Tuesday, 27 August 2019

இதய தேவதையின் பிறந்தநாள் 28-8-19

ஜிமிக்கி போட்ட
பெண்கள் தான் அழகு
என்பார்கள்
சாதாரண கம்மலிலே
பேரழகு நீ !

மல்லிகை சூடிய
மங்கையர் தான் அழகு
என்பார்கள்
பூவே சூடாத பூ
நீ கொள்ளை அழகு!

சேலை அணிந்த
பெண்கள் தான் அழகு
என்பார்கள்
சுடிதார் அணியும்
நீ என்றும் அழகு!

திருமணமானால் அழகு
குறையும் என்பார்கள்
நீ என்றும்
ஒளி வீசும் வைரம்!!!



No comments:

Post a Comment