Tuesday, 9 July 2013

காளையன்


கன்று குட்டியாய் இருக்கும் 
போது தெரிந்திருக்காது 
பணக்கார முதலாளியின் 
தன்மானத்துக்காக ஜல்லிக்கட்டில் 
கலந்து கொள்வோமா இல்லை 
ஏழை முதலாளியின் 
வருமானத்துக்காக மூட்டை 
சுமப்போமா என்று !

ஆண்மையை இழந்த பின்னும் 
உணவளிபவனுக்காக உழைத்து 
கொண்டிருக்கின்றன 
காயடித்த காளைகள் !!

No comments:

Post a Comment