மறுகால்
கீழ பிள்ளையார் குளத்தின் கிழக்கு பகுதி. சென்னை 28 படத்தில் “சுண்ணாம்பு
கால்வாய்” என்று சொன்னால் கோபப்படுவார்களே அதே போல் தான் இங்கு
உள்ளவர்களும் “மறுகால்” என்று சொன்னால் கோபப்படுவார்கள். மறுகால் என்றால்
குளம் நிரம்பி மறு பக்கம் பாயும் இடம் இதில் கோபப்பட என்ன இருக்கிறது?.
மறுகால் என்று உச்சரிக்கும் தொனியில் எதோ சிறுபான்மையினர் என்ற நக்கல் இருப்பது தான் இந்த கோபத்திற்கு காரணம். மற்றபடி மறுக

ால் மக்களின் மனம் வெள்ளை.
மறுகாலின் பெயர்
இங்கு வீடுகள் கட்ட தொடங்கிய புதிதில் பெயர் வைக்க ஆலோசனை செய்த போது ஊரில் பெரியவரான தனுஷ் கோடி என்பவர் நினைவாக தனுஷ் கோடி நகர் என்று வைக்கப்பட்டது. இது நடந்தது 70 களின் இறுதியில் / 80 களின் தொடக்கத்தில்.இப்போது புதிதாக உருவாகி வரும் ரியல் எஸ்டேட் நகர்களுக்கு எல்லாம் எங்கள் ஊர் முன்னாடி.”தனுஷ் கோடி” அவர்களின் சமாதி இந்த ஊரில் தான் உள்ளது.
சிறப்பம்சங்கள்
தொளுவடி கிணறு
ஊரில் தண்ணீர் பஞ்சம் வந்த போது மொத்த மறுகாலுக்கும் தண்ணீர் சேவை செய்தது இந்த கிணறு தான்.
கசமாடன்
அந்த கால ராஜாவுக்கு தண்ணீர் மறுகால் ஓடை வழியாகத்தான் சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை தண்ணீரை மறுகால் பகுதியில் நின்று காவல் காக்க நியமிக்க பட்ட காவலாளி தான் கச மாடன்.ஒரு நாள் தண்ணீரில் எதோ பூச்சியோ புழுவோ மிதந்து வர, ராஜா கோபத்தின் உச்சிக்கு சென்று பணி செய்ய தவறியதாக சொல்லி கச மாடனை சிர சேதம் செய்தார். கச மாடன் இன்றும் ஓடை அருகில் தெய்வமாய் இருப்பதாக தகவல்.
கச மாடன் நினைவாக நின்ற மரம் சாய்ந்து விட்டது.ஆனால் இன்றும் சேவல் பலியும் பான காரமும் கச மாடனுக்கு படையலாய் கொடுக்கபடுகிறது.
கற்பக விநாயகர்
கற்பக விநாயகர் வேறு ஊரில் இருந்து திருடப்பட்டு எங்கள் ஊருக்கு வந்தவர். முதல் கும்பாபிஷேகம் 2005 இல் நடந்தது. வருடம் தோறும் வருஷாபிஷேகம் நடை பெற்று வருகிறது. இவர் வந்த பின் தனுஷ் கோடி நகரில் கணேஷ் என்ற பெயர் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது இவருடைய ஸ்பெஷல்.
மீண்டும் சந்திப்போம்
என்றும் சிநேகமுடன்
சு.பழனி செல்வகுமார்

No comments:
Post a Comment