Friday, 12 June 2026

தனியார் நகரப் பேருந்துகளின் பயணச்சீட்டு

திருநெல்வேலியை பொறுத்தவரை 90களில் விதவிதமான பெயர்களில் தனியார் பேருந்துகள் உண்டு. வேறு வேறு பெயர்களில் இயக்கினால் வரி குறைவு (உண்மை நிலவரம் தெரியவில்லை) என்பதால் அப்படி இயக்குவார்களாம். ஒவ்வொரு பேருந்திலும் அந்தப் பேருந்து பெயரில் பயணச்சீட்டு தருவார்கள். 


எங்கள் ஊர் பஸ் எப்சி சென்றால் எஸ்எஸ்எம்எஸ் டூரிஸ்ட் பஸ் ஸ்பேர் பஸ்ஸில் வரும். அப்போது எஸ் எஸ் எம் எஸ் டிக்கெட் தருவார்கள். 

ஒவ்வொரு கம்பெனி பேருந்துகளின் பெயர்கள். 

சீதாபதி கம்பெனி - SBC, ABC, SSMS

இன்னொரு சீதாபதி கம்பெனி - Antony, SST, SSR, SRS, SK

ஞானமணி - MGG, GMT, ADJ

ஆண்ட்ரூஸ் - ST. ANDREWS (AMS) , SPM, SPR

தனபால் - DPT, DPR, DANIEL, DHANAPAUL, DHANAPERINBAM, DSR, IMPERIAL

இது போக இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் வைத்திருந்த கம்பெனிகள் SGKR, LION, MPR, ARG, TPC ராஜா, JRT, VISWAM என இருந்தன. 


இதில் டேனியல் பஸ் டிக்கெட் DT என்றும், இம்பீரியல் பஸ் டிக்கெட் IR என்றும், தனபால், தனபேரின்பம் பஸ் டிக்கெட் DT என்றும், விஸ்வம் பஸ் டிக்கெட் KVV என்றும், ஆண்டனி பஸ் டிக்கெட் AT என்றும் இருக்கும். 

தற்போது திருநெல்வேலியில் தனியார் பேருந்துகள் கணிசமாக குறைந்துவிட்டன. ஷேர் ஆட்டோ புதிதாக விட்ட காலத்தில் அதிலும் டிக்கெட் கொடுத்தார்கள். தற்போது கிட்டத்தட்ட எல்லா பேருந்துகளிலும் மிஷின் டிக்கெட். அதில் தேதி, ஸ்டேஜ் என எதுவும் இருக்காது. 10 ரூபாய் என்று மட்டுமே இருக்கும். 

தற்போது ADJ, கிருஷ்ணவேணி, ஸ்ரீராமஜெயம், வேணி (PKT), ரெகோபாத், ANTONY பேருந்துகள் மட்டுமே வண்ண பயணச்சீட்டுகள் இன்னும் தருகிறார்கள். இவர்களும் விரைவில் மிஷினுக்கு மாறலாம். 


வண்ண வண்ண பயணச்சீட்டுகளின் நினைவுகள் மட்டுமே மாறாதவை.