Wednesday, 29 February 2012

கடவுளிடம் நான் கேட்கும் 7 வரங்கள்


நீ  என்  கையை  பிடித்து
கொண்டு  கால் நனைக்கும்
கடற்கரை  வேண்டும் !

நீ  உன்  சேலை
தலைப்பால்  என்  தலை
துவட்டும்  மழை நாள்  வேண்டும் !

நீ  என்  சமையலை
கைகட்டி  ரசித்து  கொண்டிருக்கும்
ஞாயிற்று  கிழமைகள்  வேண்டும் !

நீ  என்  பின்னால்
ஒட்டிக்கொண்டு  நான்  கரப்பான் பூச்சியை
அடிக்கும்  போர்க்களம்  வேண்டும் !

நீ  என்னை
பாராட்டி  பரிசளிக்கும்
திகட்டாத    முத்தங்கள்  வேண்டும் !

நீ  கையில்  காபியுடன்
என்னை  எழுப்பும்  
காலைபொழுதுகள்  வேண்டும் !

நீ  கிசுகிசுப்பான  குரலில்
காதல்  மொழி பேசும் 
வெண்ணிற இரவுகள்  வேண்டும்!  

No comments:

Post a Comment