Wednesday, 29 February 2012

கடவுளிடம் நான் கேட்கும் 7 வரங்கள்


நீ  என்  கையை  பிடித்து
கொண்டு  கால் நனைக்கும்
கடற்கரை  வேண்டும் !

நீ  உன்  சேலை
தலைப்பால்  என்  தலை
துவட்டும்  மழை நாள்  வேண்டும் !

நீ  என்  சமையலை
கைகட்டி  ரசித்து  கொண்டிருக்கும்
ஞாயிற்று  கிழமைகள்  வேண்டும் !

நீ  என்  பின்னால்
ஒட்டிக்கொண்டு  நான்  கரப்பான் பூச்சியை
அடிக்கும்  போர்க்களம்  வேண்டும் !

நீ  என்னை
பாராட்டி  பரிசளிக்கும்
திகட்டாத    முத்தங்கள்  வேண்டும் !

நீ  கையில்  காபியுடன்
என்னை  எழுப்பும்  
காலைபொழுதுகள்  வேண்டும் !

நீ  கிசுகிசுப்பான  குரலில்
காதல்  மொழி பேசும் 
வெண்ணிற இரவுகள்  வேண்டும்!  

Tuesday, 28 February 2012

Natpoo


வாழ்வின்  காயங்களை  
ஆற்றும்  மருந்து  
நட்பில்தான் வாய்த்திருக்கிறது!

உதடுகளில்  கெட்டவார்த்தையை
உபயோகித்தாலும்  உள்ளத்தில்
புன்னைகைக்கும் இயல்பு
நட்பில்  மட்டுமே!

பாசம்  ரத்தத்தில்  கலந்திருக்கிறது

காதல்  இதயத்தில்  இயங்குகிறது

இதயத்தை  இயக்கி  இரத்தத்தை
சுத்தபடுத்தி உயிரோட்டத்தில்
உறைந்து  கிடக்கிறது  நட்பு !

மலரும்  உதிரும்  பூக்களுக்கு
மத்தியில்  நட்பு  மட்டுமே
ம(கு)ம்  மாறாத பூ!

Wednesday, 15 February 2012

படித்ததில் பிடித்தது

மனப்பாடம் செய்து கொண்டுஇருக்கிறேன்
எனது பெயரை
நீ கேட்டால் மறக்காமல்
சொல்லவதற்கு!

Wednesday, 8 February 2012

Thevathai

எப்படி தொலைத்தேன்
என்னை
அப்படியே பின்னோக்கி
பார்க்கிறேன் !

கவனமாய் பயணித்த
நான் எங்கே
வழுக்கினேன்
அவள் கால் கொலுசிலா?

எண்ணங்கள் நிறைந்த
என் வாழ்வில்
வண்ணங்கள் வந்தது
எப்போது ?

அவள் காது மடலில்
கவிதை பாடும்
"ஜிம்மிகி" இடம்  நான்
என்னை இழந்தேனா?

அசுர கதியில் இருந்த
நகர வாழ்க்கையில்
தென்றல் வந்தது
என் தெருவிலா?

மனசு மரத்து போன
என்னிடம்
மயிலிறகால் வருடி
எழுத்தை பிடுங்கி
கொள்பவள்
என் இதய தேவதையா?

I miss u

இரண்டாம் வகுப்பில்
நான் கேட்ட சிவப்பு
சட்டை பண்ணிரட்டாம்
வகுப்பில் கிடைத்த போது
சந்தோசப்பட்டேன் !

பள்ளியில் நான் தொலைத்த
நண்பர்கள் பட்டாளத்தை
கல்லூரியில் பெற்ற போது
மகிழ்ச்சி அடைந்தேன் !

வேலை இல்லா
நாட்களில் என்னை
தேடிய பொழுதில்
வேலை கிடைத்த போது
வெகுமதி அடைந்தேன் !

குடும்பத்தை பிரிந்து
சென்னையில் இருக்கும்
நான், கையில் வைத்த
மருதாணியில்
அம்மாவின் வாசத்தை
நுகர்வேன்!

தலையணை எனக்கு
தருவதில்லை தாய்மடி
சுகத்தை !

சொந்தமாய் இருந்தும்
என்னால் அனுபவிக்க
முடியவில்லை
வாய் காலையும், வயற்காட்டையும் !

எதற்காகவோ
எதையெதையோ
இழந்திக்கிறேன்

எனதுயிரே
எதற்காகவும்  உன்னை
என்னால்
இழக்க முடியாது !

My proposal

அடைமழை பெய்து
வெறித்தது போல உள்ளது
இன்னும் வீட்டின் முகப்பில்
இருந்து சொட்டி கொண்டுஇருக்கிறது
மழைத்துளி!

காற்றில் மாட்டி கொண்ட
ஜன்னல் கதவாய்
சம்பவம் என் முன்னே
நிழலாடுகிறது!

தேவதை நடக்கும்
தெருவே என்னை
கிண்டல் செய்கிறது
காதலை சொல்ல
தெரியாதவன் என்று!

கடந்த சில வாரங்களாக
சந்தோசமாய் இருந்தேன்
துக்கத்தையும் தூக்கத்தையும்
சேர்த்து தந்து விட்டாய்
அயர்ந்து தூங்கிவிட்டேன்
அசராமல் உன் நினைவுகள்!

தொடர்கிறது
உனக்கான கவிதைகள்
மிச்சமிருக்கிறது
என்னிடம் காதல்!

எழுத்தின் மீது
நம்பிக்கை வைத்தவன்
என்னவளின் மனதை
அறிய மறந்துவிட்டேன்!

Kathal

காதலுக்காக அலைந்த
கல்லூரி பருவம் போய்
வேலை தேடும் படலம் முடிந்து
பணியாற்றி  கொண்டுஇருக்கும் போது
என் பார்வையில் பட்டுவிட்டாய்!
பட்டென்று வரவில்லை
என் காதல்
பல முறை பார்த்த பின் தான் வந்தது!
எட்டரை மணியை தாண்டியும்
நீ பேருந்து நிறுத்தம் வரவில்லை
என்றால் என் மனம் கனக்கிறது !
நீ வரும் தெருவில் ஓரமாய் நிற்கும்
என் மீது உன் பார்வை  பட்டால்
என் மனம் மிதக்கிறது!
என் மனதோடு தான் எத்தனை
அறிவியல் அதிசயம்!
பேருந்து நிறுத்தத்தில் நீ நிற்கும்
இரண்டு நிமிடத்தில்
பேருந்தையும் பார்த்து கொண்டு
உன் மீது காதல் பார்வை வீச
வேண்டி உள்ளது
கடவுளுக்கு தான் எத்தனை
கல் நெஞ்சம்!
காதலை தயக்கமில்லாமல்
தாராளமாய்  சொல்ல valentine

உருவாக்கி தந்த toll free
தினமும் வேலை நாள் அல்ல
ஞாயிற்று கிழமை
சரி , என் காதல் 
பூஜைக்கு செல்லாத
புது மலர் !