ஒரு மருத்துவரின் மகன் மருத்துவர் ஆகிறான்
ஒரு விளையாட்டு வீரரின் மகன்
விளையாட்டு வீரன் ஆகிறான்
ஒரு ஆசிரியரின் மகன் ஆசிரியன் ஆகிறான்
ஆனால்
விவசாயின் மகன் விவசாயி ஆக்கபடுவதில்லை ஏன்?
என் தாத்தா முழு நேர விவசாயி
. என் அப்பா ஆசிரியர் பகுதி நேர
விவசாயி நான் பொறியாளன் (No comments)
எல்லா கூலி தொழிலாளியும் தனது மகனை நல்ல வேலையில் சேர்க்க ஆசை படுவது இயற்கை.
விவசாயம் என்பது கூலி தொழில் அல்ல
ஆதி மனிதன் முதல் இன்று வரை உணவளிக்கும் தொழில்
.
தொழில் என்பதை விட சேவை என்றே சொல்லலாம்
, மருத்துவர் காசை வாங்கி கொண்டு செய்வது சேவை என்றால் விவசாயமும்
சேவை தான்
விவசாயின் தோல்விக்கு காரணம் என்ன
?
பருவமழை பொய்த்து விட்டது . முன்பு போல் மழைக்காலம் கிடையாது. ஆடி பட்டம் தேடி போய் விதைக்க.
ஐப்பசியில் மழை பெய்கிறது, அந்த நீர் தை மாதம் வரை தாங்கும். அதனால் விவசாயி
3 மாதங்களில் விளைய கூடிய வீரிய ரகத்திற்கு செல்கிறான்.
பூச்சி கொல்லி மருந்தை அடித்து மண்ணை கெடுத்து விட்டதா குற்றம் சாட்டுகிறார்கள் இயற்கை விஞ்ஞானிகள். மண்ணை தொழிலாய் கொண்டவன்
எப்படி தெரிந்தே மண்ணை கொல்வான் அவனது அறியாமையை விளக்க
வக்கிலாத இந்த விஞ்ஞானிகள் குறை மட்டும் கூறுகிறார்கள்
அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு ஆள் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் கூலியும் அதிகம். கூலியோடு குவாட்டரும் கொடுக்க வேண்டும் என்பது இப்போதைய நியதி.
3 மாதம் நீர் விட்டு (உரம், பூச்சி கொல்லி, களை எடுத்தல்) நெற் பயிரை
காப்பாற்றினால் தான் அவன் குடும்பத்தை காப்பற்ற முடியும். ஆனால் நெல் கொள்முதல் விலை 80-100 கிலோ மூட்டைக்கு 400 முதல் 450
ருபாய். அரிசியாக்கி தொழில் அதிபர்கள் விற்கும் விலை
2000 ருபாய் (45-50 கிலோ மூட்டை).
எந்த விவசாயிக்கும் சொந்தமாய் ரைஸ் மில் வைத்து அரிசியாக்கும் வசதி
இல்லை . கடன்காரன் விரட்டும் போது குடித்து சாக மருந்து
இருக்கிறது .
விவசாயிகளுக்கு அரசு 4000௦௦௦ கோடி ஒதுக்கினால் கண்டிப்பாய் 4
ருபாய் விவசாயியை வந்தடையும். என்னனா இது ஜன (பண) நாயக நாடு.
விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் TV இலும் பத்திரிக்கைகளிலும் அழகாய்
பேட்டி கொடுகிறார்கள் .
எந்த வல்லுனரும் ஒரு விவசாய கிராமத்திற்கு சென்று இரங்கி வேலை
செய்வதில்லை .
விவசாயியும் விளைநிலத்தை விற்று மகனையும் மகளையும் படிக்க
வைக்கிறான். இன்னும் நிறைய விவசாயிகள் விற்கவில்லை ஆனால் நல்ல
விலைக்கு காத்திருகிறார்கள் .
முப்பாட்டன் சந்ததியினருக்காக பாடுபட்ட நிலத்தை காற்றாலைகாரனும் ரியல் எஸ்டேட்காரனும் எடுத்து சென்று விட்டான்.
முப்பாட்டன் மூச்சு காற்று
கண்டிப்பாய் கலந்திருக்கிறது இந்த ரசாயன காற்றில்.. இந்த மாசு பட்ட
மண்ணில் முப்பாட்டனின் வியேர்வையும் கலந்திருக்கிறது
விவசாயி மகன் பேரன்
பழனி செல்வகுமார்
No comments:
Post a Comment