திருநெல்வேலி மக்களோடு இரண்டற கலந்தவை திரையரங்குகள். திரையரங்கு தான் திருநெல்வேலி மக்களின் பொழுதுபோக்கு. நெல்லையில் இருந்த இருக்கும் திரையரங்குகளை பற்றிய ஒரு பார்வை.
1. அசோக் தியேட்டர்
தற்போது அசோக் தியேட்டர் இல்லை. பாளை நகரில் அசோக்/அன்னபூர்ணா என்று ஒரு பேருந்து நிறுத்தமே உண்டு. ஓடி முடித்த படங்களையே திரையிட்டார்கள்.
2. அருணகிரி தியேட்டர்
நெல்லை இன்றும் இயங்கும் தியேட்டர்களில் இதுவும் ஒன்று. டவுணில் பஸ் ஸ்டாப்பில் இருந்து சற்றே தூரத்தில் இருக்கும் தியேட்டர். நெல்லையின் முதல் DTS தியேட்டர்.
3. கலைவாணி தியேட்டர்
முருகன் குறிச்சியில் இருந்த தியேட்டர். ஆபாச படத்துக்கு பேர் போன தியேட்டர்.
4. கணேஷ் தியேட்டர்
டவுணில் சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு பக்கத்தில் இருக்கும் தியேட்டர். இதன் பழைய பெயர் பாப்புலர் தியேட்டர். வயதானவர்களுக்கு பாப்புலர் தியேட்டர் என்று சொன்னால் தான் தெரியும்.
5. சிவசக்தி தியேட்டர்
ஸ்ரீபுரத்தில் வயல்வெளிகளுக்குள் இருந்த
தியேட்டர். ஒரு கட்டத்தில் ஆபாச படம் மட்டும் காட்டிய தியேட்டர். பின்பு மூடப்பட்டுவிட்டது.
6. செந்திவேல் தியேட்டர்
பாளை மார்க்கெட் பக்கத்தில் இருக்கும் தியேட்டர். ஏதாவது படத்தை பார்க்க தவறிவிட்டால் செந்தில்வேலில் பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை தந்த தியேட்டர். தற்போது புதுப்பட தியேட்டர்.
7. செல்வம் தியேட்டர்
வண்ணார்பேட்டைக்கும் முருகன்குறிச்சிக்கும் இடையில் தற்போதய ஆரெம்கேவிக்கு அருகில் இருந்த தியேட்டர். பல வெள்ளி விழா படங்கள் கண்ட தியேட்டர் இருந்த சுவடுகூட இல்லை இப்போது.
8. சென்ட்ரல் தியேட்டர்
பேருந்தில் செல்லும் போது வரிசையாய் இருக்கும் தியேட்டர்களில் என்னென்ன படம் என்று பார்ப்பது ஒரு சுகாஅனுபவம்.இன்று உருக்குலைந்து போய் இருக்கிறது நெல்லையின் முக்கிய தியேட்டர். இன்றும் கண்டக்டர்கள் கத்துகிறார்கள் சென்ட்ரல் யாராவது இறங்கனுமா என்று.
9. பாம்பே தியேட்டர்
நெல்லையின் பேமிலி தியேட்டர் . முதல் புல் ஏசி தியேட்டர். பாளை மேட்டுதிடலில் உள்ள இந்த தியேட்டருக்கு வாடிக்கையாளர்கள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள்.
10. நியூராயல் தியேட்டர்
தற்போதைய போத்தீஸ் தான் நியூராயல் தியேட்டர். வடக்கு ரத வீதியில் வசதியான இடத்தில் இருந்த தியேட்டர். எதற்காக மூடப்பட்டது என்றே தெரியவில்லை.
11. பார்வதி தியேட்டர்
நெல்லை சந்திப்பும் நகரமும் இணையும் இடத்தில் இருக்கும் வளைவுக்கு பக்கத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹால் தான் பார்வதி தியேட்டர். ரத்னா தியேட்டருக்கு எதிரில் இருந்ததால் டிக்கெட் கிடைக்காமல் போனால் வேறு தியேட்டரில் படம் பார்த்து கொள்ளலாம்.
12. பூர்ணகலா தியேட்டர்
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே ஈரடுக்கு மேம்பால பக்கத்தில் இருக்கும் தியேட்டர். கடைசி பஸ்ஸை தவறவிட்டவர்களுக்கு வரப்பிரசாதம்.
13. பேரின்பவிலாஸ் தியேட்டர்
நெல்லையில் மியூசிக்குடன் ஸ்கிரினை தூக்கிய முதல் தியேட்டர். PVT நெல்லையின் பாரம்பரியமிக்க தியேட்டர். பூர்ணகலா தியேட்டர் பின்புறம் உள்ளது.
14. ரத்னா தியேட்டர்
தாலுகா அலுவலகம் எதிரில் இருக்கும் முக்கிய தியேட்டர். முன்ணனி நாயகர்கள் படத்துக்கு எப்போதும் போட்டி போடுபவை ரத்னாவும் PVTயும்.
15.&16. ராம் முத்துராம் தியேட்டர்
நெல்லையில் புதிதாய் உதயமான தியேட்டர்கள் (பாம்பேக்கு முன்னால்) . ஒரே வளாகத்தில் இரண்டு தியேட்டர். கீழே ராம் மாடியில் முத்துராம். உடையார்பட்டியில் இருக்கும் முன்னணி தியேட்டர்கள். ராமின் முதல் படம் "மோனிஷா என் மோனலிசா ". முத்துராமின் முதல் படம் "பெரியண்ணா ".
17. லட்சுமி தியேட்டர்
டவுண் வாகையடி முக்கு பக்கத்தில் இருந்த தியேட்டர். எம்ஜிஆர் சிவாஜி படங்கள்போட்டு கொண்டு இருந்தார்கள். பின்பு ஆபாச படம். அப்புறம் மூடிவிட்டார்கள்.
நெல்லை மக்களின் திரைப்பட ரசனை அலாதியானது. திரைத்துறையில் நெல்லை மக்களின் பங்கு அதிகம். இவ்வளவு ரசனையுள்ள மக்கள் வாழும் ஊரில் ஒரு மல்டிபிளக்ஸ் கூட அடி எடுத்து வைக்கவில்லை.

No comments:
Post a Comment