Wednesday, 21 March 2012

என் காதல் சொல்ல


மனசு  முழுக்க  உள்ள
காதலை  கண்களில்
கசியவிட்டு  காத்திருக்கிறேன்
நீ  கண்டு  கொள்ளவே  இல்லை !

நான்  அமைதியாய்
உன்னை  பார்த்தாலும்
என்  மௌனத்தின்
மொழியை  நீ  அறியவே  இல்லை!

என்  சுவாசத்தில்
நீ  நிறைந்திருக்கிறாய்
என்  மூச்சு  காற்றின்  முனகலை
நீ  கேட்கவே  இல்லை !

என்  கவிதைகளுக்கு
சிறகுகள்  முளைக்கவில்லை
உன்னை  சென்றடைய
வாய்ப்பே இல்லை !

நீ  மறுத்துவிடாமல் இருந்தால்
மண்டியிட்டு  சொல்வேன்
என்  காதலை
ஒற்றை ரோஜாவுடன்!

No comments:

Post a Comment