Thursday, 1 March 2012

காதல் என் காதல்


யார்  யாரிடமோ
சொல்கிறேன்
நீ  என்  தேவதை  என்று !
உன்னிடம்  காதலை  
சொல்லத்தான்  
என்னால்  முடியவில்லை!

காதலை  அடிக்கடி
எழுதுகிறேன்
மனது  முழுக்க  இருப்பது
நீயா?  உன்  காதலா?
எனக்கே  தெரியவில்லை!

பூக்களை  விட்டுவிட்டு
ரோஜா  செடியுடன்
பேசி  கொண்டுஇருக்கிறேன்!
உன்னை  கண்டபின்  பூக்களின்
புன்னகை  புரியவில்லை!

நீ  இல்லாத  போதும்
நீ  நிற்கும்
பேருந்து  நிறுத்தத்தை
ரசிக்கிறேன் !

கடவுளிடம்   நான்  பேசிய
உடன்படிக்கை  மாறி
கொண்டே  இருக்கிறது !
நீ  என்  காதலியாக
வேண்டும்  என்றேன்!
நீ  என்  மனைவியாக
வேண்டும்  என்றேன் !
எப்போது  கேட்கிறேன்
நீ  என்  இன்னொரு  தாயாக
வேண்டும்  என்று!

No comments:

Post a Comment