உனக்கு
என்ன பிடிக்கும் என்றாய்
எனக்கு
உன்னை பிடிக்கும் என்றேன்
சிரித்துவிட்டு
உனக்கு
உண்ண என்ன பிடிக்கும்?
என வினவினாய்.
உன் கையால் தந்தால்
விஷம் கூட பிடிக்கும் என்றேன்
!
இப்போது
இப்படி தான் சொல்வாய்
திருமணமான
பின்
நான் வைக்கும் ரசத்தையும்
விஷம் என்பாய் !
உண்மையை
சொல்
உனக்கு
ரசம் வைக்க
தெரியுமா?
எனக்கு
கொஞ்சம் கொஞ்சம்
சமைக்க
தெரியும் என்று
கொஞ்சி
கொஞ்சி சொன்னாய்!
உனக்கு
சமைக்க....
என்று நீ தொடங்கும்முன்
சத்தியமா
தெரியாது என்றேன்
நான் கத்து தர்றேன் என்றாய்
நீ முதல்ல கத்துக்கோ
அப்புறம்
நான்...
அடுத்த
அழைப்பில்
எனக்கு
மஞ்சள் நிறம் பிடிக்கும் என்றாய்
எனக்கு
நீல நிறம் பிடிக்கும் என்றேன்!
நான் கேட்கவே இல்லையே என்றாய்
சொல்லனும்னு
தோணிச்சு என்றேன்
ஏன் இப்படி வழியுற என்றாய்
எவளோ ஒருத்தியிடம் நான்
வழியவில்லை
என்னவளிடம்
வழிதலில்
என்ன தவறு என்றேன்!
நல்லா பேசுற என்றாய்
நீ நல்லா சிரிக்கிற என்றேன்
போன்ல நான் சிரிக்கிறது
எப்படி
உனக்கு தெரியும் என்றாய்
இருவர்
ஒன்றானால் தெரியும் என்றேன்!
உன்னுள்
நான் வந்துவிட்டேனா? என்றாய்
என்னுள்
நீ இல்லை
நானே நீ என்றாகி
சில தினங்கள் கடந்துவிட்டது என்றேன் !
என்னை நான் மற்றொரு
அழைப்பில்
சந்திக்கிறேன் என்று
அலைபேசி
அழைப்பை துண்டித்தாய்!
மற்றொரு
அழைப்பில் சிந்திப்போம்
என்றும்
சிநேகமுடன்
பழனி செல்வகுமார்
No comments:
Post a Comment