வந்தார்கள் கொள்ளை அடித்து
சென்றார்கள் - வரலாறு
இவளும் வந்தாள் கொள்ளை
அடித்தாள் என் மனதை
ஆனால் மனதிலே
தங்கி விட்டாள் !
நிலவு பூமியை
சுற்றுகிறது - பௌதிகம்
என் காதல் நிலாவை
சுற்றி தான் என் நினைவுகள்!
கவிதை எழுத
இலக்கணம் தேவை - தமிழ் மொழி
என்னவளின் காதல்
முகம் கண்டால் கவிதை
கொட்டுகிறது !
தங்கத்துடன் எந்த தனிமமும்
ரசாயன மாற்றம் நிகழ்த்தாது - ரசாயனம்
என் தங்கத்தை கண்டால்
என்னுள் எக்கச்சக்க
ரசாயன மாற்றங்கள்
நிகழ்கிறது !
எப்போதும் நான் அரைகுறை
தான் - ஆங்கிலத்தில்
அலைபேசி குறுஞ்செய்தியில்
ஆங்கிலத்தை பிரித்து
மேய்கிறேன் !
எல்லா பாடத்தையும்
ஏமாற்றி விட்டது
காதல் எனும் பாடம் !
No comments:
Post a Comment