Friday, 13 September 2019

மாநகரத்து மலர்

மகிழ்ச்சியை மறந்துவிட்டு
மன நிம்மதி இல்லாமல்
மருகும் மாநகர மக்களிடையே
மலர்ந்த மலர்கள் நாங்கள்!

காலை வெயிலில்
விரிந்து கொள்வோம்
மாலை மழையில்
நனைந்து கொள்வோம்
இடி, மின்னல், காற்று
தூசி எதையும் பார்த்து
கலங்குவதில்லை.
ஒவ்வொரு நிமிடத்தையும்
அனுபவித்து வாழ்கிறோம்!!!

No comments:

Post a Comment