நேத்து நான் சன் டிவில அரட்டை அரங்கம் பார்த்தேன்.
அதுல புல்லா
சின்ன சின்ன ஸ்கூல் பசங்க தான் பேசினாங்க
ஒரு பையன் சொல்றான் வாத்தியார் நல்லா பாடம் நடத்தினா
நாங்க ஏன் சார் பிட் அடிக்கபோறோம் .
"அவன் பாடம் சொல்லி கொடுக்கிறவர வாத்தினு சொல்றான் ஆனா
டிவி தொகுப்பாளர சார்னு சொல்றான்.
அத பாத்துட்டு மனசு கஷ்டமா போச்சு. வாத்தியார ரோல் மாடல
நினச்ச காலம் போச்சு".
இன்னொரு மாணவன் சொல்றான் பிட் அடிக்கறது சாதாரண விஷயம் இல்ல
ஒரு வர்சம் நடத்துனத ஒரு நைட்ல முக்கியமான கேள்வி எதுன்னு பாத்து எழுதிட்டு போய்
தேர்வு கூடத்தில இருக்கிற ஆசிரியரையும் சமாளிச்சி எழுத வேண்டி இருக்குனு
வருத்தபடுதான்.
ஒரு பொண்ணு சொல்லுது எங்களுக்கு ஓட்டுரிமை இல்ல இருந்தா
மக்களுக்கு உதவுற சினிமா நடிகர்களுக்கு ஒட்டு போடுவோம்னு
அதுக்கு பதில் சொன்ன இன்னொரு பொண்ணு இவங்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தா
அடுத்த நாள் பேப்பர்ல இது தான் வரும்
அமலா பால் பால் வள துறை அமைச்சர் ஆனார். சுற்றுலா துறை அமைச்சராக
நண்பன்டா சந்தானம் பதவி ஏற்றார். அப்புறம் ஹன்சிகா, சகீலா
இவங்களுக்கும் அந்த பொண்ணு பதவி கொடுத்தது.
பெண் சுதந்திரம் எப்படி இருக்கு பாத்திகளா?
இன்னொரு பொண்ணு அட்வைஸ் பண்றகிற பேருல நிறைய
பேர் மொக்க போடுறாங்க. எங்கள எங்க போக்குல விட்டுருங்க
என்ன கொடுமை சார் இது
இன்னொரு பொண்ணு குடும்ப சூழல் எங்கள படிக்க விடல. எந்த
அப்பா அம்மாவும் படிச்சு என்ன மாதிரி வானு சொல்ல மாட்டகிறாங்க
ஏன்னா அவங்க மோசமான சூழல்ல இருகிறாங்க
[பெத்தவங்க தான் பட்ட கஷ்டத்த பிள்ளைங்க பட கூடாதுன்னு
நினைச்சா பசங்க என்ன சொல்றாங்க பாருங்க]
மீடியாக்கள் நம் சமுதாயத்தை எவ்வளவு தூரம் சீர்குலைகிறது. இது ஒரு உதாரணம் தான் இத மாதிரி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடலாம்.
இதனால் தான் என்னவோ குருவாய் பார்க்க வேண்டிய ஆசிரியரை மாணவன் குத்தி கொல்லும் சம்பவம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment