Friday, 12 September 2025

பெசன்ட் நகர் | 5E | வடபழனி

சந்தானம் காமெடியில் 5ஈ வருமா என்று ஒருவர் கேட்பாரே. அந்த 5ஈ பேருந்தைப் பற்றிய பதிவு தான் இது.
பெசன்ட் நகரில் இருந்து வடபழனி செல்லும் நகரப் பேருந்து. ஆனால் இதன் பயண தடம் நிறைய இடங்களை தொட்டு செல்லும்.

பெசன்ட் நகரில் ஆரம்பித்தால் வண்ணாந்துறை, அடையார் டிப்போ, அடையார், மத்திய கைலாஷ் என பயணிக்கும். சென்னையின் முக்கிய சிக்னல் மத்திய கைலாஷை கடந்து அண்ணா பல்கலைக்கழகம், ராஜ் பவன் கடந்து அண்ணா சாலையில் இணைந்து கொள்ளும்.

சின்னமலை, சைதாப்பேட்டை கடந்து தி.நகர் செல்லும் சாலையில் பயணிக்கும் தி.நகர் செல்லுமா என்று நினைத்தால் அப்படியே இடது பக்கம் திருப்பி கண்ணம்மா பேட்டை, சிஐடி நகர் வழியாக பயணிக்கும்.

அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தண்டவாளத்தை தாண்டி, ஸ்ரீனிவாசா தியேட்டர், மேட்டுப்பாளையம் வழியாக அசோக் நகர் வந்தடையும். உதயம் தியேட்டர் வந்ததும் அடுத்து வடபழனி தான் என்று நினைத்தால் இடது புறம் திரும்பி கேகே நகர், எம்ஜிஆர் நகர் சென்று சிவன் பூங்காவின் இருபுறமும் சுற்றி லட்சுமன் சுருதி சிக்னலில் நெடுஞ்சாலையில் இணைந்து வடபழனி பேருந்து நிலையத்தை அடையும். 

இந்தப் பேருந்தை பொறுத்தவரை சென்னையின் பணக்காரர்கள் வாழும் பகுதி, ஏழைகள் வாழும் பகுதி இரண்டையும் கணிசமாக கடக்கும் பேருந்து. 5ஈ பேருந்துகளில் தாழ்தள சொகுசுப் பேருந்து கிடையாது. எல்லாமே சாதாரண கட்டணப் பேருந்துகள். 



பெசன்ட் நகரில் இருந்து யாராவது வடபழனி செல்ல இந்தப் பேருந்தை பயன்படுத்துவார்களா என்றால் நிச்சயம் இருக்காது. 


No comments:

Post a Comment