அ னாவிலும் “A” யிலும் என் கையை
பிடித்து இயக்கியவள் .
இப்போது நான் எழுதும் “A” வில்
எத்தனையோ மாற்றங்கள்
அவள் அன்பு அப்படியே உள்ளது
!
எத்தனை முறை அடித்தாலும்
மீண்டும் அவளுடன்
ஒட்டவைக்கும் காந்த சக்தி
அவளின் பாசம் !
நாகர்கோயில் கல்லூரியில் சீட்
எனக்கு கிடைத்தது
பாளையம்கோட்டை காலேஜ் நல்ல
காலேஜ் இல்லையா என்று கேட்டபோது
அவளின் தவிப்பு தெரிந்தது
!
வேலை கிடைத்து சென்னை
கிளம்பும் முன் காலில்
விழுந்து ஆசி பெரும் போதே
அழுதுவிட்டாள்!
இன்றும் என் பயணங்களில்
நினைவுகளாய் உடன் வருகிறது
அவளின் அரவணைப்பு !
அவளின் பாசத்தை பெற கடவுள் (கம்பெனி
)
எனக்கு தந்த கால அட்டவணை
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
மூன்று நாட்கள் !
அவளே தேய்த்துவிடும் எண்ணெய்
குளியலுக்காக ஒரு தீபாவளி,
சீயக்காய் வாசத்தில் அவளின் பாசம்
இருக்கும் !
வீடு முழுக்க நிறைத்திருக்கும்
சுண்ணாம்பு கோலங்களை
ரசிப்பதற்காக ஒரு பொங்கல்
!
லேசா பறக்குது மனசு என்று
திரிந்தாலும் கொடை முடிந்து
அவள் அருகில் தூங்கும் மதியம் !
சென்னை வெயிலை விரட்டி விட்டு
நெல்லை வெயிலை ரசிக்கும்
மே மாத நாட்கள் !
என்னவளை தேடும் பணியை
அவளிடம் விட்டு விட்டேன்
அதிலும் அவள் அன்பு
நிறைந்திருக்கும் !
No comments:
Post a Comment