வாழ்வின் காயங்களை
ஆற்றும் மருந்து
நட்பில்தான் வாய்த்திருக்கிறது!
உதடுகளில் கெட்டவார்த்தையை
உபயோகித்தாலும் உள்ளத்தில்
புன்னைகைக்கும் இயல்பு
நட்பில் மட்டுமே!
பாசம் ரத்தத்தில் கலந்திருக்கிறது
காதல் இதயத்தில் இயங்குகிறது
இதயத்தை இயக்கி இரத்தத்தை
சுத்தபடுத்தி உயிரோட்டத்தில்
உறைந்து கிடக்கிறது நட்பு !
மலரும் உதிரும் பூக்களுக்கு
மத்தியில் நட்பு மட்டுமே
ம(கு)ணம் மாறாத பூ!
No comments:
Post a Comment