கொலுசாய் பிறந்திருந்தால்
அவள் பாதத்தை
தொட்டு கொண்டே
அவள் செல்லும் இடமெல்லாம்
தேவதை வருகிறாள்
என்று சிணுங்கி இருக்கலாம்!
ஜிம்மிகியாய் பிறந்திருந்தால்
அவள் காதருகே
உரசி கொண்டே
தினம் தினம் ஆயிரம்
கவிதைகள் பேசி இருக்கலாம்!
துப்பட்டாவாய் பிறந்திருந்தால்
அவள் தோள் சாய்ந்து
கொண்டே
வாழ்வை ரசித்திருக்கலாம் !
மூக்கு கண்ணாடியாய் பிறந்திருந்தால்
அவள் கண்ணை
பார்த்து கொண்டே
தினம் தினம்
மகிழ்ந்திருக்கலாம் !
கேவலம்
மனிதனாய் பிறந்துவிட்டேன்
என்னவளே
என்ன செய்ய
உன் இதயத்தை தொட ?
No comments:
Post a Comment