ஊரில் இருந்து சென்னைக்கு
கிளம்புகிறேன்
பேருந்து நகரை தாண்டிவிட்டது
தூக்கம் வருகிறது !
அசந்து தூங்கவில்லை
கையை மடித்து முகமருகே
முட்டு கொடுக்கிறேன்
தீபாவளிக்காக கையில் வைத்த
மருதாணியில் அம்மாவின் வாசம்!
சாப்பிட எழுந்தேன்
பார்சலில் தொட்டு கொள்ள
இருக்கும் ஊறுகாயில்
அக்காவின் பாசம் !
மீண்டும் தூங்க முயல்கிறேன்
குளிர்கிறது போர்த்திகொள்கிறேன்
சால்வையில் அப்பாவின் அரவணைப்பு !
அலைபேசி குறுந்தகவலில்
அண்ணனின் நட்பு !
அதிகாலையில் தேநீர்
பருகுகிறேன்
தாத்தாவின் நினைப்பு !
சொந்த ஊரில் சின்ன சின்ன
விஷயங்களும் சந்தோசம் தான்
ஆனால்,
சென்னையில்
கண்டக்டர் அருகில் நிற்கும்
என்னிடம் டிக்கெட் எடுக்க
சொல்லும் அழகான பெண்ணின்
Excuse me மற்றும் தேங்க்ஸ் தான்
No comments:
Post a Comment