எவளோ ஒருத்தியாய் தான்
இருந்தாய்
என் முதல் பார்வையில்
இன்று என்னவளாய்
உருமாறி விட்டாய் !
காதலே வேண்டாம்
என்று தான் இருந்தேன்
இன்று காதலை காதலிக்கிறேன்
காதலாய் நீ !
நகர வாழ்க்கையை
வெறுத்த நான்
இன்று ரசிக்கிறேன்
உன்னை பார்க்கும் தருணங்களில் !
பேருந்து பயணம்
பிடித்ததில்லை எனக்கு
இன்று விரும்புகிறேன்
உன்னோடு பயணிக்கும்
ஒரு சில நிமிடங்களுக்காக !
கனவுகளை கண்டு
பயப்பட்ட நான்
இன்று கனவுகளிலே
வாழ்கிறேன்
கவிதையாய் நீ
வருவதால் !
வாழ்வை வணங்க
போகிறேன்
நாளை வண்ணமாய்
நீ வந்தால்
வருவாயா?
No comments:
Post a Comment