தயக்கத்தால் தான்
தவறவிட்டேனா உன்னை
சிந்திக்கிறேன் !
இறக்கைகளை களைந்த
மொட்டை காத்தாடியாய்
இருக்கிறேன் நான்
சுற்றி சுழலவிட்டவள்
நீதானே!
நீ என்னை தவிர்த்து
விட்டாயா
நான் உன்னை தவற
விட்டேனா
தெரியவில்லை எனக்கு!
உன்னிடம் பேசிவிட்டேன் ,
என் காதலை
சொல்லிவிட்டேன்
ஆனாலும் மகிழ்ச்சி
இல்லை !
உன் ஒற்றை சொல்லில்தான்
எத்தனை வலி !
சிறகுகளை வெட்டி எறிந்தபின்
வண்ணத்து பூச்சிக்கு
வண்ணம் எங்கிருந்து வரும் !
என் நெற்றியின்
வியர்வையை காற்று
துடைத்து செல்கிறது
என் மனதின்
காயத்தை யார்
துடைக்க ?
No comments:
Post a Comment