஸாக நடித்த படம் ஆஞ்சநேயா

39

தல முதல் முறையாக மலையாள இயக்குனரிடம் பணியாற்றிய படம் ஜனா.

40

முதல் முறையாக தலக்கு மூணு ஹீரோயிச பாடல்கள் இடம் பெற்ற படம். தல போல வருமா அறிமுகம் ஆன படம்.

41

தல முதல் முறையாக அரசியல்வாதியாக நடித்த படம் ஜி.

42

தல முதல் முறையாக சிறை கைதியாக நடித்த படம் பரமசிவன்

43

தல முதல் முறையாக ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் நடித்த படம் திருப்பதி

44

தல முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்த படம் வரலாறு.

45

ஒரே கதாநாயகியுடன் அடுத்தடுத்து இரண்டு படம் முதல் முறையாக தல நடித்தது ஆழ்வார். (அசின்).

46

அட்லேப்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் தமிழ் படம் கிரீடம்.

47

முதல் முறையாக முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படம் பில்லா.

48

முதல் முறையாக யாரிடமும் இணை இயக்குநராக பணியாற்றாத ஒருவர் இயக்குனர் ஆன தல படம் ஏகன்.

49

தல முதல் முறையாக திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்த படம் அசல்.

50

தல முதல் முறையாக சால்ட் பெப்பர் லுக்கில் நடித்த படம் மங்காத்தா.


Tuesday 20 April 2021

தல 50வது பிறந்தநாள்

ஆசையில் தமிழகத்தில்

அறியப்பட்டவன் !

காதல் கோட்டை, காதல் மன்னன்

என பெண்களை கவர்ந்தவன் !

வாலியில் நடிப்பால் 

ஈர்த்தவன் !

ரவுடியாக மோகனாவை 

வசியம் செய்தவன்,

பலர் கழுத்தில் சங்கிலி 

போட வைத்து அமர்க்களம்

செய்தவன் !

யதார்த்த களத்தில்

பலருக்கும் முகவரி 

தந்தவன் !

தீனாவில் தல ஆனவன் !

எளிய மனிதர் முதல் 

வயோதிகர் வரை 

கெட்டப் பல போட்ட 

சிட்டிசன் !

ரெட் மூலம் மதுரையை 

தல கோட்டை ஆக்கியவன் !

வில்லனாக எதிரிகளை 

பயமுறுத்தியவன் !

தூத்துக்குடி குருவாக 

அட்டகாசம் செய்தவன் !

தந்தை மகன்கள் என 

யாரும் துணியாத களத்தில்

வரலாறு படைத்தவன் !

நடுத்தர குடும்பத்து 

மகனாக கிரீடம் சூட்டியவன் !

ஸ்டைலில் தன்னை தானே

செதுக்கிய பில்லா நீ ! 

பட தலைப்பு வைக்காமல் 

படத்தை தொடங்கும் 

ட்ரெண்டை ஆரம்பித்தவன் !

வீரம், என்னை அறிந்தால்

விவேகம் என அதிரடி

காட்டியவன் !

இஞ்சார்டா என்று 

இல்லங்களில் இணைந்தவன் !

சமூக முன்னேற்றத்திற்கு நேர் கொண்ட

பார்வை கொண்டவன் !


கொடிய நோயால் பாதிக்கப்பட்ட

திரையுலகை வலிமையோடு

மீட்க வருபவன் !

தல போல வருமா !!!

























Saturday 17 April 2021

கலாதீபம் லொட்ஜ்

 இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் என்றால் முத்துலிங்கம், காசி ஆனந்தன், வ.ஐ.ச. ஜெயபாலன் என்று ஒரு சிலரே தமிழ்நாட்டில் அறிமுகம் ஆனவர்கள்.

ஆனந்த விகடனின் தனித்தன்மை குறைந்த போது எனக்கு வாசிக்க பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. பின்பு இலக்கிய இதழான தடம் என்னை கவர்ந்தது. தடம் பல இலங்கை எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதில் ஒருவர் தான் வாசு முருகவேல். நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்த கலாதீபம் லொட்ஜ் நாவலை இப்போது தான் வாசித்தேன்.

கொழும்பில் இருக்கும் அந்த லாட்ஜில் ஒரு வாரம் தங்க வைத்திருந்தார் வாசு.

வலி மிகுந்த கதையில் நகைச்சுவை இழைந்தோடும் தொனியில் அவரது எழுத்து ரசித்து வாசிக்க வைக்கிறது.

கனகராசா சங்கரின் டைரியில் கதை தொடங்கினாலும், கதையின் நாயகன் சந்திரனே. 

இலங்கை தமிழை புரிந்து கொள்ள சற்றே பழக வேண்டி இருக்கும். தமிழின் சிறப்பான சிறப்பு 'ற' கரத்தை இலங்கை தமிழர்கள் அழகாக அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

நான் மேன்ஷனில் தங்கி இருந்தாலோ என்னவோ கதை என்னை மிகவும் கவர்ந்து விட்டது. போலிஸ் வந்தால் கலையும் அந்த கிரிக்கெட் ரசிக்க வைக்கிறது.

விசாகர் பெயருக்கு அவ்வளவு விளக்கம் கொடுத்து விட்டு பெயரே இல்லாமல் வரும் கதாபாத்திரங்களான பொறுப்பு மற்றும் கொழும்பண்ரி மகன் என ஈர்க்கிறார் வாசு.

பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம் பலமுறை கேள்விபட்டிருந்தாலும் பிரேமதாசா யார் என்பது இந்த நாவல் மூலமே தெரியும்.

பழம் விற்கும் தர்மபால பாத்திர படைப்பு அற்புதம். கருப்பு கோட்டை அணிந்து தர்மபால "தாயாய் பத்து ரோபா" என கூவுவது கண்ணில் காட்சியாக விழுகிறது.

கனமான எழுத்து வாசு முருகவேலின் எழுத்து. வாசித்து பாருங்கள். விசா இல்லாமல் இலங்கை சென்று வந்த அனுபவம்!!!