உயிரோடு இருக்கும் போது
சோறு போடாதவர்கள்
இறந்த பின்
கொள்ளி போட வந்தார்கள்!
உயிரோடு இருக்கும் போது
பட்டினி போட்டவர்கள்
அவர் போட்டோ மாட்டி
போட்டு வைக்கிறார்கள்!
என்னிடம் பொடி வாங்க
அவர் 2 ரூபாய் கேட்டபோது
என் மனம் வலித்தது
பத்து ரூபாய் குடுக்காத
பத்து ரூபாய்க்கும் பட்டணம் பொடி
வாங்கி போடுவார் என்று
கனவில் வந்த ஆச்சி
சொல்லிருந்தாள்!
மீண்டும் கனவில் வந்த
ஆச்சி பொடி வாங்க
ஏன் 2 ரூபாய் குடுத்த? என்றாள்
அவருக்கு உன்கிட்ட வரணும்னு
ஆசை வந்திருச்சு என்றேன்
அப்போது அவள் முகத்தில்
வந்த வெட்கம்
அவள் அவரோடு வாழ்ந்த
57வருட வாழ்வை சொல்லியது!
தாத்தா தெருமுனையை
கடக்கிறார்.
நான் வீசி எறிந்த
மலர்சரமும், இனிப்புகளும்
அவர் ஆச்சியோடு
சந்தோசமாக இருப்பார்
என்ற மகிழ்ச்சியில்
என்பது எனக்கும்
கனவில் வந்த
ஆச்சிக்கும் மட்டுமே
தெரிந்த உண்மை !
உயிரோடு இருக்கும் போது
சோறு போடாதவர்கள்
இறந்த பின்
கொள்ளி போட வந்தார்கள்!
உயிரோடு இருக்கும் போது
பட்டினி போட்டவர்கள்
அவர் போட்டோ மாட்டி
போட்டு வைக்கிறார்கள்!
என்னிடம் பொடி வாங்க
அவர் 2 ரூபாய் கேட்டபோது
என் மனம் வலித்தது
பத்து ரூபாய் குடுக்காத
பத்து ரூபாய்க்கும் பட்டணம் பொடி
வாங்கி போடுவார் என்று
கனவில் வந்த ஆச்சி
சொல்லிருந்தாள்!
மீண்டும் கனவில் வந்த
ஆச்சி பொடி வாங்க
ஏன் 2 ரூபாய் குடுத்த? என்றாள்
அவருக்கு உன்கிட்ட வரணும்னு
ஆசை வந்திருச்சு என்றேன்
அப்போது அவள் முகத்தில்
வந்த வெட்கம்
அவள் அவரோடு வாழ்ந்த
57வருட வாழ்வை சொல்லியது!
தாத்தா தெருமுனையை
கடக்கிறார்.
நான் வீசி எறிந்த
மலர்சரமும், இனிப்புகளும்
அவர் ஆச்சியோடு
சந்தோசமாக இருப்பார்
என்ற மகிழ்ச்சியில்
என்பது எனக்கும்
கனவில் வந்த
ஆச்சிக்கும் மட்டுமே
தெரிந்த உண்மை !
No comments:
Post a Comment