நுரை முட்டும் கடல்
அலைகளை பார்த்துகொண்டிருந்த
தருணத்தில் நீ கேட்டாய்
என்னை எவ்வளவு பிடிக்கும் என்று !
நான் கைகளை விரித்து
இவ்வளவு என்று சொல்ல
வந்து நிறுத்தி கொண்டேன் !
கடலை கை நீட்டி
கடலளவு என்று சொல்ல
வந்து நிறுத்தி கொண்டேன் !
வானத்தை காட்டி
வானளவு என்று சொல்ல
வந்து நிறுத்தி கொண்டேன் !
‘பிடிக்கும்’ எவ்வளவு என்று
சொல்ல தெரியல என்றேன் !
நீ கண்ணீருடன் என்னை
கட்டி அணைத்தாய் !
உன் கண்ணீரில்
என் காதல் கசிகிறது !
❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete🙏
Delete