மருத்துவத்திற்கு மானூர்
செல்வதே எங்களுக்கு
சுற்றுலா!
புரட்டாசி மாத சனிக்கிழமையில்
நெல்லையப்பர் கோவிலுக்கு
சென்று விட்டு
ஒரு சினிமா பார்த்து
வருவது ஆண்டிற்கொரு முறை!
மானூர் அம்பலம் என்றால்
அம்பலவாணரை விட
அதிகம் சந்தோசப்படுவது
நாங்கள் தான் !
நகர பேருந்து
SBC-46 எங்கள் வாழ்வின்
ஒரு அங்கம் !
குச்சி ஐஸ், மொச்சை பயறு
கொய்யா பழம்
சைக்கிள்லில் வருபவரிடம்
நெல்லை கொடுத்து
வாங்கி கொள்வோம்!
வயல்வெளிகளை விட்டு
ஆண்கள் கல்குவாரி
பக்கம் சென்ற போது
பெண்கள் பீடி தட்டில்
தஞ்சம் அடைந்தனர்!
அதற்கு பின்
லாரி ஓட்டுநராகி
வெளியூருக்கு செல்ல தொடங்கினர்.
இன்று வெளி நாட்டிலும்
கால் பதித்து விட்டனர்!
ஓலை குடிசைகள்
காரை கட்டிடங்களாக
மாறிவிட்டது!
இரு சக்கர வாகனங்கள்
பெருகி விட
பேருந்து கூட்டம்
குறைந்து விட்டது!
கரட்டு காட்டிலும்
விளைநிலத்தில் காத்தடிகள்
முளைத்து விட்டன!
கள்ளு பனைமரங்கள்
குறைந்துவிட
மானூரில் மதுபான கூடம்
வந்துவிட்டது!
எங்களூரும் கிராமத்து
ஒப்பனையை
களைந்து கொண்டிருக்கிறது!!!
No comments:
Post a Comment