ஒரே நாளில் எனக்கான
உலகத்தை மாற்றியவள்
இப்போது என் உலகமே அவள்!
அவளிடம் பேசும் போதெல்லாம்
கதை கேட்கும் குழந்தை ஆகிவிடுகிறேன்!
அவளும் குழந்தையின் மனசுகேத்த
கதை சொல்லும் தாயாகி விடுகிறாள்!
எனக்கு பிடிக்காதவைகளும்
இப்போது பிடிக்கிறது
அவளை பிடித்து இருப்பதால்!
அலைபேசி குறுஞ்செய்தி
என்னவளை அருகில் அழைத்து
வந்து விடுகிறது!
அகவை என்பதிலும் எங்கள்
காதல் நிலைத்திருக்கும்.
No comments:
Post a Comment