அபு வீட்டு விழாவில் நண்பர்கள் சந்திப்பு.
சென்னையில் இருந்து ஃசெப் கௌஷிக் தாடியுடன் விஜய் வந்திருந்தான், மனைவி மகள்களோடு. மகள்கள் இருவரும் குட்டி தேவதைகள்.
காலர் இல்லாத சட்டையுடன் கனடா இறக்குமதி டேனி, டக் இன் பண்ணலைன்னா பிடி வாத்தியார் திட்டுவார் என நினைத்து வந்த செல்வகுமார், கன்னம் வீங்கி கார்த்தி மனைவியுடன் வந்திருந்தான். முறைத்த பார்வை, முரட்டு ரியாக்சன்களோடு தர்மா, வேல்குரோ வேட்டியோடு முகத்தில் முடி grow ஆகாத அபுதாஹீர். இவர்களோடு நானும்.
மீசை முளைக்க துவங்கிய காலத்தில் அறிமுகமான கல்லூரி நண்பர்களோடு, தாடியும் நரைக்க துவங்கிய காலத்தில் பேசிக் கொள்வதில் என்ன சுவாரஸ்யம். சில மணி நேரங்கள் அவரவர் அலுவல்களை மறந்து விட்டோம்.
அபு மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டாள், அபு மகன் வேட்டி கட்டி திரிகிறான். 20 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள். ஒன்றாக அமர்ந்து பேசி, ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக அமர்ந்து கதை பேசி, ஒன்றாக புகைப்படம் எடுத்து மகிழந்தோம்.
எல்லாருக்கும் வேவ்வேறு வடிவங்களில் தொப்பை, அபுவுக்கு இல்லை. ஆனால் வாய் ஒரு இடத்தில் நிற்கவே இல்லை.
விஜய் அந்த மண்டபத்தின் சீலிங் டிசைன் பத்தி விளக்கினான். நாங்க மெக்கானிக்கல் இஞ்சினியர்கள் என்ற பெருமிதம் வந்தது.
அவரவர் அலுவல்களை நோக்கி திரும்பி விட்டோம். மீண்டும் என்றாவது சந்திப்போம்.

No comments:
Post a Comment