Wednesday, 4 April 2012

தறி கெட்டு போன தமிழ் சினிமா

தற்போதைய தமிழ் சினிமா  நம்  கலாசாரத்தை வேரறுத்து கொண்டிக்கின்றன என்பதே இந்த பதிவு
தமிழில் ராப்பு கூத்து என்ற பெயரில் ஆத்திசூடியை  கூட அசிங்கமாய் 
பாடிவிட்டனர்.
SJ சூர்யா  “காலையில் தினமும்  கண்விழித்தால்” என்று  தாயை போற்றும்  ஒரு  பாடலை  மட்டுமே  வைத்து  விட்டு  படம்  முழுக்க  இரட்டை  அர்த்த வசனங்கள் பேசினார் இப்போது  அவரை  ஓரளவுக்கு  ஓரங்கட்டி  விட்டனர்  ரசிகர்கள்

உச்ச  நட்சத்திரம்  என்று  நாம் போற்றும்  ரஜினிகாந்த்  கூட  தன் படங்களில்   இரட்டை  அர்த்த  வசனங்கள் தான் பேசுகிறார் உதாரணம்  சந்திரமுகி.

இளைய  தளபதி , மழலைகள்  கொண்டாடும்  ஹீரோ , நன்றாக நடமாடுபவர் , ஆனால்  அவரது  பாடல்கள்
“டாடி  மம்மி   வீட்டில்  இல்லை ”
“இலந்தபழம் இலந்தபழம் உனக்கு  தான் ”
 “பலானது பலானது ”

மற்ற  நடிகர்கள்   எல்லாம்  நல்லவர்கள்  அல்ல, அவர்களது  பாடல்களில் நாராசமான  வார்த்தைகள்  ஒலிக்க தான்  செய்கின்றன

அடுத்து, தமிழ்  தெரியாதவர்கள்  தமிழ்  பாடல்கள்  பாடுவது, அதாவது  ஆங்கிலத்திலோ  அல்லது  அவர்களது  தாய் மொழியிலோ  எழுதி  அதை  அப்படியே 
வாசிப்பது. 
மதராசபட்டினம்  படத்தில்
ஒரு  பாடல் சென்னையை  சுற்றிக்காட்டும்  கதாநாயகன்  வெள்ளைக்கார  கதாநாயகிக்கு  சென்னையின் பெருமைகளை  சொல்லும்  பாடல்  பாடலை  பாடியவர்  மும்பையை  சார்ந்த  உதித்  நாராயணன். 
ஏன் தமிழ் நாட்டுல  ஆள்  இல்லையா ?

அந்த  கால சினிமாக்களில்  வீட்டில்  நடக்கும்  விஷேசங்களுக்கு  குடும்பத்தினர்  
மகிழ்ச்சியுடன்  பாடுவதாய் பாடல்  வைத்தார்கள் . தற்போது  வீட்டை 
  விட்டு  ஓடி  போகும்  பெண்  படுகிறாள்  “ஓடோ  ஓடோடி  போறேன்”. 
இன்னொரு  பாடல்  “வீதி  எங்கும்  வாசனை வருதே” எத்தனை   வக்கிர  புத்தி  இருந்தால்  இப்படி  
பாடல்  எழுத  தோன்றும் ?

சதையை  நம்பாமல்  கதையை  நம்பி  ஒரு  சில  சினிமாக்கள்  வருகின்றன 
உதாரணம்   “மொழி , எங்கேயம்  எப்போதும் ”, தோனி அங்காடி  தெரு”  இன்னும்  சில …..

தணிக்கை  துறையில்  இருப்பவர்களுக்கு  தமிழ்  கெட்ட வார்த்தைகள்  தெரிவதேயில்லை . 
மயிர்  என்பது  அவர்களை  பொறுத்தவரை  கெட்டவார்த்தை  ஆனால்  வேறு  பல  கெட்ட  வார்த்தைகள்  அவர்களுக்கு  தெரியவில்லை   உதாரணம்   “வின்னர்   படத்தில்  வரும்  ஒரு  மோசமான  கெட்ட  வார்த்தை ”.

விருதுகளை  பற்றி  சொல்ல  தேவையே  இல்லை. உடல்  மொழியாலும்  முக  மொழியாலும்  நகைசுவை  செய்த  நாகேஷ்க்கு  எந்த  விருதும்  (பத்ம விருதுகள் ) இல்லை.

பிரம்மாண்டம்  
தமிழ்  சினிமாவின்  பிரம்மாண்டம்  என்பது  சாலைக்கும், நடன  கலைநர்கள்  
தொந்தியிலும்  பெயிண்ட்  அடித்து  தயாரிப்பாளர்கள்  வயிற்றில்  அடிப்பது  . “பிறக்கும்  போது ஏழையாய் பிறந்தாலும்  சாகும்  போது  ஏழையாய்  சாகதே” என்பது  பொன்மொழி .
தயாரிப்பாளர் களுக்கான  பொன்மொழி  “பிறக்கும்  போது  பணக்காரனாய்   பிறந்தாலும்  சாகும்  போது  பிச்சைகாரணாய்   சாகு”

தமிழ் தாக்கம்  

வரிவிலக்கு என்பதற்காக இவர்கள் வைத்த புற நானூற்று(வாரணம் ஆயிரம் ) 
பெயர்களுக்கும் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 
ரீ மேக் என்ற பெயரில் இவர்கள்  படங்களில் ஹிந்தி நாயகர்களின் சட்டை கலரை கூட காப்பி அடிக்கிறார்கள் .
காசுக்காகபடம் எடுப்பதால் ஆந்திராவிலும் இலங்கையிலும் போதிதர்மன் தமிழர் என்று கூட இவர்களால் சொல்ல முடியவில்லை என்ன தமிழ் பற்று?

அந்த கால கர்ணனிடம் இந்த கால நந்தா நந்திதாகளும் யுவன் யுவதிகளும் நிற்க 
முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை .

குறை கூற வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் அல்ல அதையும் தாண்டி என் அடி மனதின் தமிழ் உணர்வுகளே இந்த பதிவின் காரணம்.

தங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்

என்றும் சிநேகமுடன்
உங்கள் நண்பன் 
பழனி செல்வகுமார்    

4 comments:

  1. சதை, கதை நம்பிக்கையெல்லாம் வணிகத்திற்கு ஒரு பொருட்டல்ல.! இன்புறுதல் மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் திரைத்தளத்திற்கு நீங்கள் முன்வைக்கும் சமூக மதிப்பீடுகள் தேவையற்றவை. கதையம்சமுள்ள திரைப்படங்களையும்கூட சிறிதளவேனும் மசாலா சேர்த்தால் நன்றாயிருக்கும் என்பதாகவே வெகுஜன மனநிலையும் உள்ளது. திரைக்களத்தை கலைத்தளமாக பெயரளவில் மட்டுமே கொண்டிருக்கும் இந்திய வணிகத்தளம் தன் பிடியை விடுத்து கலையும் கருத்துமாகப் பயணிக்க ஒருபோதும் விரும்பாது. காரணம் திரைவழி அரசியல் அதிகாரத்தையே அடையும் அளவுக்கு வாய்ப்பிருப்பதும், பெருமளவு பணப்புழக்கமும் தான்.
    எந்த வியாபாரியும் விளம்பர மோகியும் தனக்கான சந்தையை இழக்க விரும்ப மாட்டான்.
    வாரணம் ஆயிரம் - ஆண்டாள் பாசுரத்தில் இடம்பெறுவது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி. திரையுலகமும் வணிகத்துறை தான்.

      Delete