Wednesday, 9 May 2012

அம்மாவின் அன்பு

பத்து வருடங்களுக்கு பின் 
பார்க்கும் பள்ளி நட்பு 
பேச  வார்த்தை  இல்லாமல் 
புன்னகையோடு முடிந்து 
விடுகிறது!

வதன புத்தகத்தில் (Face Book)
மகனோடு சிரிக்கிறது 
கல்லூரி காதல்!
 மிஸ்டு கால்  கொடுத்து 
இரண்டாயிரம் ரூபாய் கடன் 
கேட்கிறது கல்லூரி 
சிநேகம்!

‘ப்ரீ ‘யா இருந்தா வீட்டுக்கு 
வாடா சண்டே “ப்ரீ”யா தான் 
இருப்பேன் என்று சுருங்கி 
விட்டது  அண்ணனின்  பாசம்!

மூத்தவ  தூங்குற 
சின்னவன்   கிட்ட பேசுறையா
என்று செல் போனில் 
கரைகிறது அக்காவின் 
அன்பு!

நீண்ட நாட்களுக்கு பின் 
வீட்டுக்கு செல்லும் போது

போன  தடவைக்கு 
இந்த  தடவ  எளசுட்ட

தலைக்கு என்ன 
தேய்கவே மாட்டியா

 பத்து தோசைகளுக்கு பின்னும் 
சூடா இன்னும் ஒன்னு 
சாப்பிடுடா

முடிய வெட்டலாம் இல்ல 

மொகத்துக்கு பவுடர் 
போட்டுக்கோ   என்று 
அப்படியே உள்ளது 
அம்மாவின் அன்பு 

No comments:

Post a Comment