Friday, 12 July 2019

இந்திய கிரிக்கெட் 2019


இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள்
1. வெற்றி பெற்ற போட்டிகளில் குறைகளை களையவில்லை.

2. கோலி ரோஹித் தோனி தவிர மற்றவர்களின் ரோல் சரியாக இல்லை.
- ராகுல் இரண்டு போட்டிகளில் 4 வது பேட்ஸ்மேன். தவான் காயத்திற்கு பின் துவக்க ஆட்டக்காரர்.
- ஜடேஜா பில்டிங் மட்டுமே செய்த மேட்ச்கள் பல.

3. 4 வது ஆட்டக்காரர் மட்டுமே பிரச்னை அதுவும் தீர்ந்தது விஜய்சங்கர் 4வது  பேட்ஸ்மேன் என்றார்கள். பயிற்சி ஆட்ட முடிவை வைத்து ராகுல் 4வதாய் களமிறங்கினர். 5, 6,7 பேட்ஸ்மேன் யார் என்பதிலும் குழப்பமே மிஞ்சியது.

4.சேசிங் பலவீனம்
- சேசிங் பலவீனம் இங்கிலாந்து போட்டியில் பல் இளிக்க ஆரம்பித்ததுராய் தான் இங்கிலாந்து பலம். ராயின் பலவீனத்தை இந்தியா குறி வைக்கவில்லை.

ஆப்கான் வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் போன்ற அணிகளுடனாவது சேசிங் கை முயற்சி செய்து பார்த்திருக்கலாம்.

5.அனுபவமின்மை
முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் இருவர் அனுபவம் உள்ளவர். அடுத்த நான்கில் தோனி மட்டுமே. இது தான் மிடில் ஆர்டரில் சிக்கலை உண்டாக்கியது.

6.IPL போட்டிகள்
IPL போட்டிகளில் வெளி நாட்டு  வீரர்களுடன் விளையாடினாலும் அதனால் பலன் ஒன்றும் நிகழவில்லை. IPL போட்டிகள் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதையே சொல்லி கொடுத்தன. நிதானத்தை சொல்லி கொடுக்கவில்லை.

7.பகுதி நேர பந்து வீச்சாளர்கள்
பகுதி நேர பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் பாண்டியாவின் பந்து வீச்சு சுமையை குறைத்து இன்னும் கொஞ்சம் பேட்டிங்கில் வலுபடுத்தியிருக்கலாம்.
(ஜாதவ் வீசியது 2 ஓவர்களே)

8.ஸ்பின்னர்கள்
ஸ்பின்னர் இருவருக்கும் (குலதீப் சகால் ) பேட்டிங் சுத்தமாக வராதது பின்னடைவே.

9. தரமான ஹிட்டர்கள்
முதல் பந்திலிருந்தே அடித்து ஆடக்கூடிய ஹிட்டர்கள் (பாண்டயா தவிர ) யாரும் அணியில் இல்லை.

1 comment: