Thursday, 3 March 2022

இனிப்பு

விடுதியில் இருந்து 

வீட்டுக்கு வரும் போதெல்லாம்

தவிட்டு மிட்டாய் 

வாங்கி வருவாள் 

பெரிய அக்கா !

எல்லா புதிய 

மிட்டாய்களையும் எனக்கு 

அறிமுக படுத்துவது 

சின்ன அக்கா !

தாழையூத்தில் இருந்து 

பால்பன் வாங்கி 

வருவார் தாத்தா !

பழைய இரும்பு 

சாமான்களை வைத்து 

கொய்யாப்பழம் வாங்கி 

தருவது ஆச்சி !

நான் விடுதியில் 

இருக்கும் போது 

ஞாயிற்றுக்கிழமை பார்க்க 

வரும் அம்மாவின் 

கூடையில் தவறாமல் 

இருக்கும் கடலை மிட்டாய் !

மாமாவின் பங்கு 

மாறாந்தை மாம்பழங்கள் 

சொடக்கு தக்காளி 

இலந்தைப்பழம் என்று 

நீளமானது !

ரசகுல்லாவை அறிமுகபடுத்தியது 

கார்த்தி அண்ணன் 

அதன் தித்திப்பில் 

அதற்கு பிறகு சாப்பிடவே 

இல்லை !

இனிப்பே பிடிக்காத 

மனைவி எப்போதாவது 

கேட்கும் டயரி மில்க்கில் 

பங்கு கிடைக்கும் !

மகள் வேண்டாமென்றோ 

பிடிக்காமலோ தூக்கி 

எறியும் பிஸ்கட்கள் 

சுவையானவை !!!



2 comments:

  1. என்னமோ இருக்கு பழனி நமக்குள்ள தொடர்பு.... நான் ஒரு இனிப்பு வெறியன்....வீட்டம்மா இனிப்பை சீண்டவே மாட்டாங்க....😍😍❤️❤️

    ReplyDelete
    Replies
    1. நிறைய விசயங்கள் ஒத்து போகுது 🤩🤩

      Delete