தோனிய ஏன் பிடிக்கும்?
கில்கிறிஸ்ட் சங்கக்காரா பவுச்சர்னு எல்லா டீம் விக்கெட் கீப்பரும் பேட்டிங் நல்லா ஆடும் போது நமக்கும் இந்த மாதிரி ஒரு ஆள் வேணும்கிற ஏக்கத்துக்கு கிடைச்ச பரிசு என்பதால்.
கிரிக்கெட் வீரர் என்றாலே மழுங்க சிரைத்து விளம்பர நடிகர் போல் இருக்க வேண்டும் என்பதை மாற்றி பங்க் முடியுடன் களம் கண்டதால்.
இந்தியாவுக்கு ஒரு சிறந்த சிக்ஸ் ஹிட்டர் கிடைத்ததால்.
மும்பை மற்றும் கர்நாடகாரர்கள் கோலோச்சிய கிரிக்கெட்டில் பீகாரில் இருந்து பிரிந்த ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால்.
IPL போட்டியில் அனைத்து அணிகளும் ஐகான் ப்ளேயர் என சொந்த ஊர்காரர்களை கொண்டாடிய போது சென்னை அணிக்காக விளையாடி சென்னைவாசியாகவே மாறியதால்.
இந்தியாவுக்கு உலகக் கோப்பை வாங்கி தந்ததால்.
எத்தனை எத்தனையோ காரணங்கள்.
தோனியை பிடிக்கவில்லை என்பதற்கு ஹேட்டர்கள் சொல்லும் காரணங்கள்.
கங்குலி செட் பண்ணி வைத்த டீமை வைத்து வெற்றி பெற்றவன் தோனி.
- கங்குலி டீமை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தது உண்மை. கங்குலி செட் பண்ணி வைத்த டீமை வைத்து டிராவிட் ஏன் 2007ல் சாதிக்கவில்லை.
கங்குலிக்கும் தோனிக்கும் உள்ள வித்தியாசம் அணுகுமுறையே. வீரர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் அது மோட்டிவேசன்.
திட்டிக்கொண்டே இருந்தால் வீரரகளிடம் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.
உதாரணம் இரு உலகக் கோப்பை இறுதி போட்டிகளும்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் கம்பீர் ஆனால் பெயரை வாங்கி கொண்டது தோனி.
- கம்பீர் நன்றாக விளையாடினார் எந்த மாற்று கருத்தும் இல்லை. கம்பீர் ஒரு சிறந்த பீல்டரா? என்றால் இல்லை. பகுதி நேர பந்து வீச்சாளரும் இல்லை. கம்பீருக்கு பேட்டிங்கை தவிர வேறு துறையில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. தோனி கேப்டன் பதவியை சுமந்து கொண்டு விக்கெட்கீப்பிங்கும் செய்து கொண்டு குறித்த நேரத்தில் பந்து வீச்சாளரை மாற்றி வெற்றிக்கு அழைத்து சென்றவர்.
போட்டிகளை கடைசி ஓவர் வரை இழுக்கிறார். இதனால் தேவையில்லாத பரபரப்பு ஏற்படுகிறது.
- டிவியில் பார்க்கும் ரசிகர்களுக்கே பதட்டம் ஏற்படும் போது பந்து வீச்சாளரிடமும் பதட்டம் வரும். அந்த பதட்டத்தை வெற்றியாக மாற்றுவதே தோனி ஸ்பெஷல்.

பினிஷர் என்று பீத்தி கொள்கிறார்கள், பல போட்டிகள் தோனி இருந்தும் தோல்வியில் முடிகின்றன.
- எல்லா போட்டிகளையும் வெல்ல தோனி கடவுள் இல்லை. தோனி முன்னால் இந்திய அணியின் பினிஷர் யார்? யோசித்து பார்த்தால் ராபின் சிங்கும் ஜடேஜாவும் நினைவுக்கு வருவார்கள். அவர்களோடு தோனியை ஒப்பிட முடியுமா?
சீனியர்களுக்கு மரியாதை தராமல் சீனியர்களை அணியில் இருந்து நீக்கியவர்.
- அதே சீனியர்கள் தான் யுவராஜ் சேவாக் போன்ற சீனியர்கள் இருக்கும் போது தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்தவர்கள்.
அவர்களின் வசதிக்கு தோனியை பயன்படுத்தி கொண்ட போது தோனி தன் வசதிக்கு (அணியின் வெற்றிக்காக) அவர்களை பயன்படுத்தி கொண்டதில் என்ன தவறு.
அதே சீனியர்கள் தான் விவிஎஸ் ஒரு உலகக்கோப்பை வாய்ப்பு கூட வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Super blog
ReplyDeleteThank u
Delete